
அன்றாடம் நம் வீட்டுப்பெண்கள் பயன்படுத்தும் சில பொருட்களின் பயன்கள்;
ஊறுகாய்களில் ஒரு சிட்டிகை வினிகர் கலந்து வைத்தால், ஊறுகாய் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
பீங்கான் பொருட்களில் ஏற்படும் கறைகள் நீங்க, வினிகரால் தேய்த்தால்போதும். கறையும் நீங்கிவிடும், அதில் உள்ள செராமிக்கும் போகாது.
தண்ணீரில் ஒரு கப் வினிகர் கலந்து அதில் கறைபட்ட துணிகளை ஊறவைத்து துவைத்தால் கறை மறைந்துவிடும்.
வாஷிங்மெஷினில் சோப் பவுடருடன் இரண்டு ஸ்பூன் வினிகர் சேர்த்து துணிகளை துவைத்தால் துணிகள் மென்மையாகவும், நல்ல வாசனையாகவும் இருக்கும்.
3 லிட்டர் தண்ணீரில் அரை கப் வினிகர் கலந்து டைல்ஸ் தரையை துடைத்தால் தரை சுத்தமாகி பளிச்சிடும்.
ஷவர் அடைத்துகொண்டு இருந்தால் அதை கழற்றி வினிகர் கலந்த நீரில் ஊறவைத்து கழுவினால் அடைப்பு நீங்கிவிடும்.
அரை கப் வினிகர் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா கலந்து கிச்சன் சிங்க்கில் தடவி, அரைமணி நேரத்திற்கு பிறகு செய்து கழுவினால் சிங்க் சுத்தமாக பளிச்சிடும்.
வினிகர், டிஸ்டில்டு வாட்டர் சமஅளவு கலந்து ஜன்னல் கண்ணாடி கதவுகளில் தெளித்து துடைத்தால் பளிச்சிடும், சுத்தமாகிவிடும்.
பாத்திரம் கழுவும்போது சிறிது வினிகர் சேர்த்துக் கொண்டால் பாத்திரங்கள் சுத்தமாகும். கை விரல்களும் மென்மையாக இருக்கும்.
வினிகரில் உள்ள அமிலத்தன்மைதான் சுத்தம் செய்ய உதவுகிறது.
வாழைப்பழத்தோலின் பல்வேறு பயன்கள்:
வாழைப்பழம் சாப்பிட்டதும் தோலை குப்பையில் போட்டு விடாமல், பலவிதங்களில் பயன்படுத்தலாம்.
அவை: வாழைப்பழத்தோலின் உட்பகுதியை முகப்பருக்கள், வடுக்கள் மீது அழுத்தி தேய்த்துவந்தால் சில நாட்களில் பருக்கள், வடுக்கள் மறைந்துவிடும்.
காலில் முள் தைத்தால் அப்பகுதியில் வாழைப்பழத் தோலின் உட்புறத்தால் அழுத்தி தேய்த்தால், சிறிது நேரத்தில் முள் வெளியே வந்துவிடும்.
வாழைப்பழத்தோல் கால்நடைகளுக்கு சுவையான, சத்தான உணவாகும்.
வாழைப்பழத்தோல் இயற்கையில் மீத்தேன் வாயுவை உருவாக்குவதால், இயற்கை உரம் தயாரிக்க பயன்படுத்தலாம்.
வாழைப்பழத்தோலை தீயில் வாட்டி, காலில் ஆணி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால், கால் ஆணி அகன்றுவிடும்
வாழைப்பழத்தோலை அரைத்து வெள்ளி பொருட்களை தேய்த்தால் அவை சுத்தமாவதுடன், பளபளப்பாகவும் இருக்கும்.
வாழைப் பழத்தோலை பற்களில் நன்கு தேய்த்தால் பற்களின் மஞ்சள் கரை நீங்கி, பளிச்சிடும்.