பெண்களுக்கான அழகான அம்சங்கள் - அவற்றை பராமரிக்க ஆரோக்கியமான உணவுகள்!

Beauty tips
Beauty tips
Published on

பெண்களின் அம்சங்களை உளவியல், உடலியல் மற்றும் நுண்ணுணர்வு கோணங்களில் அணுகினால், அழகு என்பது ஒவ்வொருவருக்கும் தனித்துவமாகும் என்பது விளங்கும்.

1. முக அமைப்பு (Facial Features): மென்மையான ஒளி, அமைதியான பிரகாசம் உடைய முகம் அனைவரையும் ஈர்க்கும்.

பெரும்பாலும் அழகை பிரதிபலிக்கும் முதன்மை அம்சம் கண்கள். கூர்மையான, மினுக்கும், வெளிப்பாடு மிகுந்த கண்கள் கவனத்தை ஈர்க்கும்.

மென்மையான, உண்மையான புன்னகை ஒரு பெண்ணின் அழகை பல மடங்காக உயர்த்தும். புன்னகை புரிந்த முகம், கூரிய மூக்கு, சமச்சீர் கன்னங்கள் அழகான முக அமைப்பாகக் கருதப்படுகின்றன.

சருமத்தின் நிறம் முக்கியமல்ல; ஆனால் சீரான, சுத்தமான, குளிர்ச்சியான சருமம் அழகாக தெரியவைக்கும்.

2. மூக்கு, உதடு, திருநீற்றுப் பகுதி: மூக்கு முகத்துடன் ஒத்து செம்மையான வடிவத்துடன் அமைதல் அழகு. மென்மையான, நல்ல வடிவுடைய உதடுகள் என்பது குறிப்பாக புன்னகையுடன் சீரான வடிவம். திருநீற்று இடம் என்பது பார்வையை கவரும் இடம். சில பெண்களுக்கு அது ஒரு மங்கலச் சின்னமாக, அழகுச் சின்னமாக செயல்படும்.

3. முடி: நீளமான, பளபளப்பான, நன்கு பராமரிக்கப்பட்ட முடி ஒரு பெண்ணின் அழகிற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

4. நடை மற்றும் உடல் மொழி: ஒரு பெண்ணின் நடையிலும், அவள் நடந்து கொள்வதிலும் வெளிப்படும் மென்மை, தன்னம்பிக்கை மற்றும் மன அழுத்தமில்லாத அமைதி, அவளது அழகை இன்னும் சிறப்பாக்கும்.

5. குரல்: இனிமையான, மென்மையான குரலும் அழகின் ஒரு அம்சமாக கருதப்படும்.

6. உணர்வு மற்றும் தன்மை: கருணையுடன் கூடிய நடத்தை, நுட்பமான உணர்வு போன்றவை ஒரு பெண்ணின் உள்நிலை அழகை வெளிப்படுத்தும். இது உடல் அழகைவிட அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.

7. தன்னம்பிக்கை மற்றும் சுய அடையாளம்: தன்னை நம்பிக்கையுடன் பார்க்கும் பெண்கள் இயற்கையாகவே கவர்ச்சி நிறைந்தவர்களாகத் தோன்றுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
என்னங்க இப்படி பண்றீங்க? பழத்த சாப்டுட்டு விதைய தூக்கி போடலாமா?
Beauty tips

அழகை பராமரிக்க செய்யும் ஆரோக்கியமான உணவு வகைகள்:

  • வெள்ளரிக்காயில் தண்ணீர் சத்து அதிகம் இருப்பதால் சருமத்துக்கு ஈரப்பதம் தரும்.

  • பப்பாளி வைட்டமின் A, C மற்றும் பீட்டா-கரோட்டின் நிறைந்திருப்பதால் முகத்தை சீராக்கும்.

  • கேரட் வைட்டமின் A நிறைந்ததால், பருக்கள் குறையும், சருமம் மெருகேறும்.

  • பூண்டு ஆன்டி-ஆக்ஸிடெண்ட்கள் நிறைந்ததால் சரும நோய்களுக்கு எதிரான பாதுகாப்பு தரும்.

  • முந்திரி, பாதாம் இவற்றில் இருக்கும் Vitamin E – சருமத்தை மென்மையாக்கும்.

  • முருங்கைக் கீரையில் இரும்புசத்து மற்றும் புரதம் இருப்பதால் முடி வலுப்படும்.

  • உளுந்து, கடலை இவற்றில் இருக்கும் புரதச்சத்து புதிய முடி வளர்ச்சியை தருகிறது.

  • அவகாடோவில் இருக்கும் ஹெல்த்தி கொழுப்புகள், Vitamin E , முடியின் மென்மையையும் பளபளப்பையும் அதிகரிக்கும்.

  • மீனில் (சால்மன்) இருக்கும் ஓமேகா-3 கொழுப்பு அமிலம் முடி வேர்களுக்குப் பலத்தை கொடுக்கும்

  • நெல்லிக்காயில் அதிகமான Vitamin C இருப்பதால் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.

  • லெமன் ஜூஸ் (எலுமிச்சை) பசுமையான சருமத்திற்கு உதவும். தேன் உட்கொண்டால் அதில் உள்ள ஹெல்த்தி சுகர் , உடலை ஒளிரச்செய்யும்.

  • தண்ணீர் 2.5–3 லிட்டர் தினமும் குடித்து வர சருமம் மற்றும் உடலுக்கு ஈரப்பதம் கிடைக்கும்.

  • பழங்களில் (மாம்பழம், திராட்சை, ஆப்பிள்) ஆன்டி-ஆக்ஸிடெண்ட் இருப்பதால் சக்தி மற்றும் அழகு இரண்டுக்கும் ஆதாரம்.

  • பச்சை காய்கறிகள் உடலுக்குள் தேங்கிய கழிவுகளை வெளியேற்றும்.

இதையும் படியுங்கள்:
குறிக்கோள் என்பது வாழ்வின் நோக்கம்!
Beauty tips

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com