சடாபட் சமையல்!

சடாபட் சமையல்!

ஐந்தே நிமிடத்தில் செய்து அசத்த எட்டு வகையான சட்டு புட்டு ரெசிபிஸ்!

பனீர் சட்பட்

தேவையான பொருள்கள்: பனீர் துண்டுகள் – 250 கிராம், அரைத்த கொத்துமல்லி விழுது – 2 டேபிள் ஸ்பூன், லவங்கப்பட்டை – 2, சீரகப் பொடி, மஞ்சள்பொடி – தலா 1 டீஸ்பூன், மிளகாய்ப்பொடி, உப்பு – தேவைக்கேற்ப, தயிர் – ½ கப், எலுமிச்சை சாறு – ½ கப், வெண்ணெய் / எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

செய்முறை: பனீர் தவிர மற்ற பொருள்களை ஒரு பாத்திரத்தில் கலந்துக்கொள்ளவும். பிறகு பனீர் துண்டங்களைச் சேர்த்து நன்கு கலந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி பனீர் துண்டங்களைப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

வெஜிடபிள் ஹாட்பாட்

தேவையான பொருள்கள்: உருளைக்கிழங்கு – 1 கப், (வேக வைத்து துண்டு போடவும்), பச்சை பட்டாணி – 1 கப், சீஸ் துண்டங்கள் – 1 கப், பொடியாக நறுக்கிய கொத்துமல்லி – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3 (பொடியாக வெட்டவும்) வர மிளகாய் – 2, பெருங்காயம் 1 சிட்டிகை, உப்பு – தேவைக்கேற்ப, மிளகுப் பொடி – 1 டீஸ்பூன், எண்ணெய் – தேவைக்கு சாட் மசாலா, எலுமிச்சை சாறு – தலா – 1 டீஸ்பூன்.

செய்முறை: வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் மிளகாய் கிள்ளிப் போட்டு, பெருங்காயம் சேர்க்கவும். உருளைக்கிழங்கு துண்டங்களையும் பட்டாணியையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு சீஸ், மிளகுப் பொடி, சாட் மசாலா, கொத்துமல்லித் தழை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி எலுமிச்சை சாறு கலந்து சூடாகப் பரிமாறவும்.

ப்ரெட் பேல் பூரி

தேவையான பொருள்கள்: பொரித்த ப்ரெட் ஸ்லைஸ் – 10, ஸேவ் (ஓமப்பொடி) – ½ கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கப், பச்சை மிளகாய் – 3, அரிசிப் பொரி – ½ கப், புளி சட்னி  - ½ கப், எலுமிச்சை சாறு – 2 டேபிள்ஸ்பூன், உருளைக் கிழங்கு – 3 (வேக வைத்து துண்டு போடவும்), உப்பு, மிளகாய்ப் பொடி – தலா ½ டீஸ்பூன், இந்துப்பு – ¼ டீஸ்பூன், அலங்கரிக்க – கொத்துமல்லி.

செய்முறை: ஒரு தட்டில் பொரித்த ப்ரெட் துண்டங்களை வைக்கவும். மற்ற எல்லாவற்றையும் நன்கு கலந்து ப்ரெட்டுக்கு மேல் வைக்கவும். இதன் மேல் மிளகுப் பொடி தூவி, நறுக்கிய பச்சை கொத்துமல்லியால் அலங்கரித்துப் பரிமாறவும்.

ராயல் கறி

தேவையான பொருள்கள்: பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கப், தக்காளி – 2, முட்டைக்கோஸ் – 1 துண்டு (சிறியதாக வெட்டிக்கொள்ளவும்), முந்திரிப் பருப்பு -  10 – 15, பால் – 1 கப், வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், மிளகுப் பொடி – ½ டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, பனீர் துண்டங்கள் – 100 கிராம், மைதா – 1 டேபிள் ஸ்பூன், அலங்கரிக்க பச்சை மிளகாய்.

செய்முறை: வாணலியில் வெண்ணெயைப் போட்டு தக்காளி தவிர மற்ற கறிகாய்களை சேர்த்து நன்றாக வதக்கவும். உப்பு, மிளகுப் பொடி, பால் சேர்க்கவும். கொதி வந்தவுடன் மைதாவில் சிறிது தண்ணீர் கலந்து கட்டி தட்டாமல் கறியில் சேர்க்கவும். 2 நிமிடம் மூடி வைத்த பிறகு தக்காளி, பனீர் பொடித்த முந்திரி சேர்த்து நன்கு கலக்கவும். பச்சை மிளகாயால்
அலங்கரிக்கவும்.

பஃப்ட் ரைஸ்

தேவையான பொருள்கள்: அரிசிப்பொரி – 2 கப், பாப்கார்ன் – 2 கப், கார்ன் ஃப்ளேக்ஸ் – ½ கப், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், ஓமப்பொடி – ¾ கப், கடுகு – ½ டீஸ்பூன், மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி – தலா ¼ டீஸ்பூன், உப்பு – 1 டீஸ்பூன், வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கவும்) தக்காளி – 2 (சிறிய துண்டுகளாக்கவும்) பொடியாக நறுக்கிய கொத்துமல்லி தழை – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும். மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி சேர்த்து பொரி மற்றும் பாப்கார்ன் சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பிலிருந்து எடுக்கவும். பிறகு ஓமப்பொடி, வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி மற்றும் கார்ன்ஃப்ளேக்ஸ் சேர்த்து நன்கு குலுக்கவும்.

சாஸ் அல்லது புளி சட்னியுடன் உடனே பரிமாறவும்.

பூந்தி கரிஷ்மா

தேவையான பொருள்கள்: உருளைக்கிழங்கு – 6 (வேக வைத்து மசித்துக் கொள்ளவும்), பூந்தி (உப்பு) – 1கப், துருவிய சீஸ் – 1 டேபிள் ஸ்பூன், வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், மிளகுப் பொடி – ½ டீஸ்பூன், இந்துப்பு – ½ டீஸ்பூன், பச்சை மிளகாய் -2 (பொடியாக நறுக்கவும்), கொத்துமல்லி தழை – 1 டேபிள் ஸ்பூன், (பொடியாக நறுக்கவும்), சாட் மசாலா – ½ டேபிள் ஸ்பூன், ப்ரெட் ஸ்லைஸ் – 6 (ஓரங்களை எடுக்கனும்.)

செய்முறை: உருளைக்கிழங்குடன் வெண்ணெய், சீஸ், உப்பு, இந்துப்பு, மிளகுப் பொடி, பச்சை மிளகாய், கொத்துமல்லி தழை எல்லாவற்றையும் கலக்கவும்.

பிடித்தமான வடிவத்தில் ‘ப்ரெட்’டை வெட்டிக் கொள்ளவும். சிறிது வெண்ணெய் தடவி இந்தக் கலவையை வைக்கவும். இரண்டு பக்கமும் பூந்தி தவுவவும். பரிமாறும் முன்பு சிறிது சாட் மசாலா தூவவும்.

ஹாட்பாட் பாரிட்ஜ்

தேவையான பொருள்கள்: ஓட்ஸ் – 1 கப், வெண்ணெய் அல்லது எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், பச்சைப் பட்டாணி – 1 கப், காரட் – ½ கப் (பொடியாக நறுக்கவும்.), வேர்க்கடலை – ¼ கப், உப்பு – 1 டீஸ்பூன், மிளகாய்ப் பொடி – ½ டீஸ்பூன், பச்சை மிளகாய் – 5, தக்காளி – 1 (சிறியதாக வெட்டவும்), சீஸ் -  1 டேபிள் ஸ்பூன் (துருவியது), வெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன் (துருவியது)

செய்முறை: குக்கரில் எண்ணெய் / வெண்ணெய் விடவும். ஓட்ஸ் போட்டு வதக்கவும். பட்டாணி, காரட், தக்காளி, உப்பு, மிளகாய்ப் பொடி சேர்த்து ிரண்டு கப் தண்ணீர் விட்டு குக்கரை மூடவும்.

ஐந்து நிமிடம் கழித்து மூடியைத் திறந்து துருவிய வெண்ணெய், பச்சை மிளகாய், சீஸ் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும். வறுத்த வேர்க்கடலை தூவி சட்னி அல்லது சாஸுடன் பரிமாறவும்.

கரகர பக்கோடா

தேவையான பொருள்கள்: மைதா – 4 டேபிள் ஸ்பூன், தயிர் – 1 டேபிள்ஸ்பூன், வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் ½ டீஸ்பூன் (பொடியாக நறுக்கவும்), உப்பு – ½ டீஸ்பூன், மிளகுப் பொடி – ¼ டீஸ்பூன், தண்ணீர் – 2 டேபிள்ஸ்பூன், பொரிக்க – எண்ணெய்.

செய்முறை: தயிரை நன்கு கடைந்து மைதாவைக் கலக்கவும். சிறிது தண்ணீர் கலந்து மற்ற பொருள்களைப் போட்டு நன்கு கலக்கவும். வாணலியில் எண்ணெய் காயவைத்து ஒரு கரண்டி சூடான எண்ணெயை மாவில் கலக்கவும். இந்தக் கலவையில் பக்கோடா செய்து பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். மிளகாய் சாஸ் அல்லது தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com