
பொன்னையும், பெண்ணையும் ஒப்பிட்டு பார்த்தால் இரண்டிற்கும் பல்வேறு ஒற்றுமைகள் இருக்கின்றன. பார்ப்போமா?
1. பெண் மிகவும் மென்மையானவள். அதைப் போல உலோகத்திலும் மென்மையானது எதுவென்றால் அது தங்கம் என்கிற பொன் தான்.
2. பொன்னின் விலையில் எப்போதுமே ஏற்றத்தாழ்வுகள் இருந்து கொண்டே இருக்கும். அதைப் போல பெண்களின் மனநிலையிலும் மாற்றம் இருந்து கொண்டே தான் இருக்கும்.
3. பொன்னை நாம் நேசிக்க நேசிக்க அதன் மதிப்பும் தரமும் அதிகமாகும். அதைப் போல பெண்களையும் நேசித்து மதிப்பு கொடுத்தால் அவர்களின் தரமும் உயர்ந்து கொண்டே போகும்.
4. பொன்னால் பெண்ணிற்கு அழகு உண்டாகிறது. பெண்ணால் பொன்னிற்கு பெருமை உண்டாகிறது.
5. திருமணத்திற்கு பெண் பார்க்க சென்றாலும், பொன் வாங்க சென்றாலும் நல்ல நாளிலே நல்ல நேரத்திலே தான் செல்வார்கள்.
6. பொன்னை முதலில் நெருப்பிலே உருக்கி பிறகு பல விதமான செயல்முறைகளை கடந்த பிறகு தான் அழகான விதவிதமான ஆபரணங்கள் உருவாகின்றன. அதைப்போல ஒரு பெண்ணும் பல விதமான இன்னல்களையும், கஷ்டங்களையும் தாண்டி தான் உயர்ந்த நிலைக்கு வருகிறாள்.
7. ஒரு ஆணுக்கு சேமிப்பிற்காக பொன் அவசியம். அவனை பேணவும், அரவணைக்கவும் ஒரு பெண் அவசியம்.
8. பொன்னிலே ஒரு குறை இருந்தாலும் வெளியே காட்டி கொள்ளாமல் ஜொலித்து கொண்டே இருக்கும். அதைப் போல பெண்ணும் துக்கத்தை வெளியே காட்டாமல் கணவருக்காகவும், குழந்தைகளுக்காகவும் சிரித்து கொண்டே இருப்பாள்.
9. தங்கக்கடையில் இருக்கும் நகைகள் நிரந்தரமாக அங்கு இல்லாமல் வாங்கியவரின் கைக்கு சென்று காலம் முழுவதும் அவர்களுடைய மேனியை ஜொலிக்க வைக்கும். பெண்களும் திருமணமான பிறகு தாய் தந்தையரை விட்டு புது இல்லத்திற்கு போய் இறக்கும் வரை அந்த குடும்பத்திற்காக போராடி ஜொலிக்க வைப்பார்கள்.
10. சந்தேகம் வந்தால் பொன்னின் தரத்தையும் பெண்ணின் கற்பையும் உரசி பார்ப்பார்கள், சுத்தமாக இருக்கிறதா? இல்லையா? என்று.
11. திருமணத்திற்கு வரதட்சணையாக இப்போதும் தன் வீட்டு பெண்ணோடு பொன்னையும் சேர்த்து தர வேண்டும்.
12. பெண், பொன் இரண்டுமே இரண்டு எழுத்துகளை கொண்ட சொற்கள்.
13. பொன்னை உருக்கிய பிறகு சுலபமாக எந்த உருவத்திற்கும் மாற்றலாம். அதைப் போல பெண்ணையும் மயக்கிய பிறகு நம் இஷ்டத்திற்கு அவளை மாற்றி விடலாம்.
14. பொது இடங்களில் பொன்னிற்கும், பெண்ணிற்கும் எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படலாம்.
15. பொது இடங்களில் பொன்னை மிகவும் ஜாக்கிரதையாக வைத்திருக்க வேண்டும். அதைப் போல பெண்களும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
16. கள்வர்களால் பொன்னிற்கு ஆபத்து, பெண் ஆசை கொண்ட முரடர்களால் பெண்களுக்கு ஆபத்து.
17. சங்க காலத்தில் பொன், பெண் இரண்டிற்குமே ஆசைப்படாத ராஜாக்களே சரித்திரத்தில் இல்லை.
18. நாடு விட்டு நாடு பெண்ணையும் கடத்துகிறார்கள், பொன்னையும் கடத்துகிறார்கள்.
19. எந்த நாடாக இருந்தாலும் பொன்னிற்கு மதிப்பு குறையாது அதைப் போல எல்லா நாட்டிலும் பெண்ணிற்கும் மதிப்பு குறையாது.
20. பொருளாதாரத்தை வளர்ப்பது பொன், குடும்பத்தின் சந்ததியை வளர்ப்பவள் பெண்.
இந்த பொன்னிற்கும், பெண்ணிற்கும் எப்போதும் அதிகமாக ஆசைப்படக் கூடாது. பெண் ஆசை பிடித்தவனும், பொன்னாசை பிடித்தவனும் வாழ்க்கையில் சந்தோஷமாகவே வாழ முடியாது.