பட்ஜெட் விலையில் ப்ரொபஷனல் லுக்! அலுவலகம் செல்லும் பெண்களுக்கு... இனி நோ குழப்பம்!

women office clothes
women office clothes
Published on
mangayar malar stripe
mangayar malar stripe

பெண்கள் வீடுகளில் தனக்கு பிடித்த உடைகளை தேர்வு செய்து அணிந்தாலும் அலுவலகத்திற்கு செல்லும் போது உடை விஷயத்தில் கவனமாகவும், மற்றவர்கள் கவனத்தை ஈர்க்காமலும் இருக்க வேண்டியது அவசியம். எனவே, அழகான டிரெண்டிங் உடையை தேர்ந்தெடுப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல் மரியாதை கிடைக்கும் வகையிலான உடைகளை தேர்ந்தெடுப்பதும் அவசியமாகும்.

அலுவலகம் செல்லும் பெண்கள் புடவை, சுடிதார், பேண்ட், பார்மல் சட்டை, ஸ்கர்ட் போன்றவற்றை அணிந்து செல்லலாம். சில அலுவலகங்களில் (women office clothes) மேற்கத்திய உடையை தங்கள் உழியர்கள் அணிவதை விரும்புவார்கள். சில நிர்வாகம் பாரம்பரிய உடையை தான் தன் உழியர்கள் உடுத்த வேண்டும் என எதிர்ப்பார்க்கும். எனவே, அலுவலகம் செல்லும் பெண்கள் தங்கள் வீட்டு அலமாரியில் வைத்திருக்க வேண்டிய உடைகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1. பெண்கள் அணியும் லெக்கின்ஸ் அல்லது ஜீன்சுக்கு ஏற்ப லாங் அல்லது ஷார்ட் டைப் டாப்களை அணியலாம். அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப துப்பட்டா அணியலாம். சில டாப்களுக்கு துப்பட்டா பொருந்தாது. பாட்டமிற்கு ஏற்றார்போல மொராக்கன் டாப், குர்த்திகள் பலரின் சாய்ஸாக உள்ளது. இதை அணியும் போது பர்பெக்ட் லுக் கொடுக்கும். கருப்பு, மெரூன், பச்சை போன்ற நிறங்களை தேர்வு செய்யும் போது நேர்த்தியான தோற்றம் கிடைக்கும்.

2. முக்கியமான மீட்டிங்போன்ற நேரங்களில் பட்டனுடன் கூடிய சட்டைகளை தேர்வு செய்யலாம். உயர் அதிகாரிகள் வரும் மீட்டிங் போன்ற இடங்களில் அடர்நிற பாட்டமுடன் வெளிர் நிற சட்டையை அணிவது சிறந்தது. கருப்பு, பிரைவுன் பேண்டுகளுக்கு வெள்ளை, நீலம், பீச் நிறங்களில் சட்டைகளை அணியலாம். சட்டைகள் அணியும் போது கழுத்தை சுற்றி ஸ்கார்ப் அணியலாம்.

3. நன்றாக கஞ்சி போட்டு சலவை செய்த காட்டன், ஜார்ஜெட் புடவைகள் அணியலாம். இதற்கு பிளவுஸ் சாதாரணமாக இருக்க வேண்டும். அதிக ஜிமிக்கி, எம்ராயிடரி வேலைப்பாடுகள், டீப் நெக், ஸ்லீவ் லெஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். புடவைகளை பிளீட் எடுத்து பின் குத்தினால் ரிச் லுக் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
வெப்பம் மிகுந்த சூழல் - கருச்சிதைவுக்கு இதுவும் ஒரு காரணமா? புதிய ஆய்வின் திடுக்கிடும் உண்மை!
women office clothes

4. அலுவலகத்திற்கு ஸ்டைலான லுக்கை பிளேசர்கள் அளிக்கிறது.  இப்போது பலரின் விருப்பமும் இதுதான். ஷார்ட் மற்றும் லாங்க் டைப் ஸ்கர்ட், பேண்ட் போன்றவை பிளேசருக்கு நன்றாக பொருந்தும். பிளேசருக்கு பொருத்தமான அதே நிறத்தில் பேண்டுகள் கிடைக்கின்றன. மீட்டிங்கில் பிளேசர் அணிந்தால் அதன் லுக் தனித்துவமாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com