உடல் பருமன் என்பது இன்றைய காலத்தில் மக்களின் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. அதற்கு உடல் உழைப்பு இல்லாததே முக்கிய காரணமாகும். நமது உடலின் எந்தப் பகுதியில் கொழுப்பு சேர்ந்தாலும், அது மிகவும் மோசமாகத் தெரியும். சிலருக்கு கால் தொடை, வயிறு, கைகளில் கொழுப்பு சேர்த்து அந்த பகுதி மட்டும் தனியாக குண்டாக தெரியும். அவர்கள் அழகாக இருந்தாலும் எந்த டிரஸ் போட்டாலும் பார்க்க நன்றாக இருக்காது.
கையின் கொழுப்பைக் குறைக்க வல்லுநர்கள் யோகாசனங்களை பரிந்துரைக்கின்றனர். இந்த யோகாசனங்களை தொடர்ந்து செய்து வரும் போது உங்கள் கைகளில் நல்ல வித்தியாசம் தெரிவதை காணலாம். இன்று அந்த யோகாசனங்கள் என்ன எப்படி செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
முதலில் விரிப்பில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். பின் மூச்சை உள்ளிழுத்தவாறு, கால்களை மடக்கி பிட்டங்களின் அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் மடித்து, உள்ளங்கைகளை காதுகளுக்கு அருகில் தரையில் ஊன்ற வேண்டும். பின்பு கைகள் மற்றும் கால்களை நன்கு ஊன்றி, மூச்சை வெளியே விட்டபடி உடலை மெதுவாக மேலே தூக்க வேண்டும். இந்த நிலையில் 1 நிமிடங்கள் இருந்து பின், மெதுவாக பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு 3-4 செட் செய்ய வேண்டும். இந்த ஆசனம் வயிற்று கொழுப்பு, கால் சதையையும் குறைக்கும்.
முதுகு பிரச்சனை உள்ளவர்கள், முகுகில் அறுவை சிகிசை செய்தவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.
விரிப்பில் குப்புற படுத்துக் கொண்டு இரு உள்ளங்கைகளையும் மார்பு, தோள்பட்டைக்கு பக்கவாட்டில் தரையில் பதியுமாறு வைக்கவும். கால்கள் சேர்ந்து இருக்கட்டும். மூச்சை இழுத்துக்கொண்டே, கைகளை தரையில் நன்கு ஊன்றியவாறு, தலை, மார்புப் பகுதியை உயர்த்தவும். இடுப்புக்கு கீழே உள்ள பகுதிகள் நன்கு தரையில் பதிந்திருக்கட்டும். தலையையும் மேலே உயர்த்தி வானத்தை நோக்கி இருக்கட்டும். கால் முட்டிகள் தரையில் பட்டும் படாமலும் இருக்கட்டும். இப்போது, நன்கு மூச்சை இழுத்துவிடவும். 1 நிமிடம் இந்த நிலையில் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். இவ்வாறு 3 முதல் 4 முறை செய்யவும்.
இந்த ஆசனம் செய்வது சற்று கடினம் என்றாலும் செய்ய ஆரம்பித்த சில நாட்களிலேயே நல்ல பலன் கிடைப்பது நிச்சயம். இந்த ஆசனம் தொடர்ந்து செய்து வந்தால் விரைவிலேயே கைகளில் உள்ள அதிகப்படியான சதை குறைவதை கண்கூடாக பார்க்கலாம். இந்த ஆசனம் செய்ய முதலில் விரிப்பில் குத்திட்டு உட்காரவும். பின்னர் கைகளை தரையில் ஊன்றி உடலை மேலே தூக்கி கைகளில் முழு உடலையும் பேலன்ஸ் செய்யவும். பின்னர் கால் மூட்டியை கைகளின் அக்குளில் வைத்து முழு உடலையும் கைககளில் பேலன்ஸ் செய்ய வேண்டும்.
ஆரம்பத்தில் இந்த ஆசனம் செய்யும் போது முன்னால் தலைக்கு நேராக ஒரு தலைகாணியை வைத்து கொள்ளவும். ஏனெனில் முன்னால் விழுந்தாலும் அடிபடாது. இந்த ஆசனம் செய்வது கடினம். ஆரம்பத்தில் வல்லுனர்களின் வழிகாட்டலில் செய்வது அவசியம். கவனமாக செய்யவும்.