பல நோய்களுக்கு மருந்தாகும் துளசி!

பல நோய்களுக்கு மருந்தாகும் துளசி!
Published on

துளசியில் சாதாரணமாக காணப்படுவது வெண் துளசியாகும். இது தவிர கருந்துளசி, கிருஷ்ண துளசி, ராம துளசி, செந்துளசி, சிவ துளசி, பெருந்துளசி, சிறுதுளசி, கல்துளசி, நல்துளசி, நாய் துளசி, நிலத்துளசி, முள்துளசி, கற்பூர துளசி உள்பட 300-க்கும் மேற்பட்ட துளசி வகைகள் உள்ளன.

துளசியின் முக்கிய குணம் குளிர்ச்சியால் ஏற்படும் கபத்தை நீக்குவதுதான். பெயரில் பலவாராக இருந்தாலும், குணத்தில் அனைத்து துளசிகளும் ஒரே செயலைத்தான் செய்கின்றன. கோவில்களில் செம்பு பாத்திரத்தில் சுத்தமான நீரில் துளசியை போட்டு வைத்து, அந்த நீரை துளசியுடன் சேர்த்து பிரசாதமாக வழங்குவார்கள்.

துளசி பட்ட நீரும் மருந்தாகும் என்ற வகையில், இந்த துளசி நீரானது உடலை மட்டுமின்றி, மனதையும் தூய்மைப்படுத்தும். துளசி இலை போட்டு ஊறிய தீர்த்தம் வயிறு சுத்திகரிக்கப்பட்டு, நல்ல ஜீரண சக்தியை தரும். 'திருத்துழாய்' என்று அழைக்கப்படும் துளசிதான் கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

கபம் நோய்கள் மட்டுமின்றி, ஜலதோஷம், இருமல், மூக்கடைப்பு போன்ற குளிர் சம்பந்தமான நோய்களும் இந்த துளசியால் விடைபெற்று செல்லும். முக்கியமாக இளம்பிள்ளை வாதம் நோய் எட்டிப்பார்க்காமல் இருக்க துளசியானது அருமருந்தாக உள்ளது.

துளசியின் சாற்றை குழந்தைகளுக்கு கொடுத்துவருவதன் மூலமாக இதனை தடுக்க முடியும். குழந்தைகளின் வயிற்று வலி தீர, காது சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்த, வெண்குஷ்ட நோய்க்கு, நீரிழிவு நோய், களைப்படைந்த மூளைக்கு சுறுசுறுப்பளிக்க, இருதய நோய்க்கு, ஆஸ்துமா மற்றும் மார்பு சம்பந்தமான நோய்க்கு, உடல் துர்நாற்றம் மறைய, நோய் எதிர்ப்பு ஆற்றல் பெருக, தீராத தலைவலி தீர, வெயில் காலத்தில் வரும் கண் கட்டி குணமாக, உள்நாக்கு வளர்ச்சியை தடுக்க என அனைத்து நோய்களுக்கும் துளசியை பயன்படுத்தி நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com