நியூயார்க் தெருவில் 10 அடி உயரத்தில் உருண்டு வந்த பிரம்மாண்ட பந்து..! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்..!

சாலையில் உருண்டு வந்த விசித்திரமான பொருள்!: நியூயார்க்கை பரபரப்பாக்கிய 'Tumblehair' பின்னணி என்ன?
A 10ft ball of real human hair is rolling through New York
A 10ft ball of real human hair is rolling through New YorkSource:https://www.creativeboom.com/
Updated on

நியூயார்க் நகரின் பரபரப்பான தெருவில் திடீரென 10 அடி உயரத்தில் பிரம்மாண்டமான தலைமுடிப் பந்து ஒன்று உருண்டு வந்தால் எப்படி இருக்கும்?

இதைப் பார்த்த மக்கள் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்துபோனார்கள். சமூக வலைத்தளங்களிலும் இந்த வித்தியாசமான காட்சி வேகமாகப் பரவியது. ஆனால் இது இயற்கையாக உருவான விசித்திரமான பொருள் அல்ல; ஒரு பிரபல அழகு சாதன நிறுவனத்தின் திட்டமிட்ட விளம்பர முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன நடந்தது?

K18 என்ற முடி பராமரிப்பு நிறுவனம், தனது புதிய FutureIQ™ Biomimetic Hair Longevity Serum-ஐ அறிமுகப்படுத்தும் விதமாக நியூயார்க் நகரில் “Tumblehair” எனப் பெயரிடப்பட்ட பிரம்மாண்டமான முடிப் பந்தை உருவாக்கியது. சுமார் 10 அடி உயரம் கொண்ட இந்தப் பந்து உண்மையான மனித தலைமுடி உள்ளிட்ட முடி இழைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாலையில் உருட்டிச் செல்லப்பட்ட இந்தப் பிரம்மாண்டமான பந்தைக் கண்டு பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர்.சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களின்படி, இந்த நிறுவல் சுமார் 68 கிலோ எடை கொண்டதாகக் கூறப்பட்டது.

இதன் நோக்கம் வெறுமனே மக்களை ஆச்சரியப்படுத்துவது மட்டுமல்ல. தினசரி முடி உதிர்வு மற்றும் தலைமுடியின் வயதாதல் குறித்து மக்களின் கவனத்தை ஈர்ப்பதுடன், K18 நிறுவனத்தின் புதிய தயாரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.

புதிய தயாரிப்பு என்ன செய்கிறது?

K18 அறிமுகப்படுத்திய FutureIQ™ serum, முடி உதிர்வு, இளநரை மற்றும் தலைமுடி மற்றும் உச்சந்தலையின் வயதாதல் போன்ற பிரச்சினைகளை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நிறுவனத்தின் தகவலின்படி, MultiVital™ தொழில்நுட்பம், biomimetic peptides மற்றும் antioxidants ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த serum உருவாக்கப்பட்டுள்ளது.

தலை முடிப் பந்தின் பின்னணி என்ன?

இந்த விசித்திரமான காட்சி சமூக வலைத்தளங்களில் பரவிய போது பலரும் இதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.. தலைமுடி இவ்வாறு ஒன்றாகச் சேர்ந்து மிகப் பெரிய பந்தாக மாறுவது அரிதான நிகழ்வாக இருந்தாலும் முற்றிலும் சாத்தியமற்றது அல்ல.. தலைமுடியின் தன்மை காரணமாக அது மற்ற பொருட்களுடன் எளிதில் சிக்கிக் கொள்ளும்.. குறிப்பாக நீண்ட தலைமுடி கள் ஒன்றோடொன்று பின்னிக் கொள்ளும் போது அவற்றைச் சுற்றி தூசி மற்றும் சிறிய கழிவுகள் படிந்து அளவு பெரிதாகலாம்..

மனிதர்கள் அதிகம் வசிக்கும் நகர்ப்புறங்களில் தலைமுடி போன்ற சிறிய கழிவுகள் பல்வேறு வழிகளில் சுற்றுச்சூழலில் சேர்கின்றன..சலூன்கள் முடி வெட்டும் நிலையங்கள் மட்டுமின்றி வீடுகளில் சீவும் போது உதிரும் தலைமுடிகளும் குப்பையுடன் கலந்து விடுகின்றன..

அவற்றைத் தனியாக சேகரித்து முறையாக அகற்றுவது சுற்றுப்புறத் தூய்மையைப் பாதுக்காக்க உதவும்.. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் சேகரிக்கப்படும் தலைமுடிக்கு சில பயன்களும் உள்ளன.. எண்ணெய் கசிவுகள் ஐ உறிஞ்சுவதற்கும் சில சுற்றுச்சூழல் சார்ந்த தயாரிப்புகளை உருவாக்குவதற்கும் மனித தலைமுடி பயன்படுத்தப் படுகிறது..

இதனால் குப்பையாகத் தூக்கி எறியப்படும் தலைமுடியைக் கூட சரியான முறையில் சேகரித்தால் பயனுள்ள வளமாக மாற்ற முடியும்.. நியூயார்க் நகரில் காணப் பட்ட இந்தப் பெரிய தலைமுடிப் பந்து விநோதமான காட்சியாக மட்டும் அல்லாமல் நாம் அன்றாடம் உருவாக்கும் கழிவுகளைப் பொறுப்புடன் கையாள வேண்டும் என்ற முக்கியமான செய்தியையும் நினைவூட்டுகிறது.

Why A Giant 10-Foot Hairball Rolled Through New York City's Streets
Why A Giant 10-Foot Hairball Rolled Through New York City's Streetssource:news18

நகர வாழ்க்கை சொல்லும் ஒரு பாடம்...

இந்த சம்பவம் நகரங்களில் குப்பை மேலாண்மை எவ்வளவு முக்கியம் என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.. பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதைகள், சாலைகள் மற்றும் பொது இடங்களில் சிறிய கழிவுகளைக் கூட அலட்சியமாக வீசாமல் இருப்பது அவசியம்... குறிப்பாக தலைமுடி போன்ற பொருட்கள் கண்ணுக்கு தெரியாமல் குவிந்தாலும் அவை மற்ற கழிவுகளுடன் சேர்ந்து வித்தியாசமான வடிவத்தை உருவாக்கலாம்..

ஒரு சிறிய அளவு தலைமுடி தனியாகப் பார்த்தால் பெரிய பிரச்சினையாகத் தெரியாது.. ஆனால் தொடர்ந்து சேரும் போது அதன் அளவும் தாக்கமும் அதிகரிக்கலாம்.. இதைப் போன்ற சம்பவங்கள் நகர்ப்புற மக்களுக்கு ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன.. நாம் உருவாக்கும் ஒவ்வொரு கழிவுக்கும் சரியான இடமும் முறையான அகற்றும் முறையும் இருக்க வேண்டும்.

தூய்மையான நகரம் என்பது மாநகராட்சி பணியாளர்களின் பொறுப்பு மட்டும் அல்ல.. பொதுமக்களின் ஒத்துழைப்பும் அதற்கு மிகவும் அவசியம்.. நியூயார்க் நகரின் இந்த விநோதமான தலைமுடிப் பந்து அன்றாட வாழ்க்கையில் நாம் கவனிக்காமல் கடந்து செல்லும் சிறிய விஷயங்கள் கூட எப்படி பெரியதாக மாறக் கூடும் என்பதை உணர்த்துகிறது.

நியூயார்க் தெருக்களில் உருண்ட இந்த பிரம்மாண்டமான “Tumblehair” பார்ப்பதற்கு வினோதமாக இருந்தாலும், அதன் பின்னால் திட்டமிட்ட விளம்பர யுக்தி உள்ளது. ஒரு சாதாரண தயாரிப்பு அறிமுகத்தை மக்கள் மறக்க முடியாத அனுபவமாக மாற்றிய இந்த முயற்சி, சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. வித்தியாசமான விளம்பரங்கள் மூலம் மக்களின் கவனத்தை ஈர்க்கும் புதிய அணுகுமுறைக்கு இது ஒரு சுவாரஸ்யமான உதாரணமாக அமைந்துள்ளது.

" சிறிய தலைமுடிப் பந்தாகத் தொடங்கிய இந்த வினோதம் தூய்மையும் பொறுப்பும் நம் நகரங்களின் எதிர்காலத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துகிறது".

இதையும் படியுங்கள்:
சொத்துக்காக மட்டுமே பாசமா? பெற்றோரை கவனிக்காத மகனுக்கு நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு!
A 10ft ball of real human hair is rolling through New York
logo
Kalki Online
kalkionline.com