மெனோபாஸ் காலகட்டத்தில் உட்கொள்ள வேண்டிய உணவுகள் என்ன?

ஆரோக்கியம்!
மெனோபாஸ் காலகட்டத்தில் உட்கொள்ள வேண்டிய உணவுகள் என்ன?
ஆரோக்கியமான உணவு முறைப் பழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் பெரிமெனோபாஸ் அறிகுறிகள் தீவிரமாகாமல் தடுக்கலாம். இந்தக் காலத்தில் பெண்களின் உடலில் நாள் ஒன்றுக்கு 1200 மில்லிகிராம் அளவு கால்சியம் உடலுக்கு தேவைப்படும். முடக்கத்தான்கீரை, கொத்துமல்லி, பசலைக்கீரை, பிரண்டை, பால், ப்ரக்கோலி, மீன் போன்றவற்றில் அதிக அளவு  கால்சியம் இருக்கிறது. கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துகொண்டாலும் அது உடல் உறிஞ்சுகொள்வதற்கு வைட்டமின் டி அவசியம். வைட்டமின் டி ஆனது சூரியனிடமிருந்து பெறக்கூடியது. தினமும் இருபது நிமிடங்களாவது வெயிலில் நிற்பதுடன் வைட்டமின் டி நிறைந்த உணவுகளையும் எடுத்துக் கொள்ளவேண்டும். வைட்டமின் டி அதிகமுள்ள பால், பாலாடை கட்டி, மீன், மீன் எண்ணெய் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதே போல முழு தானியங்கள், வாழைத்தண்டு, பீன்ஸ், வாழைப்பூ, முளைகட்டிய பயிர், அவரை, கொத்தவரை, பிரண்டை, புதினா, கீரைகள் என நார்ச்சத்து மிகுந்த உணவுகள் உடலில் சில நோய்களின் அபாயத்தை குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதில் இதய நோய், பக்கவாதம் மற்றும் புற்றூநோய் போன்றவை அடங்கும். மேலும் நார்ச்சத்து உணவுகள் உடலில் இருக்கும் கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டவை. தினசரி உணவில் 21 கிராம் நார்ச்சத்து உணவுகள் எடுத்துகொள்ள வேண்டும். அத்துடன்  இரும்புச்சத்து நிறைந்த முருங்கைக் கீரை, கொட்டைகள், பேரீச்சம்பழம், உலர்பழங்கள், முழுதானியங்களை உண்ணவேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com