பயன் தரும் வீட்டு வைத்தியம்

பயன்  தரும்  வீட்டு வைத்தியம்

1. தினமும் ஒன்று, இரண்டு கொய்யாப் பழங்களை சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

2. இஞ்சிச் சாறுடன் சிறிது சீரகம், சிறிது மிளகுத் தூள் சேர்த்து சாப்பிட்டால் புளித்த ஏப்பம் நிற்கும்.

3. சுக்கு கலந்த வென்னீரை அடிக்கடி குடித்து வந்தால் வாயுத்தொல்லை விலகி விடும்.

4. பப்பாளிப்பாலை வெங்காயச் சாறுடன் கலந்து தடவி வர வேர்க்குருவுக்கு டாடா சொல்லி விடலாம்.

5. சீரகத்தை சிறிதளவு எடுத்து தேங்காய்ப் பால் விட்டு நன்றாக அரைத்து கட்டியின் மீது பூசி வர வேனல் கட்டி மறைந்து விடும்.

6. பூண்டுச் சாற்றில் சிறிது உப்பு கலந்து சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் தடவி வர சுளுக்கு மறையும்.

7. வெந்நீரில் நசுக்கிய கிராம்பைப் போட்டு ஊற வைத்து ரெண்டு, மூன்று முறை பருகி வர கர்ப்பிணிகளின் வாந்தி நின்று விடும்.

8. தூள் உப்பையும், நெய்யையும் சம அளவு எடுத்துக் குழைத்து சூடுபட்ட இடத்தில் தடவினால் கொப்புளங்கள் வராது.

9. சீரகத்தை வறுத்துப் பொடியாக்கி சம அளவு வெல்லம் சேர்த்து உணவுடன் கலந்து சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com