

இந்தியாவில் டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்தி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 'ஜியோபாரத்' (JioBharat) 4ஜி போன்களுக்கு சிறப்புப் பண்டிகைக் காலச் சலுகையை அறிவித்துள்ளது.
பண்டிகைக் காலத்தில் மக்கள் 2ஜியில் இருந்து 4ஜிக்கு மாற வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரிலையன்ஸ் ஜியோவின் 10-ஆம் ஆண்டு நிறைவு மற்றும் பண்டிகைக் காலச் சலுகையாக, ஜியோபாரத் 4ஜி போன் ரூ. 1,499 என்ற தொடக்க விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தத் தொகையில் 6 மாதங்களுக்கான இலவச ரீசார்ஜ் பலன்களும் அடங்கும்.
தற்போதுள்ள பல 2ஜி பயனர்கள் மாதந்தோறும் சுமார் ரூ.199 அளவிலான ரீசார்ஜ் செய்து வருகின்றனர். இதற்காக மட்டும் ஆறு மாதத்திற்கு சுமார் ரூ.1,200 செலவாகும். இதனுடன் ஒப்பிடும்போது, ஜியோவின் புதிய சலுகையில் ரூ.1,499க்கு 4ஜி திறன் கொண்ட ஜியோபாரத் போனும், ஆறு மாத இணைப்பு பலன்களும் கிடைக்கின்றன. ஏற்கனவே செலவாகும் ஆறு மாத இணைப்புத் தொகையை கணக்கில் எடுத்தால், புதிய போனுக்கு கூடுதலாக செலுத்த வேண்டிய பயனுள்ள தொகை ரூ.299 ஆகும் என்று ஜியோ கூறுகிறது. இதனால் அடிப்படை போனில் இருந்து அதிக வசதிகள் கொண்ட 4ஜி போனுக்கு மாறுவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது.
சலுகையின் முக்கிய விவரங்கள்:
* 2.4 அங்குலத் திரை, 2000mAh திறன் கொண்ட பேட்டரி மற்றும் சக்திவாய்ந்த 4ஜி இணைப்புத் திறனுடன் இந்த போன் அமைகிறது.
* இந்த போனின் விலை ரூ. 1,499 (இதன் உண்மையான MRP விலை ரூ. 2,599 ஆகும்).
* முன்பணமாக ரூ. 1,499 செலுத்த வேண்டும். 6 மாத ரீசார்ஜ் மதிப்பு (சுமார் ரூ. 1,200) போக, போனின் (நிகர) விலை ரூ. 299 மட்டுமே.
ஜியோவின் கணக்கீட்டின்படி, 6 மாதங்களுக்கான குறைந்தபட்ச ரீசார்ஜ் செலவு ரூ. 1,200 வரை மிச்சமடைவதால், இந்தப் போனின் பயனுள்ள விலை (Effective price) ரூ. 299 மட்டுமே எனக் கூறப்படுகிறது.
* இந்தச் சலுகை புதிய மற்றும் ஜியோ பயனர்கள் மற்றும் போர்ட் (Port-in) செய்யும் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.
* இந்தச் சலுகை அக்டோபர் 20, 2026 வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும்.
* மேலும், வாடிக்கையாளர்களுக்கு Ajio, AbhiBus மற்றும் Zoomin போன்ற நிறுவனங்களின் தள்ளுபடி கூப்பன்கள் (Vouchers) வழங்கப்படுகின்றன.
6 மாதங்களுக்கு கிடைக்கும் பலன்கள் :
* மாதந்தோறும் 14 ஜிபி டேட்டா (Data) (நாளைக்கு 0.5 ஜிபி வரை).
* வரம்பற்ற (Unlimited) எச்டி வாய்ஸ் கால் (Voice Calls) வசதி.
* மாதத்திற்கு 300 எஎம்எஸ் (SMS).
* ஜியோ தொலைக்காட்சி மூலம் 500க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்களைப் பார்க்க முடியும்.
* இதில் ஜியோ டிவி (JioTV) மற்றும் ஜியோபே (JioPay) மூலம் யுபிஐ (UPI) பணப் பரிவர்த்தனைகள் செய்யும் வசதி மற்றும் சவுண்ட் பாக்ஸ் (Sound Box) அம்சம்.
* குடும்பத்தினரின் இருப்பிடத்தைக் கண்டறியும் வசதி மற்றும் பாதுகாப்பான அழைப்புகளுக்கான ஜியோ சேஃப்டி ஷீல்ட் ஆகியவை இதில் உள்ளன.
* ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) மூலம் நேரலைக் கிரிக்கெட் மற்றும் திரைப்படங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கான ஜியோ ஹாட்ஸ்டார் வசதி, ஜியோசாவ்ன் மூலம் கோடிக்கணக்கான பாடல்கள் மற்றும் இசை உள்ளடக்கங்களும் கிடைக்கின்றன.
இந்தியாவில் உள்ள அனைவரையும் டிஜிட்டல் உலகிற்கு அழைத்துச் செல்ல ஜியோ அறிமுகப்படுத்தியிருக்கும் இந்தச் சலுகை, இந்த பண்டிகைக் காலத்தில் 2ஜி பயனர்களுக்கு கிடைத்த ஒரு சிறப்பு பரிசாகும்.