சுவையான வித்யாசமான சேமியா இட்லி!

சுவையான வித்யாசமான சேமியா இட்லி!

சேமியா இட்லி செய்யத் தேவையான பொருட்கள்:

  • சேமியா - 250 கிராம்

  • அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்

  • தயிர் - 300 மில்லி

  • பொடியாக நறுக்கிய சாம்பார் வெங்காயம் - ஒரு கைப்பிடி

  • துருவிய கேரட் - 1

  • துருவிய இஞ்சி - 1 துண்டு

  • பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2 கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி

  • கருவேப்பிலை - ஒரு ஆர்க்கு

  • நெய் - ஒரு குழி கரண்டி

  • கடலெண்ணெய் - இரண்டு டீஸ்பூன்

  • கடுகு - ஒரு டீஸ்பூன்

  • உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்

  • சீரகம் - அரை டீஸ்பூன்

  • கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்

  • காய்ந்த மிளகாய் - 2

  • முந்திரிப் பருப்பு - 15

  • பெருங்காயம் - சிட்டிகை

  • மஞ்சள் பொடி - சிட்டிகை

  • தேவையான அளவு உப்பு

செய்முறை:

  1. கொஞ்சம் நெய் விட்டு சேமியாவை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவேண்டும்.

  2. டபுள் ரோஸ்டட் சேமியாவாக இருந்தால் வறுக்க வேண்டிய அவசியம் இல்லை.

  3. வாணலியில் எண்ணெய் மற்றும் கொஞ்சம் நெய் விட்டு கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயம், கருவேப்பிலை இவற்றைஒன்றன் பின் ஒன்றாக போட்டு தாளித்துக் கொள்ளவும் .

  4. வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், மல்லித்தழை இவற்றையும் ஒன்றாக சேர்த்து மிதமான தீயில் வதக்கி மஞ்சள்பொடி, உப்பு சேர்த்து, சேமியாவை அதில் கொட்டி கலந்து விட்டு

  5. வேறு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும்.

  6. இதனுடன் தயிர் மற்றும் அரிசி மாவை கலந்து நன்றாக கிளறி தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் மூடி வைத்து விடவும்.

  7. இட்லி தட்டில் நெய் தடவி முந்திரி வைத்து விட்டு அதன் மீது இந்த கலவையை ஊற்றி 5 லிருந்து 6 நிமிடம் வேக வைத்து எடுக்க சுவையான சேமியா இட்லி தயார்.

  8. சுவையான சேமியா இட்லி தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி அருமையான காம்பினேஷன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com