சிறுகதை: அங்கீகாரம்!

Mother and Daughter | Adoptive Mother Love
Mother and Daughter | Adoptive Mother LoveAI Image
Updated on
MM strip
MM strip

"சுவாதி! ஏன் இப்படி ஒரே பரபரப்பா இருக்க...? கல்யாணம் நல்லபடியா நடக்கும். பெரியவ கல்யாணத்தை எவ்வளவு நிதானமா சீரும் சிறப்புமா நடத்தின, இப்ப என்ன சின்னவ கல்யாணத்துக்கு இத்தனைப் பதட்டம் உனக்கு? அதுவாவது நமக்கு முதல் அனுபவம், சம்மந்தி மனுஷாளும் முன்னே பின்னே தெரியாதவங்க. அதையே ஜமாய்ச்சுப்புட்டோம். இப்ப சொந்தத்திலதானே கொடுக்கிறோம். இவங்களைப் பாத்து ஏன் இவ்வளவு பயப்படறியோ தெரியலை..." என்றார் சோமு என்கிற சோமசுந்தரம்.

"ஆமாங்க... எனக்கும் காரணமே பிடிபடலை. ஆனா ஏதோ ஒரு பயம் மனசுக்குள்ள ஓடிட்டே இருக்கு. ஒரு சின்னத் தப்பு நடந்திட்டாலும் என்னை வேற மாதிரி பேசிடுவாங்களோன்னு தோணிக்கிட்டே இருக்கு..." என்றவள் மேற்கொண்டு பேசமுடியாமல் வார்த்தைகளையும், வரவா என்று எட்டிப்பார்த்தக் கண்ணீரையும் ஒருங்கே விழுங்கினாள்.

Woman in the marriage hall | Adoptive Mother Love
Woman in the marriage hall | Adoptive Mother LoveAI Image

"ஏய்! என்ன நீ அசடாட்டம் பேசிட்டிருக்க? உன்னைப்பத்தி யார் என்ன பேச முடியும்? முதல்ல கண்ணைத் தொடை. பெரியவ மோனி கல்யாணத்தின் போது எப்படி இருந்தியோ அப்படியே இயல்பா இரு" என்று மனைவியை ஆசுவாசப்படுத்தி அனுப்பினார் சோமு.

சோமு - சுவாதி தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com