டாக்டர் புவனேஸ்வரி ராஜேந்திரன்நரம்பியல் நிபுணர்சென்னை காவேரி மருத்துவமனையில் நரம்பியல் நிபுணராக (Consultant Neurology, Neurophysiology) இருக்கும் மருத்துவர், டாக்டர் புவனேஸ்வரி ராஜேந்திரன் மங்கையர் மலர் வாசகிகளுக்காக, நரம்பு மண்டலம் சம்பந்தமான பல பிரச்னைகள் குறித்து விளக்கம் தருகிறார்..பொதுவாக வலிப்பு, மூளை சம்பந்தப்பட்ட பாதிப்பு. மூளையிலிருந்து மற்ற உடல் உறுப்புக்களுக்குத் தகவல் பரிமாற்றம் ஆகும்போது மிக நுண்ணிய மின் அதிர்வுகள் ஏற்படுகின்றன. மூளையில் அதிக அழுத்தத்தினால், அதீதமான மின்அதிர்வுகள் உண்டாகி, நரம்புகளின் வழியே மற்ற உறுப்புக்களை அடையும்போது, ஒரு வெடிப்புபோல் ஏற்பட்டு (Burst of Electrical activity) கை கால்கள் உதறத் தொடங்குகின்றன. நியூரான்கள் எனப்படும் மூளை செல்கள், இவ்வாறு அதி வேகமாக வேலை செய்யும்போது (Hypersensitive) தானாகவே, ஒருவருக்குக் கட்டுப்படுத்த இயலாத உடல் அசைவுகள் (Involuntary movements) அல்லது செயல்பாடு மாற்றங்கள் (Behavior changes) ஏற்படுகின்றன. இதை வலிப்பு (Seizure) என்கிறோம். அடிக்கடி இவை வரும்போது வலிப்பு நோய் இருப்பதாகச் சொல்கிறோம்.யாருக்கு வலிப்பு வரும் சாத்தியம் அதிகம்?உலகில் சுமார் 5 கோடி மக்கள் வலிப்பு நோயால் பாதிக்கப்படுள்ளார்கள் என்கிறது ஒரு புள்ளி விபரம். அதிலும் வளரும் நாடுகளில்தான் இந்த எண்ணிக்கை அதிகம். இந்தியாவைப் பொறுத்தவரை சுமார் ஒரு கோடிப் பேர் வலிப்பு நோய்க்கு ஆளாகி வருகிறார்கள். பெரும்பாலும் வலிப்பு நோய் குழந்தைகளையும், 65 வயதிற்கு மேற்பட்டவர்களையும் பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது. வளரும் குழந்தைகளின் மூளையில் இருக்கும் நியூரான்கள் மாற்றங்களை அடைந்துக்கொண்டே இருப்பதால் அவர்களுக்கு வரலாம். ஆனால், இதை இளம் வயதிலேயே குணப்படுத்திவிடலாம். வயதானவர்களின் மூளை மூப்புக் காரணமாகச் சற்றே சுருங்க ஆரம்பிப்பதால் அவர்களுக்கு வரும் வாய்ப்பும் உண்டு.இது எதனால் வருகிறது டாக்டர்? பிறவி நோயா?குறிப்பிட்டக் காரணம் என்று சொல்ல இயலாத நோய் இது (idiopathic epilepsy) பரம்பரையில் முன்னோர்களுக்கு இருந்தால் வருவதற்கான வாய்ப்பு உண்டு.குழந்தை பிறக்கும் சமயத்தில் ஆக்சிஜன் குறைபாடு அல்லது காயம் உண்டாவது, மரபணுக் கோளாறுகள், கருவில் சரியான மூளை வளர்ச்சியின்மை போன்றவை மூளையைப் பாதித்திருந்தால் அதன் காரணமாக வலிப்பு வரலாம்.பிறவியில் இல்லாமல் பின்னாட்களில் கூட வருமா?மூளையில் தொற்று, விபத்துக்களில் தலையில் அடிபடுதல், ஸ்ட்ரோக், மூளையில் கட்டி, நரம்புச் சிதைவு பாதிப்புக்கள் (Neuro-degenerative Disorders) இவை காரணமாக வர வாய்ப்பு உண்டு. ஆனால், சிகிச்சைகள் மூலம் கட்டுப்படுத்த முடியும்..வலிப்பு வரும் முன் ஏதாவது அறிகுறிகள் தோன்றுமா?உடலின் எந்தப் பாகத்திலிருந்து வலிப்பு ஆரம்பிக்கிறது என்பதைப் பொறுத்து, இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. பொதுவான வலிப்பு மற்றும் குறிப்பிட்ட இடத்தில் தோன்றும் வலிப்பு (Generalized seizures and Focal seizures) முதல் வகையில், மூளையின் இரண்டு பக்கங்களிலும் உடனே பாதிப்பு வரும். அனேகமாக அறிகுறிகள் இல்லாமல் திடீரென்று வரும்.ஆனால், ஃபோகல் ஸீஷர் எனப்படும் குறிப்பிட்ட இடத்து வலிப்பு உள்ளவர்களுக்கு, தலைவலி, சோர்வு, குழப்பமான மன நிலை, பதற்றம், கண்களில் கூச்சம், காதுகளில் ஏதோ குரல்... இப்படி சில அறிகுறிகள் வரலாம். அவ்விதம் வந்தால், அவர்கள் ஒரு பாதுகாப்பான இடத்திற்குச் சென்று படுத்துக்கொள்வது நல்லது.திடீரென்று வலிப்பு வந்தால், அருகில் உள்ளவர்கள் அவர்களை எவ்விதம் கையாள வேண்டும்?அவர்களை உடனே ஒருக்களித்து படுக்கவைத்து, (வாயில் எச்சில் ஊறி, நுரை வந்தால் வெளியேற சுலபமாக இருப்பதற்காக) மூக்குக் கண்ணாடி போட்டிருந்தால் கழற்றிவிட்டு, ஆடைகளைத் தளர்த்தி விட வேண்டும். தலைக்கு அடியில் ஒரு தலையணை அல்லது துணி மடிப்புக்களை வைக்க வேண்டும். சுற்றி கூட்டமாக நிற்காமல், காற்றோட்டமாக இருக்க வேண்டும்.வலிப்பு ஐந்து நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்தால், அல்லது மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருந்தாலோ மூச்சு விட சிரமப்பட்டாலோ, எமர்ஜென்ஸியாக தீர்மானித்து, உடனே ஆம்புலன்ஸ் அல்லது மருத்துவரை அழைக்க வேண்டும்.கையில் சாவி அல்லது இரும்பு சாமான் கொடுக்க வேண்டும் என்கிறார்களே...மிகவும் அபத்தம். வலிப்பு வந்தவர்கள் கையில் சாவி, கூரான இரும்புச் சாமான்கள் எதுவும் தரக்கூடாது. வாயில் அல்லது பற்களுக்கிடையே எதையும் வைக்கவோ, கைகால்களை அழுத்திப் பிடிக்கவோ கூடாது. அவருக்கு முழு நினைவு திரும்பும்முன் எதுவும் குடிக்கவோ, சாப்பிடவோ கொடுக்கக்கூடாது.எல்லோருக்கும் ஒரே மாதிரி பாதிப்புதான் இருக்குமா?இருக்காது. அவரவரின் பாதிப்பையும், எந்த இடத்தில் ஆரம்பிக்கிறது என்பதையும் பொறுத்துத்தான் இருக்கும். வலிப்பு என்றதும் நம் நினைவுக்கு வருவது, ஒருவர் சுய நினைவின்றி கீழே விழுதல், உடலில் பலமான உதறல்கள், நாக்கைக் கடித்துக் கொள்ளுதல் வாயில் நுரை தள்ளுதல் போன்றவை. இது Generalised tonic clonic seizures எனப்படும். சில வினாடிகளிலிருந்து இரண்டு நிமிடம் வரை இருக்கலாம்.ஃபோகல் ஸீஷரில், மூளையின் குறிப்பிட்டப் பகுதியில் மட்டும் அதீதமான மின் அதிர்வு ஏற்பட்டு அந்தக் குறிப்பிட்ட உறுப்பு பாதிக்கப்படுவது. ஒரு பக்க கைகால்களில் உதறல்கள் தோன்றும். உதடுகளைக் கடித்துக்கொள்வதும், ஆடைகளை முறுக்கிக் கொள்வதுமாக ஒருவித படபடப்போடு இருப்பார்கள். அந்த நேரம் பார்வை இருண்டாற்போல், செவிகளில் சத்தமின்மை போல பிரமைகள், ஒரு சிலருக்கு ஏற்படலாம்..இதற்கான மருத்துவச் சோதனைகள் என்ன?முதல் முறை வலிப்பு வந்த உடனேயே குடும்பத்தினரும் நண்பர்களும் சரியான ஒத்துழைப்பு தந்து மருத்துவரை அணுக வேண்டும். பல வித ஸ்கேன்கள் எடுக்கப்படுகின்றன. (CT scan, MRI brain scan) மூளையின் EEG (Electroencephalogram) சோதனை மூலம் வலிப்பு எத்தகையது என்று மருத்துவரால் அறிய முடியும். ரத்தப் பரிசோதனைகளும் செய்யப்படும்.வலிப்புக்கு என்னவிதமான சிகிச்சைகள் தரப்படுகின்றன?நிச்சயமாக, வலிப்பு நோயைத் தகுந்த மருந்துகள் மூலம் கட்டுப்படுத்தலாம். அனேக நோயாளிகள் மருந்துகள் மூலம் நோயைக் கட்டுப்படுத்தி இருக்கிறார்கள். நார்மலான வாழ்க்கையில் ஈடுபடுகிறார்கள். அதிலும் குழந்தைகளுக்கு வரும் வலிப்பு நோயை முற்றிலுமாக மருந்துகளால் குணப்படுத்த முடியும்.ரொம்ப முற்றியிருந்து, மருந்துகளால் குணப்படுத்த முடியாமல் இருந்தால் மட்டுமே அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டி வரலாம். ஃபோகல் ஸீஷர் பாதிப்பு வந்தவர்களுக்கு, சோதனை செய்து, எந்தக் குறிப்பிட்டப் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்து, சிலருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய நேரிடலாம். சில குழந்தைகளுக்கு, மருந்துகளோடு, கீடோஜனிக் உணவு (ketogenic diet) எனப்படும் டயட் தரப்படும். அதிகக் கொழுப்பு, குறைவான புரோட்டீன் கொண்ட, கார்போஹைட்ரேட் இல்லாத உணவு வலிப்பு நோயைக் கட்டுப்படுத்தும்.வலிப்பு நோய் ஏன் சமூகத்தில் ஒரு அச்சத்தை ஏற்படுத்துகிறது?தனக்குச் சர்க்கரை, இதய நோய் இருப்பதை எல்லாம் கூட அந்தந்த நோய் உள்ளவர்கள் வெளியில் சொல்லிக் கொள்வார்கள். இந்தப் பாதிப்பு கொண்டவர்களுக்குத் தங்கள் நோயைப் பற்றி ஒரு வெட்க உணர்வு இருப்பதால் வெளியே சொல்லமாட்டார்கள். தகுந்த விழிப்புணர்வு இல்லாததே காரணம். தங்கள் லட்சியங்களை அடையவோ, வாழ்க்கையில் முன்னேறவோ இந்த நோய் நிச்சயமாக ஒரு தடையாக இருக்காது.திருமண வாழ்வும் நார்மலாகவே இருக்கும். ஆனால், மணம் ஆகும்முன் பாதிப்பு இருப்பவர்கள், தங்களுக்குத் துணையாக வருபவரிடம் முன்னாலேயே தெரிவித்து விட வேண்டும்.பெண்கள் கர்ப்பம் தரிக்கத் தடையில்லை. ஆனால், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வலிப்புக்கான சிகிச்சையைப் பாதியில் நிறுத்தக்கூடாது. கருவிற்குப் பாதிப்பில்லாத வலிப்பு நோய் மருந்துகள் இருக்கின்றன. குழந்தை பிறப்புக்குத் திட்டமிடும்போதே மருத்துவரிடம் தகுந்த ஆலோசனைகளைப் பெற வேண்டும்.அச்சப்படவோ, வெட்கப்படவோ தேவையில்லாத பாதிப்பு இது. மருந்துகள் மூலம் கட்டுப்படுத்தி நார்மலாக வாழ முடியும்.