அதிகப்படியான சிந்தனையிலிருந்து (Over thinking) வெளிவருவது எப்படி?

அதிகப்படியான சிந்தனையிலிருந்து (Over thinking) வெளிவருவது எப்படி?

தையும் சிந்தித்துச் செய்தால் வாழ்க்கை நன்முறையில் அமையும் என்பார்கள். ஆனால் இன்றைய சூழலில் அதிகமாகச் சிந்தனைச் (overthinking) செய்வதும் ஒரு மனநோயாக மாறிக் கொண்டு வருகிறது. வாழும் சூழல் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக அதிகப்படியான தகவலை மூளைக்கு அனுப்புவதால், மூளையானது எப்பொழுதும் ஏதேனும் ஒரு தகவலைப் பற்றிச் சிந்தித்த நிலையிலேயே இருக்கிறது. இந்தப் பாதிப்பு நாளுக்கு நாள் மக்களுக்கு அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. அதைத் தடுப்பது அல்லது அதிகப்படியான சிந்தனையைச் சமாளிப்பது என்பது சவாலானது அதிலிருந்து வெளியேறுவதற்கான சில வழிகளை இதில் பார்ப்போம்

சிந்தனையில் கவனமாக இருங்கள்

ந்தத் தருணத்தில் இருப்பதையும், உங்கள் எண்ணங்களைக் கவனிக்கவும் உங்கள் மனதிற்குப் பயிற்சி கொடுங்கள். எதிர்மறை எண்ணங்களுக்குச் சவால் விடுங்கள். உங்கள் எண்ணங்களின் நிலையை கேள்விக்குள்ளாக்குங்கள் மற்றும் அதிக நேர்மறையான எண்ணங்களைக் கருத்தில் கொள்ளுங்கள்.

கால வரம்பை அமைக்கவும்

ரு நாளில் முழு நேரமும் நாம் எந்த ஒரு வேலையிலும் ஈடுபடாமல் இருப்பதால்தான் நம் எண்ணங்கள் அங்கும் இங்குமாக அலைந்து கொண்டே இருக்கின்றன. அதனால் சிந்திப்பதற்குக் கூட ஒரு காலத்தை வகுத்துக் கொள்ளவும். ஒரு குறிப்பிட்ட சிக்கலைப் பற்றிச் சிந்திக்க ஒரு குறிப்பிட்ட நேரத்தை நீங்களே அனுமதிக்கவும், பின்னர் ஒரு முடிவை எடுக்கவும் அல்லது அந்த நேரம் முடிந்தவுடன் அடுத்த வேலையைத் தொடரவும். இப்படிச் செய்தால் அதிகப் படியான சிந்தனை (over thinking) செய்யும் நிலை மாறும்.

பிஸியாக இருங்கள்

ங்கள் மனதை ஆக்கிரமித்து, எதிர்மறையான அல்லது பயனற்ற எண்ணங்களில் இருப்பதைத் தடுக்க நடைப்பயிற்சி செய்வது, மலையேறச் செல்வது, வாகனம் ஓட்டுவது அல்லது படம் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுங்கள். இவ்வளவு எல்லாம் என்னால் செய்ய முடியாது என்றால், உங்கள் வீட்டிலேயே ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்து ஜர்னலிங் செய்யுங்கள். இது உங்கள் எண்ணங்களை உங்கள் தலையிலிருந்து வெளியேறவும் தெளிவு பெறவும் நிவாரணத்தை அளிக்கவும் உதவும்.

இதையும் படியுங்கள்:
உடல் முழுதும் ரத்தினங்கள்; இயற்கையின் அதிசய உயிரினம்!
அதிகப்படியான சிந்தனையிலிருந்து (Over thinking) வெளிவருவது எப்படி?

யாரிடமாவது பேசுங்கள்

திகப்படியான மக்கள் தங்களுக்குத் தோன்றும் விஷயங்களைப் பிறரிடம் பகிர்ந்து கொள்ளாததாலே பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி அதிகம் சிந்திக்கும் நிலையை அடைகிறார்கள். அதனால், உங்கள் கவலைகளை நம்பகமான நண்பர் அல்லது உறவினர்களுடன் பகிர்ந்துகொள்ளவும். அதுவும் முடியவில்லை என்றால் ஆழ்ந்த சுவாசம், அல்லது யோகா போன்ற பயிற்சி முறைகளைச் செய்யவும். அது உங்கள் மனதை அமைதிப்படுத்த உதவும்.

தீர்வுகளில் கவனம் செலுத்துங்கள்

பிரச்சனைகளைப் பற்றி யோசிப்பதற்குப் பதிலாக, நடைமுறை தீர்வுகளைக் கண்டறிவதில் உங்கள் கவனத்தை மாற்றவும். உங்கள் சிந்தனையை அதிகப்படியாகத் தூண்டும் விஷயங்களை, முடிந்தவரை அந்த தூண்டுதல்களின் வெளிப்பாட்டைக் குறைக்க முயற்சிக்கவும். இதனால் அதிகமாகப் பல விஷயங்களைச் சிந்திப்பதற்குப் பதிலாக, தீர்வுக்காக ஒரு விஷயத்தை மட்டும் சிந்திப்பதே பலன் தரும்.

நினைவில் கொள்ளுங்கள்!

திகமாகச் சிந்திப்பது (overthinking) கணிசமான மன உளைச்சலை ஏற்படுத்தினால் அல்லது உங்கள் அன்றாட வாழ்க்கையில் குறுக்கிடுகிறது என்றால், வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுக்காக மனநல நிபுணரிடம் பேசுவதே நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com