சுவைமிகு கார வகை ரெசிபிஸ்!

சுவைமிகு கார வகை ரெசிபிஸ்!

தேவையான பொருட்கள்:

காளான் - 100 கிராம்

உருளைக்கிழங்கு - 1/4 கிலோ

பெரிய வெங்காயம் - 3

இஞ்சி - சிறிதளவு 

பச்சைமிளகாய் - 2

கொத்தமல்லி - சிறிதளவு 

கருவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு 

பச்சைப்பட்டாணி -50 கிராம்

அரிசி மாவு - 1 கப் 

கடலைமாவு - 2 கப்

உப்பு -தேவையான அளவு

மிளகு பொடி - 1/2 ஸ்பூன் 

சுக்கு பொடி - 1 ஸ்பூன் 

சமையல் சோடா - ஒரு சிட்டிகை. 

கடலை எண்ணெய் - பொரித்தெடுக்க

செய்முறை : 

காளானை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி வேகவைக்கவும். உருளைக் கிழங்கை நன்றாக வேகவைத்து கட்டியில்லாமல் மசித்துக் கொள்ளவும்.

வெங்காயம், இஞ்சி,பச்சைமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைப் பட்டாணியை வேகவைத்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், ப. மிளகாயை வதக்கவும்.

அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, மிளகுப் பொடி,  இஞ்சி, கறிவேப்பிலை, மல்லித்தழை, சுக்குப்பொடி, சமையல் சோடா, மசித்த உருளைக்கிழங்கு. பச்சைப் பட்டாணி, வெந்த காளான் சேர்த்து நன்றாகக் கலந்து, உருண்டையாக உருட்டி  எண்ணெயில் பொரித் தெடுக்கவும். சுவையாள காளான். போண்டா தயார்.

தட்டு வடை!!!

தேவையான பொருள்:

தட்டுவடை - 12

கேரட் துருவல் - 1/2 கப்

பீட்ரூட் துருவல் - 1/2 கப்

எலுமிச்சை சாறு - 1/2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

காரச் சட்னி - 6 ஸ்பூன்

வெங்காயம் - 1

கொத்தமல்லி - சிறிதளவு

சாட் மசாலாத்தூள் - 3 ஸ்பூன்

புதினா சட்னி - 6 ஸ்பூன்

மாங்காய்த் துருவல் - 3 ஸ்பூன்

செய்முறை:

ரு பாத்திரத்தில் கேரட், பீட்ரூட்  எலுமிச்சைச்சாறு, உப்பு சேர்த்து கலக்கவும். 6 தட்டைகளின் மீது கார சட்னியை தடவி தட்டில் இடைவெளிவிட்டு வைத்து அதன் மேல் கொஞ்சம் கொஞ்சமாக கேரட், பீட்ரூட் கலவை வைத்து, அதன் மீது வெங்காயம்,கொத்தமல்லி இலை, சாட் மசாலாவை சேர்த்து தூவி தட்டுவடை செட்டில் புதினா சட்னியை தடவி, மாங்காய்த் துருவலை போடவும். ருசியான தட்டுவடை செட் ரெடி!

காரா சேவ்!!!

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 5 டேபிள் ஸ்பூன்

கடலை மாவு - 2 கப் 

உடைத்த கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்

மிளகு தூள் - 3/4ஸ்பூன்

சீரகம் - 1/4 ஸ்பூன்

பெருங்காயத் தூள் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

சோடா உப்பு - சிறிதளவு

பூண்டு விழுது - 2ஸ்பூன்

மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

ரு பவுலில்  அரிசி மாவு, கடலை மாவு, உடைத்த கடலை மாவு, மிளகுதூள், சீரகம், பெருங்காயத்தூள், உப்பு, சோடா உப்பு, பூண்டு விழுது, மிளகாய் தூள் ஒரு கரண்டி சூடான எண்ணெய், இவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாகப் பிசைந்து மாவைத் தயார் செய்யவும்.

பிறகு முறுக்கு பிழியும் அச்சின் உள்பக்கம் சிறிதளவு எண்ணெய் தடவி, அதில் மாவை நிரப்பவும்.

வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் உற்றி சூடானதும் மாவை பிழிந்து பொன்னிறமாக மாறியதும் எடுக்கவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com