ஆண்களுக்கு சவால் விட்டு வாழ்ந்த வரலாற்றின் கொடூரமான அரசி!

Wu Zetian
Wu Zetian
Published on

காலம் காலமாக உலகின் அனைத்து கலாச்சாரங்களிலும் ஆண்களின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை. ஆனால் சில பெண்கள் மரபுகளை உடைத்து அதிகாரத்தை கைப்பற்றி வரலாற்றில் அழியாத புகழ் பெற்றனர்.

சீனா 2,000 ஆண்டுகளாக ஒரே வம்ச ஆட்சியை (கிமு 220 முதல் 1911 வரை) கண்டது. மேலும் 557 பேரரசர்களைக் கொண்டிருந்தது. ஆனால், அவர்களில் ஒருவர் மட்டுமே பெண்.

சீனாவின் ஒரே பெண் அரசியான வு ஜெடியன் 624 இல் பிறந்தார் மற்றும் 665 முதல் 705 வரை டாங் வம்சத்தின் ஆட்சியாளராக இருந்தார். அரச குடும்பத்திற்கு நெருக்கமான ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்த வு ஜெடியன், புத்தகங்களைப் படிக்கவும், கல்வியைத் தொடரவும் அவரது பெற்றோரால் ஊக்குவிக்கப்பட்டார். இது அந்த காலகட்டத்தில் பெண்களுக்கு மிகவும் அரிதானதாக இருந்தது.

இதையும் படியுங்கள்:
தொங்கும் கை கொழுப்பை குறைக்க 3 ஆசனங்கள்!
Wu Zetian

அவர் பல புத்தகங்களைப் படித்து அறிவை வளர்த்துக் கொண்டார். மேலும் ராஜ்ஜியத்தின் ஒரு திறமையான பெண்ணாக மாறினார். அவருடையர் 14ஆம் வயதில் பேரரசர் டைசோங்கின் ஆசை நாயகியானார். புத்திசாலியான வு ஜெடியன் விரைவில் உயர்ந்து பேரரசரின் செயலாளராக மாறினார்.

649 இல் டைசோங் இறந்தார். அப்போது, பேரரசரின் முதல் மனைவி, வெண்டேயின் இளைய மகன் லி ஷி காவோசோங் சீனப்பேரரசராக ஆனார். டைசோங் உயிருடன் இருந்தபோதே அவர் வு ஜெடியனுடன் உறவு வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெடியனுக்கு டைசோங் மூலம் குழந்தை இல்லை. அந்த காலகட்ட வழக்கப்படி, அவர் ஒரு கான்வென்ட்டுக்கு நாடு கடத்தப்பட வேண்டும். இருப்பினும், பேரரசர் கவோசோங் உடனான நெருக்கத்தால், அவர் அதிலிருந்து தப்பித்தார்.

ஜெடியன் 655 ஆம் ஆண்டில், பேரரசர் கவோசிங்கை மணந்து, சீன அரசரின் மனைவியானார். அவர் நீதிமன்றத்தை கட்டுப்படுத்தத் தொடங்கினார். மேலும் 660 இல் கவோசோங் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பிறகு, அவர் நீதிமன்றத்தில் மிகவும் சக்திவாய்ந்த நபராக மாறினார். பேரரசர் கவோசோங் 683 இல் இறந்த பிறகு, வு ஜெடியன் ஆண் ஆதிக்க சமூகத்தின் மரபுகளை உடைத்து அரியணைக்கான தனது போராட்டத்தைத் தொடங்கினார். அவர் 690ல் அதிகாரப்பூர்வமாக சீனப் பேரரசி ஆனார். அரச குடும்பத்தின் பெயரை ’லி’யிலிருந்து ’வு’ என மாற்றினார்.

இதையும் படியுங்கள்:
மெட்டி ஆண்களுக்கானதுதான்... ?
Wu Zetian

பேரரசி வு ஜெடியன் மிகப்பெரிய சீன பேரரசர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். அவருடைய ஆட்சி முறையால், சீனா உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றாக மாறியது. அவரது தலைமையின் கீழ் சீனாவின் எல்லைகள் பெரிய அளவில் விரிவடைந்தன. அவரது கொள்கைகளால் சீன சமூகமும் பெரும் மாற்றத்திற்கு உள்ளானது. பொது செலவினங்களைக் குறைத்தார். அவர் கிராமப்புற விவசாயிகள் மீதான வரிகளைக் குறைத்து, நவீன விவசாயக் கருத்துக்களைப் பற்றி அவர்கள் அறிந்துகொள்ள உதவினார்.

இரக்கமற்ற ஆட்சியாளராகக் கருதப்பட்ட போதிலும், வு ஜெடியன் சீனாவின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தார். அறிக்கைகளின்படி, வு $16 டிரில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருந்தார். மேலும், அவரது ஆட்சியின் போது, சீனாவின் பொருளாதாரம் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 23 சதவீதமாக இருந்தது. விசுவாசமான அரண்மனை அதிகாரிகள் உட்பட பல அரச குடும்பத்தாரின் மரணத்திற்கு வு ஜெடியன் திட்டமிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிர்ச்சியூட்டும் வகையில், அவர் தனது மகளை கழுத்தை நெரித்து கொன்ற கொடும் செயலையும் செய்தார். வரலாற்றில் பணக்கார ராணி என்று அழைக்கப்படும் வு ஜெடியன் வரலாற்றின் கொடூரமான அரசியாகவும் இருந்தார்.

705 ஆம் ஆண்டில், வு ஜெடியன் அரியணையில் இருந்து அகற்றப்பட்டார். தனது 81வது வயதில் ஜெடியன் இறந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com