களிமண் தொட்டால் மூளை சுத்தமாகும்! அட என்ன சொல்றீங்க..!

களிமண் பிசைவது வெறும் கலையல்ல, அது மன அழுத்தத்தை போக்கும் சிறந்த சிகிச்சை. மண்பாண்டக் கலை உங்கள் மூளையை எப்படி மாற்றுகிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
களிமண் | Clay Pottery Therapy
களிமண் | Clay Pottery TherapyImage credit: AI Image
Updated on
MM strip
MM strip

நாம் வழக்கமாக யாரையாவது திட்ட வேண்டும் என்றால், "அவனுக்கு என்னப்பா... களிமண் மூளை, ஒன்றுக்கும் உதவாது!" என்று சொல்வோம் அல்லவா?

'களிமண் மூளை' (Clay brain) என்றால் அதற்குள் எந்த சிந்தனையும் இல்லை என்று அர்த்தம். இனி அம்மாதிரி திட்டுகள் நாம் வாங்க வேண்டியது இருக்காது.

நம் சமூகத்தில் புத்திசாலி இல்லாதவர்களை இப்படி உவமையாகக் பேசுவதை நாம் கேட்டிருப்போம்.

ஆனால், இன்றைய மருத்துவ உலகம் இந்த பழமொழியை தலைகீழாக மாற்றி எழுதியிருக்கிறது. களிமண்ணைக் தொட்டு, மண்பாண்டங்கள் செய்யும் கலை (Pottery), மனிதனின் மூளையைச் சுறுசுறுப்பாக்கி, மன அழுத்தத்தை விரட்டும் ஒரு உன்னதமான 'மனநல மருத்துவம்' என்று தற்கால உளவியல் ஆய்வுகள் கூறுகின்றன.

பரபரப்பான இந்த நவீன காலகட்டத்தில், கணினித் திரையையே பார்த்துக் கொண்டு மன அழுத்தத்தில் வாழும் மனிதர்களுக்கு, களிமண் எப்படி ஒரு புதிய வழிகாட்டியாக மாறுகிறது என்பதைப் பார்ப்போம்.

1. மன அழுத்தத்தைக் குறைக்கும் களிமண் (Stress Relief):

நாம் களிமண்ணைக் கைகளில் எடுத்து, பானை செய்யும் சக்கரத்தில் (Potter's Wheel) வைக்கும் போது, நம்முடைய முழுக் கவனமும் அந்த மண்ணின் மீதும், அதன் ஈரப்பதத்தின் மீது மட்டுமே இருக்கும். களிமண்ணைத் தொடும்போது ஏற்படும் அந்த மென்மையான ஸ்பரிசம், நம் உடம்பில் உள்ள 'கார்டிசோல்' (Cortisol) என்ற மன அழுத்தத்தை உருவாக்கும் ஹார்மோனை உடனடியாகக் குறைக்கிறது. களிமண்ணை பிசையும் போது, நம் மனதிற்குள் இருக்கும் கோபமும், ஏமாற்றங்களும் அந்த மண்ணோடு மண்ணாகக் கரைந்து, மனம் அமைதியடைகிறது.

இதையும் படியுங்கள்:
திருமணத்திற்கு முன் பிள்ளைகளின் குறைகளை மறைப்பது ஆபத்தா? உண்மை இதோ!
களிமண் | Clay Pottery Therapy

2. கவனத்தைக் கூர்மையாக்குதல் (Sharpens Focus):

இன்றைய ஸ்மார்ட்போன் உலகத்தில் மனிதர்களுக்கு ஒரு விஷயத்தில் தொடர்ந்து கவனம் செலுத்த முடிவதில்லை. ஆனால், களிமண்ணில் ஒரு பாத்திரம் செய்யும்போது, ஒரு நொடி கவனம் மாறினாலும் அந்தப் பாத்திரத்தின் வடிவம் குலைந்துவிடும். எனவே, களிமண் கலை நம்மை அறியாமலேயே நம்மை 'இன்றைய நொடியில்' (Mindfulness) வாழ வைக்கிறது. இது கவனச் சிதறல் (ADHD) உள்ளவர்களுக்கும், அதிக வேலைப் பளுவால் சோர்வடைந்தவர்களுக்கும் (Burnout) ஒரு சிறந்த தியானமாகச் செயல்படுகிறது.

3. கை, கண் ஒருங்கிணைப்பு மற்றும் தசைத் திறன் (Motor Skills & Hand-Eye Coordination):

மண்ணை சக்கரத்தில் வைத்துச் சுழற்றும்போது, கண்கள் அதன் வடிவத்தைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்; அதே நேரத்தில் கைகள் மிக லேசான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும். கையின் விரல்களும், கண்ணின் பார்வையும் ஒரே நேர்க்கோட்டில் இணையும் போதுதான் ஒரு அழகான பானை உருவாகும். இந்தத் பயிற்சி, மூளையின் நரம்பு மண்டலங்களைச் சுறுசுறுப்பாக்கி, கைகளுக்கும் கண்களுக்கும் இடையே உள்ள ஒருங்கிணைப்பை (Hand-Eye Coordination) பலப்படுத்துகிறது. வயது முதிர்ந்தவர்களுக்கும், நரம்புத் தளர்ச்சி உள்ளவர்களுக்கும் இது மிகச்சிறந்த உடற்பயிற்சியாகும்.

களிமண் | Clay Pottery Therapy
களிமண் | Clay Pottery TherapyImage credit: AI Image

4. சுய வெளிப்பாடு மற்றும் படைப்பாற்றல் (Self-Expression & Creativity):

ஒரு வெற்று களிமண்ணை எடுத்து, அதை என்ன வடிவமாக மாற்ற வேண்டும் என்பது நம் கைகளில் தான் உள்ளது. அதற்கு எந்த விதிகளும் இல்லை. தவறு நடந்தால் அதை மீண்டும் பிசைந்து புது வடிவமாக்கலாம். இந்தச் சுதந்திரம், மனிதனுக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் படைப்பாற்றலை (Creativity) வெளிக்கொண்டு வருகிறது.

இதையும் படியுங்கள்:
பெண்களே கவனத்திற்கு! உங்கள் உடல் அமைப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை!
களிமண் | Clay Pottery Therapy

வார்த்தைகளால் சொல்ல முடியாத மனக் குமுறல்களை, மனிதர்கள் தாங்கள் செய்யும் களிமண் உருவங்கள் வழியே வெளிப்படுத்துகிறார்கள் என்று மனநல மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

முடிவுரை:

"களிமண் மூளை ஒன்றுக்கும் உதவாது" என்பது பழங்காலம். ஆனால், "களிமண் தொட்டால் மூளை சுத்தமாகும்" என்பதுதான் நவீனக் காலம். வார இறுதி நாட்களில் தியேட்டருக்கும், மால்களுக்கும் சென்று பணத்தை விரயம் செய்வதை விட, இயற்கையான களிமண்ணைத் தொட்டுப் பழகுவது நம் உடலுக்கும், ஆன்மாவிற்கும், அமைதியான மனதிற்கும் (Calmer Mind) வழிவகுக்கும் உன்னதக் கலையாகும்!

மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.

Reference

logo
Kalki Online
kalkionline.com