உயர் மதிப்புள்ள ஆணின் 7 பண்புகள்!

உயர் மதிப்புள்ள ஆணின் 7 பண்புகள்!

காலம் காலமாக பெண்களுக்கு இருக்கும் கட்டுப்பாடுகளும் கட்டமைப்புகளும் ஒருபோதும் ஆண்களுக்கு இருந்ததே இல்லை. இவை இந்த காலத்துக்கு மட்டுமில்லாமல் எந்த காலத்திற்கும் மாறாத ஒரு நிகழ்வாகவே உள்ளது. ஆனால், இன்றைய சூழலில் எல்லா ஆண்களுக்கும் இருக்க வேண்டிய சில முக்கிய பண்புகள் உள்ளன. உயர் மதிப்புள்ள அந்த 7 முக்கிய பண்புகள் என்னன்னு பார்ப்போமா?

1. வாக்குறுதிகளைக் காப்பவர்கள் 

ங்களுக்கு, உங்கள் திட்டங்களுக்கு, அவருடைய வேலைகளுக்கு,  அவருடைய நண்பர்களுக்கு, அவருடைய குடும்பத்தினருக்கு. அவர் எதையாவது செய்யப் போகிறேன் என்று சொன்னால், அவர் எப்போதும் அதனை பின்பற்றுவார். ஒருபோதும் மீறமாட்டார். உயர் மதிப்புள்ள மனிதன் நிலையானவன். அவனது வார்த்தைகள் எப்போதும் அவனது செயல்களுடன் ஒத்துப்போகும். அவன் தனது வார்த்தையைக் கடைப்பிடிக்கும் மனிதன். அர்ப்பணிப்பைக் காட்டும் ஒரு மனிதன் நம்பகமானவன் என்பதால் அவருடன் பாதுகாப்பாக உணரமுடியும். 

2. குடும்பத்தின் முக்கியத்துவம் அறிந்தவர்கள்

ரு ஆணின் குடும்பம் அவனுக்கு முக்கியமானதாக இருந்தால் ஒரு நாள் தன் வாழ்வில் வரும்  பெண்ணின் குடும்பமும் அவனுக்கு முக்கியமானதாக இருக்கும். அது நிச்சயமாக ஒரு சிறந்த  பண்பு ஆகும். குறிப்பாக அவன் தனது குடும்பத்தில் பெண்களை நடத்தும் விதம் முக்கியமானது. "ஒரு மனிதன் தனது தாயை நடத்தும் விதத்தில் நீங்கள் அவரைப் பற்றி நிறையச் சொல்ல முடியும்."  இது மிகவும் உண்மை அதனால் ஒரு குடும்பத்தை நன்முறையில் ஒருவன் வழிநடத்துகிறான் எனில் அவன் நல்ல உயர்  மதிப்புடைய ஆண் மகனாகத்தான் இருக்க வேண்டும்.

 3. உயர்ந்த இலக்கு உடையவர்கள்

யர்ந்த நோக்கம் கொண்ட மனிதனை விடக் கவர்ச்சிகரமானதாக எதுவும் இல்லை.   உயர்ந்த மதிப்புள்ள மனிதன் வாழ்க்கையில் இலக்கின்றி அலைந்து திரிவதில்லை.  அவன் தீவிரமாகச் செயல்படும் இலக்குகளைக் கொண்டிருக்கிறான். திட்டம் இல்லாத மனிதன் மனிதனே இல்லை. வரையறுக்கப்பட்ட நோக்கம் இல்லாத ஆண் வளர்ச்சி அற்ற குழந்தை போன்றவன்.

4. பெண்களின் மதிப்பை அறிந்தவர்கள்

ர் உயர் மதிப்புள்ள ஆண் ஒரு நல்ல பெண்ணின் மதிப்பைப் புரிந்துகொள்கிறான். அவன் அழகான பெண்களுக்காகத் தன் சுயமதிப்பை ஒருபோதும் பணயம் வைக்க மாட்டான். அவன் பெண்ணிடம் தனது விருப்பத்தை நேர்மையாக எடுத்துக் கூறுவான். பெண்களின் மனதைப் புரிந்து நடப்பவனாக இருப்பான்.

5. அன்பு மிகுதியானவர்கள்

யர்ந்த மதிப்புள்ள ஆணின் காதல் வெளிப்படையானது. ஏனென்றால் அவன் தன் காதலைச் சொல்லில் அல்ல; அவன் செயல்களில் காட்டுகிறான்.  அவனுடைய அன்புக்குரியவர்களுக்கு என்ன தேவையோ அதனை மிகவும் அக்கறையுடன் நிறைவேற்றுவான்.  தான் விரும்பியவர்களுக்கு உதவ முடியும் என்ற நோக்கத்தை அது அவனுக்குத் தருகிறது.

6. உயர்ந்த மதிப்புள்ள ஆண் பெண்கள் வாழ்க்கைக்கு ஒரு வரம்

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பது போல் ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு ஆண் இருப்பான். அவன் உங்கள் வாழ்க்கையை எளிதாக்குகிறான், இதன் மூலம் நீங்கள் உண்மையிலேயே முக்கியமானவற்றில் கவனம் செலுத்தலாம். மற்றவர்களுக்காக உங்களை மாற்றிக் கொள்ளாமல் நீங்கள் நீங்களாகவே இருக்க வேண்டும் என்று அவன் விரும்புகிறார். இது மிக உயரிய பண்பாகும்.

 7. தன் மற்றும் பிறர் தேவைகளை அறிந்தவர்கள்.

தான் விரும்பும் வாழ்க்கையை வாழ நிறைய வளங்கள் தேவை என்பதை இந்த ஆண்மகன் புரிந்துகொள்கிறான். அவனிடம், உங்களுக்கு என்ன தேவை என்பதை நீங்கள் ஒருபோதும் ஒன்றுக்கு இரண்டு முறை சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் இவர்கள் தன் தேவையும் பிறர் தேவையும் நன்கு அறிந்தவர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com