மாணவர்கள் செயற்கை நுண்ணறிவையே சார்ந்திருந்தால்...?

AI for students
AI for students
Published on

AI (Artificial Intelligence) என்ற பெயர் இன்றைய காலக்கட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை என்று அனைவருக்கும் பரிச்சயம் ஆகிவிட்டது. நாம் உபயோகிக்கும் ஒவ்வொரு பொருளிலும் ISI முத்திரைபோல் அனைத்திலும் AI வரத் தொடங்கிவிட்டது. குழந்தைகளின் கல்வியில் AIயின் பங்கு எப்படி இருக்கும்?

மாணவர்களுக்கு AI எவ்வாறு உதவுகிறது?

செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் தளங்கள்(AI-powered tools) மாணவர்களுக்கு உடனடி விளக்கங்கள், தனிப்பயனாக்கப்பட்ட படிப்புத் திட்டங்கள்(personalized study plans), ஆழ்ந்த கற்றல் அனுபவங்களை(interactive learning experiences) வழங்குவதன் மூலம் மாணவர்களுக்குப் பெரிதும் உதவுகின்றன.

அது சிக்கலான கணிதத்தைத் தீர்ப்பதாக இருந்தாலும் சரி; நீண்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சுருக்கி அதன் சாரம்சத்தை விளக்கும் கட்டுரையாக இருந்தாலும் சரி; AI ஒவ்வொரு மாணவர்களின் செயல்திறன் மற்றும் புரிதலை மேம்படுத்துகிறது.

கல்வியில் AIஇன் நன்மைகள்:

தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் (Personalized Learning): AI ஒரு குழந்தையின் தனிப்பட்ட கற்றல் பாணிகளுக்கு ஏற்ப தனிப்பட்ட முறையில் ஒவ்வொருக்கும் படிப்பு குறிப்புகளை (study materials) வழங்குகிறது.

இதையும் படியுங்கள்:
Chat GPTக்கு இணையான வேறு சில AI நுண்ணறிவு கருவிகள்...
AI for students

உடனடி கருத்து: AIஇல் இயக்கப்படும் தளங்கள் ஒருவரின் செயல்திறனைப் பற்றிய நிகழ்நேர திருத்தங்கள், பரிந்துரைகளை உடனடியாக வழங்குகின்றன. இதனால் மாணவர்கள் வேகமாக தங்களைத் திருத்திக்கொள்ள முடியும்.

தானியங்கி ஆராய்ச்சி உதவி(Automated Research Assistance): மாணவர்களுக்குத் தேவையான, நம்பகமான ஆதாரங்களை இணையத்தில் கண்டறிந்து தகவல்களைச் சுருக்கமாகச் சொல்ல உதவுகிறது.

மொழி மொழிபெயர்ப்பு & அணுகல்: AI கருவிகள் அவரவர்களின் தாய்மொழிக்கு ஏற்ப தகவல்களைத் தருவதோடு, குறைபாடுடன் இருக்கும் மாணவர்களுக்கும் (disabilities) ஏற்ற வகையில் தகவல்களைத் தருகின்றன.

நேர மேலாண்மை: மாணவர்களுக்கு பிரத்யேக படிப்பு அட்டவணை (study schedules) திட்டத்தைத் தந்து அவர்களைச் சிரமம் இன்றி நேரங்களைத் திறம்பட கையாள உதவுகிறது.

கல்விக்கான சிறந்த AI கருவிகள்:

ChatGPT - உடனடி விளக்கங்கள் மற்றும் ஆராய்ச்சி உதவியை வழங்குகிறது.

Copilot (Bing Chat) - நிகழ்நேர வலைத் தேடல் ஒருங்கிணைப்புடன்(real-time web search integration) விரிவான பதில்களை வழங்குகிறது.

Perplexity AI - குறிப்புகளை(references) வழங்குவதன் மூலம் மாணவர்களின் ஆழமான ஆராய்ச்சி(deep research)க்கு உதவுகிறது.

Magic School AI - பாடத்திட்ட வடிவமைப்பு, பாடத் திட்டமிடலில் ஆசிரியர்களுக்கு உதவுகிறது.

Wolfram Alpha - சிக்கலான கணிதம், அறிவியல் சிக்கல்களைத் தீர்க்கிறது

Quizizz & Kahoot! - விளையாட்டு அனுபவமுடன் மாணவர்களை ஈடுபாடுடன் கற்க உதவுகிறது.

மாணவர்களின் AI பயன்பாட்டை எப்படி கண்காணிக்கலாம்?

பெற்றோர் கட்டுப்பாட்டு பயன்பாடுகள் (parental control apps), இணையதள வரலாற்றுச் சரிபார்ப்புகள் (browser history checks) மற்றும் AI-integrated monitoring tools மூலம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் AI பயன்பாட்டைக் கண்காணிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
கூகுளின் புதிய AI தொழில்நுட்பம்… இனி மீம்ஸ் உருவாக்குவது ரொம்ப ஈசி!
AI for students

மாணவர்கள் AIஐ முழுமையாக நம்பியிருக்க வேண்டுமா?

AI ஒரு சக்திவாய்ந்த கல்வி கருவியாக இருந்தாலும் மாணவர்கள் அதை முழுமையாக சார்ந்திருப்பது அவர்களின் விமர்சனச் சிந்தனை (critical thinking), படைப்பாற்றலைத் (creativity) தடுக்கலாம்.

எனவே, AI ஐ அன்றாட கல்வி கற்கும் தலமாக எடுத்துக்கொள்ளாமல் (Don’t take this as a traditional learning method) மாணவர்கள் AIஐ ஒரு துணைப்பொருளாக (supplement) மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com