#BREAKING: வெளியானது +2 ரிசல்ட்.. ஒரே நொடியில் ரிசல்ட் பார்ப்பது எப்படி?

12th Results
12th Results
Updated on

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 2-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை +2 தேர்வு நடைபெற்றது. +2 தேர்வுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 9-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரை நடைபெற்றது. சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு முன்பே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட +2 தேர்வு முடிவுகள், திட்டமிட்டபடியே இன்று (மே 8) வெளியாகி உள்ளது.

பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் உள்பட +2 தேர்வுக்கு 8,27,475 மாணவர்கள் விண்ணப்பித்தனர். ஆனால் இதில் 8,16,289 மாணவர்கள் மட்டுமே தேர்வை எழுதினர். 8,319 பள்ளி மாணவர்கள் மற்றும் 1,600 தனித்தேர்வர்கள் என மொத்தம் 9,919 பேர் தேர்வை எழுதவில்லை.

பள்ளிக்கல்வித் துறை சந்திரமோகன் ஐஏஎஸ், பிளஸ் டூ தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

தேர்ச்சி பெற்ற மாணவர்கள் - 7.53 லட்சம்

தேர்ச்சி விகிதம் - 95.20%

மாணவிகள் - 97%

மாணவர்கள் - 95.19%

இதையும் படியுங்கள்:
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள் - என்னென்ன வாய்ப்புகள்? மாணவர்களே, இத தெரிஞ்சுக்கோங்க!
12th Results

இன்று வெளியாகி உள்ள +2 தேர்வு முடிவுகளை மாணவர்கள் ​tnresults.nic.in, dge.tn.gov.in, results.digilocker.gov.in உள்ளிட்ட இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மேலும் பள்ளிகளில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு மாணவர்களின் மதிப்பெண் பட்டியில் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது.

பள்ளியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து வாட்ஸ்அப்பில் 7845252525 என்ற எண்ணிற்கு 'Hi' என அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்கள் தேர்வு முடிவுகளைப் பார்க்கலாம்.

ஆன்லைனில் தேர்வு முடிவுகளை பார்க்கும் வழிமுறை:

1. ​முதலில் tnresults.nic.in, dge.tn.gov.in உள்ளிட்ட இணையதளங்களுக்குச் செல்ல வேண்டும்.

2. HSC (+2) Examination Results March 2026 என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

3. மாணவர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட வேண்டும்.

4. விவரங்களை சமர்ப்பித்த உடன், மாணவர்களின் +2 மதிப்பெண் பட்டியல் திரையில் தெரியும்.

TN HSC Results என்ற மொபைல் செயலி வழியாகவும் மாணவர்கள் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். அதோடு DigiLocker வழியாக தற்காலிக சான்றிதழை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு முடிவுகள் குறித்த சந்தேகங்களுக்கு மாணவர்கள் 1441 என்ற எண்ணை அழைக்கலாம் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
#BREAKING: இனி இந்த படிப்பு கிடையாது.! B.Ed படிப்புகளில் அதிரடி மாற்றம்.!
12th Results

எப்போதும் போலவே இவ்முறையும் மாணவர்களை விட மாணவிகளை அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் 98.87 சதவீதத்துடன் ஈரோடு மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்தடுத்த இடஙகளில் சிவகங்கை, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்கள் இடம் பிடித்துள்ளன. மாணவர்கள் வயிறு மாணவிகள் 93.19 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 489 ஆக உயர்ந்துள்ளது.

அரசு பள்ளிகள் 92.16%, அரசு உதவி பெறும் பள்ளிகள் 96.14%, தனியார் பள்ளிகளில் 98.72% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மே 13 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். மதிப்பெண் குறைந்த மாணவர்கள் யாரும் மனம் தளராமல் அடுத்தடுத்த முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என பள்ளி கல்வித்துறை செயலாளர் சந்திரசேகர் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com