ஒவ்வொரு பெண்ணும் வளர்த்துக்கொள்ள வேண்டிய அத்தியாவசியத் திறமைகள்!

தன்னம்பிக்கையுடனும் சுதந்திரத்துடனும் வலம்வர நவீன பெண்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய மிக முக்கியத் திறமைகள்.
அத்தியாவசியத் திறமைகள் | women
அத்தியாவசியத் திறமைகள் | women
எஸ்.விஜயலட்சுமி

விஜி ரவி என்கிற பெயரில் இதுவரை 40 சிறுகதைகள், 55 ஒரு பக்க கதைகள் 17 புத்தக விமர்சனங்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகளை கல்கி, மங்கையர் மலர், அவள் விகடன் பெண்கள் மலர, குங்குமம் தோழி போன்ற பிரபல இதழ்களில் எழுதியுள்ளார். மங்கையர் மலர், வைகை இணைய இதழ் அனிச்சம், ஆனந்தசந்திரிகை மின்னிதழ் சங்கப் பலகை முகநூல் குழுமம் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பங்கு பெற்று பல பரிசுகளை பெற்றுள்ளார். தோனி எஃப் எம் ல் வாரம் ஒரு முறை கதை சொல்கிறார். கல்கி இணைய இதழில் தன்னம்பிக்கை, குடும்பம் வாழ்வியல், ஆரோக்கியம் ஆன்மீகம், ஃபேஷன், உளவியல் சம்பந்தமான கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on
MM strip
MM strip

இன்றைய நவீன உலகில் காலமாற்றம், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வாழ்க்கைமுறை மாற்றத்திற்கு ஏற்ப ஒவ்வொரு பெண்ணும் தன்னம்பிக்கையுடனும் சுதந்திரத்துடனும் திகழ்வது காலத்தின் கட்டாயமாகும். குடும்பம், வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை என அனைத்தையும் சமமாகக் கையாண்டு வெற்றி பெற பெண்களுக்கு சில முக்கிய திறமைகள் அத்தியாவசியத் தேவையாக உள்ளன. நிதி சுதந்திரம் முதல் சுய பாதுகாப்பு, டிஜிட்டல் அறிவு மற்றும் சுய கவனிப்பு வரை ஒரு பெண்ணின் பரிணாம வளர்ச்சியை உயர்த்தும் அந்த 6 முக்கியமான அத்தியாவசியத் திறமைகள் என்னென்ன? அவற்றைத் தன் வாழ்வில் எப்படிப் பின்பற்றி வெற்றி பெறுவது என்பதை இந்தப் பதிவில் விரிவாகக் காண்போம்.

இன்றைய நவீன உலகில் பெண் என்பவள் குடும்பத்தை மட்டுமே பராமரிப்பவள் அல்ல; சமுதாயத்தின் ஒவ்வொரு துறையிலும் முத்திரை பதித்து வரும் ஆற்றல் மிக்கவள். காலமாற்றம், தொழில்நுட்ப வளர்ச்சி, வாழ்க்கைமுறை மாற்றம் ஆகியவற்றிற்கு ஏற்ப, ஒவ்வொரு பெண்ணும் தன்னம்பிக்கையுடனும் சுதந்திரத்துடனும் திகழ சில அத்தியாவசியத் திறமைகள் வளர்த்துக் கொள்வது அவசியம். அவை என்ன என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. நிதி மேலாண்மை மற்றும் பொருளாதாரச் சுதந்திரம்:

ஒரு பெண், தனது அத்தியாவசிய செலவுகளுக்குக் கூட கணவனை நம்பி இருக்கக் கூடாது; சொந்தக் காலில் நிற்கும் திறமை இருக்க வேண்டும். பணம் சம்பாதிப்பது மட்டுமே சுதந்திரம் அல்ல, அதைச் சரியாக நிர்வாகம் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
80 வயதில் எம்.பி.ஏ சாதனை: புற்றுநோயை வென்று வரலாறு படைத்த உஷா ரே!
அத்தியாவசியத் திறமைகள் | women

ஒவ்வொரு பெண்ணும் அடிப்படை வங்கி நடைமுறைகள், ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள், சேமிப்புத் திட்டங்கள் மற்றும் முதலீடுகள் பற்றி அறிந்திருக்க வேண்டும். அவசர காலத் தேவைகளுக்கெனத் தனியாக நிதி ஒதுக்குவது, பட்ஜெட் போடுவது, கடன் மேலாண்மை ஆகியவற்றில் தெளிவு இருக்க வேண்டும். இத்தகைய திறமைகள் இருக்கும்போது பிறரை எதிர்பார்க்காமல் வாழலாம்.

2. சுய பாதுகாப்பு:

இன்றைய சூழலில் பெண்களுக்குச் சுய பாதுகாப்பு மிக முக்கியமானது. ஆபத்து காலத்தில் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் மன தைரியத்தையும் உடல் பலத்தையும் ஒரு பெண் பெற்றிருக்க வேண்டும். அடிப்படை தற்காப்புக் கலைகளையும் கற்றுக் கொள்ளலாம்.

ஆபத்து வரும்போது தொடர்பு கொள்ள வேண்டிய 'ஹெல்ப்லைன்' எண்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பயணங்களின் போது விழிப்புடன் இருக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடித்து, பாதுகாப்பாகத் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்.

3. டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப அறிவு:

ஸ்மார்ட்போன் முதல் செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம் வரை உலகம் மிக வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அதனால் பெண்கள் அடிப்படை கணினி பயன்பாடு, மின்னஞ்சல் அனுப்புதல், ஆன்லைன் சேவைகளான டிக்கெட் முன்பதிவு செய்வது, மின்சாரக் கட்டணம் செலுத்துவது போன்றவற்றைப் பயன்படுத்தத் தெரிந்து கொள்ள வேண்டும். சைபர் பாதுகாப்பு பற்றியும் அறிந்திருக்க வேண்டும்; அப்போதுதான் ஆன்லைன் மோசடிகளில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.

அத்தியாவசியத் திறமைகள் | woman
அத்தியாவசியத் திறமைகள் | woman

4. ஆளுமைத் திறன்:

தனது கருத்துக்களைக் குடும்பத்திலும் வெளியிலும் தெளிவாகவும் தயக்கமின்றியும் வெளிப்படுத்தும் திறன் ஒவ்வொரு பெண்ணிற்கும் அவசியம் தேவை. 'இல்லை' என்று சொல்ல வேண்டிய இடத்தில் தயங்காமல் 'நோ' சொல்லப் பழகுவது மிக முக்கியம். உணர்ச்சிகளைக் கையாளும் திறன் மற்றும் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் ஆகியவற்றை வளர்த்துக் கொண்டால்தான் குடும்பத்திலும், பணிபுரியும் இடத்திலும், உறவினர்களிடத்திலும் ஒரு பெண்ணால் நல்லுறவைப் பேண முடியும்.

5. அடிப்படை வாழ்வியல் திறன்கள்:

சமையல் பெண்களுக்கு மட்டுமேயான வேலையல்ல. தன் குடும்பத்தில் உள்ள மற்றவர்களையும் சமையலிலும் வீட்டு வேலைகளிலும் ஈடுபடப் பழக்க வேண்டும். சத்தான உணவுகளை உண்டு தன் உடல்நலத்தைப் பேண வேண்டும்.

குடும்பத்தின் ஆரோக்கியத்தைப் பேணுவது போல, தன்னுடைய சொந்த உடல்நலனும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக முக்கியம். வீட்டில் உள்ள சிறு மின்சாதனப் பழுதுகளைச் சரிசெய்யத் தெரிந்து கொள்ளுதல், வாகனங்கள் ஓட்டப் பழகுதல் மற்றும் முதலுதவி செய்யத் தெரிந்து கொள்ளுதல் ஆகியவை பெண்களின் தன்னம்பிக்கையை உயர்த்தும்.

இதையும் படியுங்கள்:
இரவில் கொசுக்கள் தொல்லையா? இயற்கையான முறையில் விரட்டுவது எப்படி!
அத்தியாவசியத் திறமைகள் | women

6. தொடர் கற்றலும் சுய கவனிப்பும்:

குடும்பம், வேலை, குழந்தைகள் என எல்லாரையும் கவனித்துக் கொள்ளும் பெண், தன்னைக் கவனிக்க மறந்து விடுகிறாள். தினமும் தனக்காகச் சிறிது

நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்தல், தனக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபடுதல் போன்றவை அவளுக்கு மன அமைதியைத் தரும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். பெண் என்பவள் வீட்டின் அச்சாணி. அவள் கற்றுக் கொள்ளும் ஒவ்வொரு திறமையும் அவளுக்கு மட்டுமல்ல, அவளது குடும்பத்திற்கும் அடுத்த தலைமுறைக்கும் வழிகாட்டியாக அமையும்.

இத்தொகுப்பின் வழியே பெண்கள் தங்களின் நிதியைச் சரியாக நிர்வகிக்கவும், டிஜிட்டல் உலகில் தற்காப்புடன் பயணிக்கவும் கற்றுக்கொண்டு, குடும்பத்திலும் சமூகத்திலும் தனித்துவமான அடையாளத்துடன் தலைநிமிர்ந்து நிற்க முடியும்.

logo
Kalki Online
kalkionline.com