ஆண்களை விட பெண்கள் மிக வேகமாக மது பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் - ஏன் தெரியுமா?

சம உரிமை என்ற பெயரில் மது பழக்கத்திற்கு அடிமையாகும் பெண்கள் கவனத்திற்கு! மதுவினால் பெண்களின் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவான அலசல்.
மது அருந்துதல் |woman and alcohol health risk
மது அருந்துதல் | woman and alcohol health riskAI Image
Updated on
MM strip
MM strip

பெண்ணுரிமை வேண்டும் பெண்ணுரிமை வேண்டும் என்று கூறிக்கொண்டு பெண்கள் பல வழிகளில் போராடி பலவிதமான சுதந்திரங்களை பெற்று இருக்கிறார்கள். கல்வித்துறை, அலுவலகம், விண்வெளி, விளையாட்டுத்துறை, ராணுவத்துறை என இப்படி எல்லா துறைகளிலுமே பெண்களின் கால்கள் பதிக்கப்பட்டு இருக்கின்றன.

ஒரு காலத்தில் வீட்டையே விட்டு வெளியே வராத பெண்கள் இன்று ஆண்களை விட எல்லா துறையிலும் தலைசிறந்து விளங்குகிறார்கள்.

இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், ஆண்களுக்கு நிகராக பெண்களும் சில செய்யக்கூடாத காரியங்களை செய்கிறார்கள்.

அந்த காலத்திலே நம்முடைய முன்னோர்கள் பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்; அப்படித்தான் செய்ய வேண்டும் என்று ஒரு வரைமுறைக்குள் கட்டுபடுத்தி வைத்திருந்தார்கள். அந்த வரைமுறையை உடைத்தெறிந்து பெண்கள் வெளியே வந்தார்கள். ஒரு சிலவற்றில், அது ஒத்துக் கொள்ள வேண்டிய விஷயம் தான். ஆனால், அதற்காக ஆண்களுக்கு நிகராக எல்லாவற்றிலும் இருக்க வேண்டும் என்பது மிகவும் தவறான ஒன்றாகும்.

இப்போதெல்லாம் நீங்கள் பார்த்தீர்களேயானால், மதுபாரிலே உட்கார்ந்து கொண்டு பெண்களும் ஆண்களுக்கு சமமாக மதுவை அருந்துகிறார்கள்.

மதுவை யார் அருந்தினாலும், உடல் நலம் கெடும்; அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி.

இதில் குறிப்பாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்றால் இயற்கையாகவே பெண்களின் உடல்நிலையானது, ஆண்களின் உடல் நிலையை விட மாறுபட்டு இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் முன்னோர்கள் கூறிய உடல் ரீதியான சில விதிமுறைகளை பெண்கள் கடைபிடிக்காவிட்டால் பாதிக்கப்படுவது அவர்களுடைய உடல் தான். ஒரு ஆண் குடித்தால் அவனை ஒன்றும் கூறாமல் ஏன் பெண்களை குடிக்கக்கூடாதென்று கூறுகிறீர்கள் என்று விதண்டாவாதம் செய்தால் பாதிக்கப்படுவது உங்களுடைய உடல் தான்..

இதையும் படியுங்கள்:
கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க சில டிப்ஸ்!
மது அருந்துதல் |woman and alcohol health risk

மது அருந்துவதால் பெண்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகள்:

  • பெண்கள் குறைந்த அளவில் மது அருந்தினால் கூட ஹெபடைடிஸ் மற்றும் சிரோசிஸ் உள்ளிட்ட கல்லீரல் நோய்களுக்கு ஆளாக நேரிடும்.

  • மது அருந்துவதால் மார்பகப் புற்றுநோய் உட்பட பல்வேறு புற்றுநோய்கள் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கும்.

  • அதிகப்படியான மதுவை அருந்தும் போது, அது மாதவிடாய் சுழற்சியை சீர் குலைத்து, கருவுறுதலை தடுக்கும். அது மட்டுமில்லாமல், கர்ப்ப காலத்தில் அருந்தினால் தானாகவே கரு கலைவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கலாம்.

  • கர்ப்ப காலத்தில் அதிக அளவில் மதுவை அருந்தினால், ஆல்கஹால் ஸ்பெக்ட்ரம் கோளாறுகளுடன் (FASD) குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கின்றன.

  • மது அருந்தினால் பொதுவாகவே, சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், மனச்சோர்வு, பதட்டம், நரம்பு தளர்ச்சி, நினைவாற்றல் குறைதல் போன்ற பிரச்னைகள் உண்டாகும். பெண்களை பொருத்த வரையில் இந்த மாதிரியான பிரச்னைகள் ஏற்பட்டால் குழந்தைகளை பேணுவதில் பலவிதமான குழப்பங்கள் உண்டாகும்.

மது அருந்துதல் | woman and alcohol
மது அருந்துதல் | woman and alcoholAI Image
  • இயற்கையாகவே, பெண்களுக்கு ஆண்களை விட அதிக விகிதத்தில் உடல் கொழுப்பும், குறைவான விகிதத்தில் உடல் நீரும் இருப்பதால், இரத்த ஓட்டத்தில் ஆல்கஹால் மிக வேகமாக உறியப்படுகிறது.

  • பெண்களின் வயிற்றில் ஆல்கஹால் டிஹைட்ரோஜினேஸ் என்ற நொதியின் அளவு குறைவாக உள்ளது. இது மதுவை உடைக்கிறது, இதன் விளைவாக இரத்தத்தில் ஆல்கஹால் செறிவு அதிகமாக இருக்கும். இதன் காணமாக, ஒரே அளவான ஆல்கஹாலை ஒரு பெண்ணும் ஒரு ஆணும் அருந்தும் படசத்தில், அந்த ஆணிற்கு 10 – 15 ஆண்டுகளுக்கு பிறகு தான் பாதிப்பு ஏற்படும். ஆனால் அந்த பெண்ணிற்கோ 5 வருடத்திலேயே முழுவதுமாக உடல்நிலை சீர் குலைந்து விடும்.

  • ஆல்கஹால் பெண் ஹார்மோன்களுடன், குறிப்பாக ஈஸ்ட்ரோஜனுடன் தொடர்பு கொள்ளும் போது, அது மார்பக புற்றுநோய் வருவதற்கான அபாயத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமில்லாமல் இனப்பெருக்க ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.

இதையும் படியுங்கள்:
களிமண் தொட்டால் மூளை சுத்தமாகும்! அட என்ன சொல்றீங்க..!
மது அருந்துதல் |woman and alcohol health risk

பெண்களே, நம் முன்னோர்கள் இவை எல்லாவற்றையும் கருத்தில் வைத்து கொண்டு தான், பெண்களுக்கென சில விதிமுறைகளை கடைபிடித்தார்கள். எப்போதாவது ஒரு பார்டியிலோ அல்லது வேறு எதாவது நிகழ்ச்சியிலோ சிறிதளவு அருந்துவதினால் பாதிப்பு ஏற்படாது. ஆனால், அதே சமயத்தில் முழுமையாக அடிமையானால், அதனால் ஏற்படும் விளைவுகளும் மிக அதிகமாக இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்....

இந்த கட்டுரையை வாசிப்பதன் மூலம், மது அருந்துதல் வெறும் சமூகப் பழக்கமாக மட்டுமில்லாமல், உங்கள் தனித்துவமான உடல் அமைப்பில் ஏற்படுத்தும் நிரந்தர பாதிப்புகளை உணர்ந்து, ஆரோக்கியமான வாழ்வியலைத் தேர்ந்தெடுக்க தெளிவான புரிதலைப் பெறுவீர்கள்.

மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.

Reference

logo
Kalki Online
kalkionline.com