துரித உணவு கலாச்சாரமும், அதில் ஒளிந்திருக்கும் ஆபத்துகளும்!

துரித உணவு கலாச்சாரமும், அதில் ஒளிந்திருக்கும் ஆபத்துகளும்!

வீட்டுப் பலகாரங்களின் காலம்:

ன் சிறு வயதில், என் பாட்டி வருடத்துக்கு மூன்று நான்கு முறை பண்டிகை நேரங்களில் அதிரசம், முறுக்கு, சீடை போன்ற பலகாரங்கள் செய்து ஒரு பெரிய பானை போன்ற சம்படத்தில் அடுக்கி வைப்பார்கள். அப்போதெல்லாம் அதில் சிலவற்றை எடுத்துக் கொண்டு போய் தோழிகளிடம் தந்து, ‘’எங்க வீட்டில பலகாரம் சுட்டிருக்கிறார்கள்’’ என்று பெருமையாக சொல்வது வழக்கம். நான் வளர்ந்த பிறகு அம்மா லட்டு, முறுக்கு மிச்சர் செய்து தர, அதை பத்து நாட்கள் வரை வைத்து சாப்பிடுவோம். அடிக்கடி ராகிப் பக்கோடா, வேக வைத்த மக்காச்சோளம், பாசிபருப்பு, கொண்டைக்கடலை சுண்டல் செய்து தருவார். ஆறுமாதத்திற்கு ஒரு முறை தான் பரோட்டா, ஐஸ்க்ரீம் கிடைக்கும். என் சொந்த ஊரான பழனியில் ஒரே ஒரு ஐஸ்க்ரீம் கடையும், இரண்டு பரோட்டாக் கடைகளும் மட்டுமே இருந்தன. அனேகமாக எல்லா எய்ட்டீஸ் மற்றும் நைன்டீஸ் கிட்ஸ்களுக்கும் இதே போன்று தான் தின்பண்டங்கள் கிடைத்திருக்கும்.   

பெருகிவிட்ட பேக்கரிகளும், உணவகங்களும்:

ற்போது புற்றீசல்கள் போல எங்கு பார்த்தாலும் பேக்கரிகளும், உணவகங்களும், ஐஸ்கிரீம் பார்லர்களும், பலகாரக்கடைகளும், ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் துரித உணவுக் கடைகளும் பெருகிவிட்டன. எத்தனை கடைகள் முளைத்த போதும் அத்தனையிலும் மக்கள் நின்று உண்டு கொண்டிருப்பதுதான் பெரும் அதிசயம். சாலையோரங்களில் பானிபூரி, மசாலா பூரி, பஜ்ஜி போண்டா தள்ளுவண்டிக் கடைகளும் அதிகரித்து விட்டன. மேலும் மெக்டோனால்ட், கே.எஃப்சி, டோமினோஸ் போன்ற அமெரிக்க உணவு சங்கிலிகளின் நுழைவு வேறு. பீட்சா, பர்கர் போன்றவை மிக எளிதாக சந்தையில் கிடைக்கின்றன. அத்தோடு சிறு குழந்தை கூட செல்போனில் ஆர்டர் செய்து வீட்டு வாசலில் வாங்கிக் கொள்ளும் டோர் டெலிவரி  வசதியும் பெருகிவிட்டது

கடைகள் அதிகரிப்பதற்கு என்ன காரணம்?

நுகர்வோர் அதிகமாக இருக்கும் போது அதன் தேவைக்கேற்ப கடைகளும் அதிகரித்து இருக்கின்றன. தனிநபர் வருமானம் பெருகி இருப்பது, கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வது, வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவுக்காக அதிகமாக பணத்தை செலவு செய்ய தயாராக இருக்கும் மக்கள், மேலும் மேற்கத்திய உணவுகளை உண்பதை கௌரவமாகவோ அந்தஸ்தாகவோ கருதுதல், வாரத்தில் நான்கு நாட்கள் ஹோட்டலில் ஆர்டர் செய்து உண்பது போன்றவைகளால் கடைகளின் எண்ணிகையும் கூடியுள்ளது.

வீட்டுச் சமையலில் நாட்டமின்மை:

முந்தைய தலைமுறை பெண்கள் குடும்பத்தை கவனிக்க வேண்டும் என்று சமையலறையிலேயே நேரத்தை செலவழித்தனர். தற்போது தனிக்குடித்தனம், மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சமைக்க போதிய நேரம் கிடைக்காதது, கிடைத்தாலும் பாரம்பரிய சமையல் உணவுகளை செய்வதில் விருப்பமின்மை, குடும்பத்தில் மிகக் குறைவான உறுப்பினர்கள் இருப்பதால் ரெடிமேடு சிற்றுண்டி வகைகளை வாங்கி உபயோகப்படுத்துதல் போன்றவையே காரணங்கள். மேலும் சமையலில் அதிக நேரம் செலவழிப்பது, அதற்கான பொருள்களை வாங்க வெளியே செல்லுதல், சமைத்த பாத்திரங்களை சுத்தம் செய்தல், என்ற மெனக்கெடல்களை  அவர்கள் விரும்புவதில்லை. முன்பு மிளகாய்ப்பொடி மசாலாப் பொடி அரைக்கத் தேவையான பொருட்களை வாங்கி பதமாக வெயிலில் காய வைத்து வறுத்து மெஷினில் கொடுத்து அரைத்து ஒரு வருடம் வரை வைத்திருப்பார்கள் பெரியவர்கள். இப்போது அவைகள் பிராண்டட் பாக்கெட்டுகளில் பல்பொருள் அங்காடிகள் முதற்கொண்டு அருகில் இருக்கும் பெட்டிக்கடைகள் வரை கிடைக்கின்றன.

விளம்பரத்தின் பங்கு:

டி. வி. விளம்பரத்தில் காட்டப்படும் பல வித வண்ண துரித உணவு வகைகள் குழந்தைகளை மிகவும் ஈர்த்து அவற்றை விரும்பி உண்ண ஆரம்பித்து கிட்டத்தட்ட  அதற்கு அடிமையாகி விட்டனர். பல பெரியவர்களும் கூடத்தான். அவர்கள் விரும்பி உண்ணும் நூடில்ஸ் வகைகளில் கலக்கப்படும் நிறக்கலவைகளும், அஜினமேட் போன்ற சுவையூட்டிகளும், மீண்டும் மீண்டும் சாப்பிடச்சொல்லி தூண்டுகின்றன. நாளிதழ்களில் வார இறுதி நாட்களில் இரண்டு கிலோ பிரியாணி வாங்கினால் அரை கிலோ இலவசம் என்ற விளம்பரங்கள் அடிக்கடி கண்ணில் படுகின்றன. மக்களும் இலவசத்திற்கு ஆசைப்பட்டு அடிக்கடி, ஏன் வாரவாரம் கூட பக்கெட் பிரியாணி(?!) சாப்பிடுகின்றனர். நம் முன்னோர்கள் பறவைகளைப்போல அதிகாலையில் விழித்து, அவை கூடடையும் அந்தி மாலை நேரத்தில் இரவு உணவை முடித்துக்கொண்டு ஒன்பது மணிக்கு உறங்கச்செல்லும் வழக்கம் வைத்திருந்தனர். தற்போது நிறைய பெருநகரங்களில் விடிய விடிய பிரியாணி கடைகள் திறந்திருப்பதும், அங்கே வாலிபர்கள் கூட்டம் அலை மோதுவதும் கண்கூடு. அவற்றைக் காணும்போது வேதனையே எழுகிறது.

துரித உணவு உண்பதால் ஏற்படும் நோய்கள்:

சிக்கு உண்பது போய் ருசிக்கும், ஆசைக்கும் உண்ணும் காலமாகி விட்டது.

மாயாபஜார் படத்து ரங்காராவ் போல இஷ்டப்பட்டதை நினைத்த நேரத்தில் உண்கிறோம். அடிக்கடி பொரித்த இறைச்சி வகைகள், ஃபிரன்ச் ஃபிரை போன்ற உணவுகளை ஆர்டர் செய்து உண்கிறோம். துரித உணவுகளில் அதிக அளவு சர்க்கரை, உப்பு, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட், கெட்ட கொழுப்பு, அதிக அளவு ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. மேலும் பழைய கெட்டுப்போன இறைச்சி வகைகளையும் உணவகங்கள் விற்பனை செய்யத் தவறுவதில்லை.

இவற்றை உண்பதால் சிறுவயதிலேயே சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறுகள், இருதயநோய், இளவயதில் மாரடைப்பு, புற்றுநோய் போன்றவை தாக்குகின்றன. ஏழு எட்டு வயது சிறுவர் சிறுமிகள் கூட அதீத உடல் பருமனோடு இருக்கின்றனர். ஒன்பது பத்து வயதிலேயே பூப்படைதல், பி.ஸி.ஓ டி, கருத்தரித்தலில் சிக்கல்கள் என நீள்கிறது பட்டியல்.

ஓடி விளையாடாத பாப்பாக்களும், உடலுழைப்பு இல்லாத பெரியவர்களும்:

வெளியில் சென்று விளையாடாமல் குழந்தைகள் உட்கார்ந்தே இருப்பது, நவீனக் கருவிகளின் உதவியால் உடல் உழைப்பு இல்லாத வீட்டு வேலைகள், வாகனங்களில் ஏறிப் பறப்பதால் நடக்க மறந்த கால்கள், அமர்ந்தே வேலை செய்தல், உடற்பயிற்சி இல்லாமல் உடலில் ஏகப்பட்ட நோய்கள் என நடமாடும் மக்கள் நிறைந்த சமூகமாகி விட்டது. துரித உணவகங்கள் பெருகி விட்ட அதே நேரத்தில் மருத்துவமனைகளும் பெருகி விட்டன. அவற்றை அதிகமாக உண்டால் அடுத்து போக வேண்டியது மருத்துவமனை நோக்கித்தான்.

யாரைச் சொல்வது? எதைச் செய்வது?நினைத்த நேரத்தில் கண்ட உணவுகளை வாங்கி உண்ணாமல், வீட்டில் செய்த நம் பாரம்பரிய உணவுகளை அளவோடு உண்டு, உடற்பயிற்சி செய்து, கூடுதலாக நடைப் பயிற்சியும் செய்து ஆரோக்கியத்துடன் வாழ்வோம்.லை நேரத்தில் இரவு உணவை முடித்துக்கொண்டு ஒன்பது மணிக்கு உறங்கச்செல்லும் வழக்கம் வைத்திருந்தனர். தற்போது நிறைய பெருநகரங்களில் விடிய விடிய பிரியாணி கடைகள் திறந்திருப்பதும், அங்கே வாலிபர்கள் கூட்டம் அலை மோதுவதும் கண்கூடு. அவற்றைக் காணும்போது வேதனையே எழுகிறது.

துரித உணவு உண்பதால் ஏற்படும் நோய்கள்:

சிக்கு உண்பது போய் ருசிக்கும், ஆசைக்கும் உண்ணும் காலமாகி விட்டது.

மாயாபஜார் படத்து ரங்காராவ் போல இஷ்டப்பட்டதை நினைத்த நேரத்தில் உண்கிறோம். அடிக்கடி பொரித்த இறைச்சி வகைகள், ஃபிரன்ச் ஃபிரை போன்ற உணவுகளை ஆர்டர் செய்து உண்கிறோம். துரித உணவுகளில் அதிக அளவு சர்க்கரை, உப்பு, சுத்திகரிக்கப் பட்ட கார்போஹைட்ரேட், கெட்ட கொழுப்பு, அதிக அளவு ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. மேலும் பழைய கெட்டுப்போன இறைச்சி வகைகளையும் உணவகங்கள் விற்பனை செய்யத் தவறுவதில்லை.

இவற்றை உண்பதால் சிறுவயதிலேயே சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறுகள், இருதயநோய், இளவயதில் மாரடைப்பு, புற்றுநோய் போன்றவை தாக்குகின்றன. ஏழு எட்டு வயது சிறுவர் சிறுமிகள் கூட அதீத உடல் பருமனோடு இருக்கின்றனர். ஒன்பது பத்து வயதிலேயே பூப்படைதல், பி.ஸி.ஓ டி, கருத்தரித்தலில் சிக்கல்கள் என நீள்கிறது பட்டியல்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com