
கால் விரலில் மெட்டி அணிவதன் ரகசியம் என்ன?
மெட்டி என்பது திருமணமான இந்து சமயப் பெண்கள், விரும்பி அல்லது மரபு காரணமாக, தங்கள் கால் விரல்களில் அணியும் வளையம் போன்ற அணிகலன் ஆகும்.
பழங்காலத்தில் இது ஆணுக்குரிய அணிகலனாக இருந்தது என்பது பலருக்கும் ஆச்சரியம் தரும் தகவல்.
அக்காலத்தில் மணமகனுக்கும் மெட்டி உண்டு என்று திருமங்கை ஆழ்வாரின் வரலாற்றிலிருந்து தெரிய வருகிறது. இப்பொழுதும் கூட திருமணத்தின் போது ஆண்களுக்கும் மெட்டி அணியும் பழக்கம் உண்டு.
திருமணமான ஆணுக்கு மெட்டியும், பெண்ணுக்கு தாலியும் அடையாள அணிகலன்கள் ஆகும். ஒரு ஆண் திருமணமானவன் என்பதனை, அவனின் பாதங்களைப் பார்க்கும் பெண் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆண்களின் கால்களில் மெட்டி அணிவிக்கப்பட்டது. காலமாற்றத்தினால் அல்லது கலாச்சார மாற்றத்தினால் மெட்டி, பெண்ணுக்குரிய அணிகலனாகியது.
மெட்டி அணிவது லட்சுமி தேவியை மகிழ்விப்பதோடு அவளுடைய ஆசீர்வாதத்தையும் பராமரிக்கிறது. மேலும், கால்விரலில் மெட்டி அணிவது எதிர்மறை ஆற்றலைத் தடுக்கிறது. பெண்கள் மெட்டியை வெள்ளியில் அணிய வேண்டும்.
வெள்ளி பூமியின் துருவ ஆற்றலை உறிஞ்சும் திறன் கொண்டது மற்றும் சந்திரனின் உலோகமாக கருதப்படுகிறது.
கல்யாணம் ஆகிவிட்டதா என்பதை அறிய இந்த மெட்டி அணிய வேண்டுமா? என்று கேட்டால் அது உண்மை காரணம் இல்லை. மெட்டிக்குள் நிறைய ரகசியங்கள் ஒளிந்திருக்கிறது.
முக்கியமாக பெண்களுக்கு திருமணத்திற்கு முன்பும் பின்பும் நிறைய உடல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது கருப்பை. நம் உடலில் தலை முதல் கால் வரை உள்ள அனைத்து நரம்புகளும் பாதங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. மெட்டி அணியும் விரலில் ஒரு நரம்பு இருக்கும் அது கர்ப்பப்பைக்கு நேரடியாக செல்லக்கூடிய நரம்பு ஆகும். எனவே, இரும்பினால் அல்லது வெள்ளியினால் செய்த மெட்டியை அந்த விரலில் போடுவதினால் பெண்களுக்கு நன்மை கிடைக்கும்.
மெட்டி அணிந்தபடி நடக்கும்போது, அந்த மெட்டியின் அதிர்வு கருப்பைக்குச் செல்லக்கூடிய நரம்பில் படுவதினால், அப்பெண்ணுக்கு உடல் ரீதியான எந்தப் பிரச்சினையும் ஏற்படாது.
அதுமட்டுமின்றி ஒரு பெண் கர்ப்பமாக இருந்தால் தலைவலி, வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படும். பிறகு அவள் பாதத்தை தூக்கி கால் விரலை தடவினால் நல்ல உறக்கம் கிடைக்கும், நிம்மதியாக தூங்குவார்கள். எனவே, மெட்டி அணிவது பெண்களின் ஆரோக்கியத்திற்கு முற்றிலும் நன்மை பயக்கும்.
மெட்டியை எவ்வாறு அணிய வேண்டும்?
எவ்வளவு தான் பணம் இருந்தாலும் தங்க மெட்டி அணியக் கூடாது.
தற்போது பல்வேறு வடிவங்களில் மெட்டியானது விற்கப்படுகிறது. பிடிக்குமென்பதற்காக அனைத்து விரல்களிலும் அணியக்கூடாது.
தங்கள் குல வழக்கப்படி, எந்த மாதிரியான மெட்டி அணிய வேண்டுமோ, அதனை பெருவிரலுக்கு அடுத்துள்ள விரலில் மட்டுமே அணிய வேண்டும்.
மெட்டி தேய்ந்த பிறகு தூக்கி எறியக் கூடாது. அதை அப்படியே கடையில் கொடுத்து உருக்கி வரும் புது வெள்ளியால் தான் மறுபடியும் மெட்டி செய்ய வேண்டும். எந்த காரணம் கொண்டும் மெட்டியை காலிலிருந்து நீக்கலாகாது என்பர் பெரியோர்கள்.
நமது முன்னோர்கள் எப்போதுமே அறிவியலும் ஆன்மீகமும் கலந்த விசயங்களையே அறிமுகம் செய்கின்றனர்.