பெண்கள் தின ஸ்பெஷல் - முழுமையாக கிடைத்ததா பெண்களின் சுதந்திரம்..!

Women's day
Women's day
Published on

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் அனுசரிக்கப்படுகிறத . இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து ஆண்களுக்கு நிகராக பெண்களும் பல துறைகளில் பணியாற்றிய போதும் அவர்களுக்கான ஊதியத்திலும் உரிமையிலும் தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டதைக் கண்டித்து அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1908 ஆம் ஆண்டு சுமார் 15,000 பெண்கள் இணைந்து நடத்திய பேரணியில் துவங்கியது பெண்கள் தினத்துக்கான விதை.

தொடர்ந்து நிகழ்ந்த ரஷ்யப் பெண்களின் புரட்சிப் போராட்டங்கள் மற்றும் பல நாடுகளில் கொண்டாடப்பட்ட மகளிருக்கான தினத்தை சர்வதேச பெண்கள் தினமாக 1975 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டு முதன்முறையாக கொண்டாடப்பட்டது. தொடர்ந்து கிரிகோரியன் நாட்காட்டியின் படி மார்ச் 8 ஆண்டு தோறும் உலக நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

1996 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச பெண்கள் தினத்துக்காக ஒரு கருப்பொருளை அறிவித்து வருகிறது ஐநா சபை. இந்த ஆண்டு மகளிர் தினத்திற்கான கருப்பொருளாக "அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கும் உரிமைகள் சமத்துவம் மற்றும் அதிகாரம் அளித்தல்" என்பதை தெரிவித்திருக்கிறது.

பெண்கள் யாரிடமும் அடிமைப்பட்டு கிடக்காமல் சம உரிமை பெற்று வாழ பொருளாதார ரீதியில் அவர்களை பலப்படுத்தும் கல்வி அவசியம் தேவை. வீட்டுக்குள் முடக்கப்பட்ட பெண்கள் படிப்படியாக பல்வேறு நெருக்கடிகளை கடந்து படித்ததால்தான் ஜனாதிபதியாகவும் ஆளுநராகவும் உயர் போலீஸ் அதிகாரிகளாகவும் அறிவியல் ராணுவத்தில் பணிபுரியும் நிலைக்கும் உயர்ந்து உள்ளனர்.

பெண்கள் கல்வி கற்றால் தான் நாடு சிறப்படையும். பெண்களுக்கு எதிரான சமூக கொடுமைகளை எதிர்க்கும் ஆற்றலும் துணிவும் கல்வி அறிவு பெற்ற பெண்களுக்கு இயல்பாக ஏற்படுகிறது. படித்த பெண்கள் உள்ள குடும்பம் பல்கலைக்கழகம் என்று போற்றுவார்கள். பெண்கள் கல்வி கற்று பெருமை பெற்று பாரதி கண்ட புதுமை பெண்ணாக விளங்குதல் வேண்டும். அப்பொழுதுதான் வீடும் நாடும் சிறப்படையும்.

பெண் கல்வியின் சிறப்பை உணர்த்த அரசு பெண் கல்விக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கிறது. அதை கிராமம் முதல் நகரம் வரை உள்ள அனைத்து நிலை குடும்பங்களும் பயன்படுத்தி பெண் பிள்ளைகளுக்கு கல்வியின் அவசியத்தை உணர்த்த வேண்டும்.

பெண்கள் உயர்கல்வியை பெற்று இருந்தால் மட்டும் போதாது. வீட்டுக்குள் முடங்கும் அந்த கல்விக்கேற்ற பணி அல்லது சொந்தமாக தொழில் துவங்கி தங்கள் அடையாளத்தைப் பெற முயலவேண்டும். யாரையும் சார்ந்து இல்லாமல் பொருளாதாரத்தில் நிறைந்து விளங்க வேண்டும். சுயமரியாதையைக் காத்து சமூகத்தில் மதிப்பை உயர்த்தும் பொருளாதாரம் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவசியம் தேவை.

இதையும் படியுங்கள்:
Women's day Quotes: அறிஞர்களின் மகளிர் தின பொன் மொழிகள்!
Women's day

அடுத்து ஒரு பெண் சுதந்திரம் பெற வேண்டுமானால் அவள் விழிப்புணர்வு பெற வேண்டியது முதல் தேவை. விழிப்புணர்வு என்பது கவனத்துடன் செயல்படுவதற்குரிய அறிவை குறிக்கும். அதனால் பெண்களிடம் அவர்களுடைய உரிமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தங்கள் உரிமைகள் என்ன என்பதை ஒவ்வொரு பெண்ணும் அறிய வேண்டும்.

தற்போது பெண் குழந்தைகள் அதிகமாக பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு தொல்லை கொடுப்பவர்கள் பெரும்பாலும் உறவினர்கள் அல்லது தெரிந்த நபர்களாக இருக்கிறார்கள்.

பெண் குழந்தைகளைப் பெற்ற தாய்மார்கள் தம் குழந்தைகளை ஒருவர் என்ன நோக்கத்தில் தொட்டு தூக்குகிறார்கள் என்பதை அவர்களின் கண்ணை பார்த்து தெரிந்து எச்சரிக்கையாக இருப்பது அவசியம். பெண் குழந்தைகளுக்கு தகுந்த தற்காப்புக்கலையை கற்றுத் தருவதும் அவசியம். அதே போல் ஆண் பிள்ளைகளிடம் பெண்களின் பெருமையை புரிய வைப்பதும் பெற்றோர் கடமை.

பாலியல் வன்முறைகள், பணியிடத்தில் பாகுபாடு, கல்வி மறுப்பு, சிறு வயது திருமணம், குடும்ப வன்முறைகள் போன்றவற்றிலிருந்து முழுமையாக பெண்கள் விடுபடும் போதுதான் பெண்களின் உண்மையான சுதந்திரம் துவங்குகிறது என்கின்றனர் பெண் ஆர்வலர்கள்.

இதையும் படியுங்கள்:
கல்கி ஆன்லைன் - 2024ம் ஆண்டு, 500+ படைப்புகள் பிரசுரமான பெருமைக்குரிய பெண் படைப்பாளிகளை கொண்டாடுவோம்!
Women's day

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com