
தேவையான பொருட்கள்:
மாதுளம் பழச்சாறு - அரை லிட்டர்
தேன்-அரை கிலோ
கற்கண்டு -அரை கிலோ
பன்னீர் - அரை லிட்டர்
செய்முறை:
எல்லாப் பொருட்களையும் ஒன்றாக கலந்து அடுப்பில் ஏற்றி காய்ச்ச வேண்டும் . பாகு தேன் பக்குவத்திற்கு வந்ததும் இறக்கி ஆற வைத்து பாட்டிலில் அடைத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த சர்பத்தை ஒரு வேளைக்கு இரண்டிலிருந்து நான்கு தேக்கரண்டிவரை நோயின் தன்மைக்கேற்ப சிறிது நீருடன் கலந்து சாப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட நல்ல குணம் தெரியும். ஆசனவாயில் எரிச்சல், நமைச்சல் முதலியனவும் குணமாகும்.
உடல் அதிக உஷ்ணமடைந்து விடுதல், உடலின் பல பகுதிகளில் எரிச்சல் தோன்றுதல், வாயில் ருசி தன்மை மாறி விடுதல், உடல் வீக்கம் போன்ற குறைபாடுகளை அகற்றுவதற்கு இந்த சர்பத்தை தயார் செய்து பயன்படுத்தலாம்.