AI மூலம் அக்னிவீர் இணையதளத்தை ஹேக் செய்த பள்ளிச் சிறுவன்: போலீஸிடம் சிக்கியது எப்படி?

மத்திய உள்துறை அமைச்சக சோதனை தளத்தில் ஊடுருவல்; டெலிகிராம் மூலம் விற்க நடந்த முயற்சி முறியடிப்பு.
அக்னிவீர் தகவல்கள்
Agniveer
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

நாட்டில் சைபர் கை மோசடிகள் அதிகரித்து வரும் சூழலில், 14 வயதே நிரம்பிய சிறுவன் அக்னி வீர் வீரர்களின் தரவுகளை ஹேக் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தரவுகளை ஹேக் செய்த பிறகு அதனை டார்க் வெப்பில் விற்பனை செய்யவும் அந்த சிறுவன் முயற்சித்து இருக்கிறான். ஆனால் அதற்குள் இந்தத் தகவலை டெல்லி போலீசார் கண்டுபிடித்து விட்டதால், தரவுகள் கசிவது தடுத்து நிறுத்தப்பட்டது.

ஹரியானாவின் பல்லப்கர் பகுதியில் வசிக்கும் அந்த சிறுவன், மத்திய அரசு இணையதளத்தையே ஹேக் செய்திருப்பது போலீஸார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் 4,000 அக்னிவீர் வீரர்களின் தரவுகள் என்னிடம் இருப்பதாகவும், அதனை 500 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யத் தயாராக இருப்பதாக டார்க் வெப் தளத்தில் பதிவிட்டுள்ளான். இதனை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்

ஹேக் செய்யப்பட்ட தளம்:

முன்னாள் அக்னிவீர் வீரர்கள் தங்களது விவரங்களைப் பதிவு செய்து, அரசுத் துறைகளில் வேலைவாய்ப்புகளைத் தேடும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) சார்பில் சோதனை இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த இணையதளத்தை ஹேக் செய்து தான் அக்னிவீர் வீரர்களின் தகவல்களை எடுத்துள்ளான் ஹரியானா சிறுவன்.

AI தொழில்நுட்பம் காரணமா?

மத்திய அரசு இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் இருந்த கோடிங் குறைபாடுகளை சிறுவன் கண்டறிந்துள்ளான். இதனைத் தொடர்ந்து ஏஐ கருவிகளைப் பயன்படுத்தி இணையதளத்திற்குள் எளிதாக ஊடுருவி, அரசு வேலை தொடர்பான விண்ணப்பங்கள் சேகரிக்கப்பட்ட கணக்குகளின் கடவுச்சொற்களை சட்ட விரோதமாக எடுத்துள்ளான் சிறுவன்.

டார்க் வெப்பில் விற்க முயற்சி:

மத்திய அரசு இணையதளத்தில் இருந்து திருடப்பட்ட சுமார் 4,000 அக்னிவீர் வீரர்களின் தரவுகள் மற்றும் இணையதளத்தின் நிர்வாகி கடவுச்சொற்கள் உள்பட பல தரவுகள் தன்னிடம் இருப்பதாக டார்க் வெப் தளத்தில் விளம்பரம் செய்தான். இதற்கு 500 அமெரிக்க டாலர்களை விலையாக நிர்ணயித்து, தன்னை டெலிகிராம் செயலியில் தொடர்பு கொள்ளுமாறு முகவரியை பகிர்ந்துள்ளான்.

அரசு இணையதளத்தை ஹேக் செய்த சிறுவன்
Hacking
இதையும் படியுங்கள்:
என்னது... கனவையும் வீடியோவா பார்க்கலாமா? உலகையே மிரள வைத்த புதிய ஏஐ!
அக்னிவீர் தகவல்கள்

காவல்துறையின் நடவடிக்கை:

டெல்லி காவல்துறையின் ‘இன்டெலிஜென்ஸ் ஃபியூஷன் அண்ட் ஸ்ட்ராடஜிக் ஆபரேஷன்ஸ்’ என்ற சிறப்புப் பிரிவு, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.

தனியார் பள்ளியில் பயிலும் அந்த சிறுவனின் மின்னணு சாதனங்கள் அனைத்துயும் பறிமுதல் செய்து காவல் துறையினர் சோதனையிட்டனர். விரைவாக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு தான் சிறுவன் இப்படி செய்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 2 மணி நேர விசாரணைக்குப் பிறகு, சிறார் நீதி விதிகளின் படி சிறுவன் விடுவிக்கப்பட்டான்.

தரவுகள் விற்பனையாவதற்கு முன்பே போலீஸார் அதனைத் தடுத்தி நிறுத்தியதால், பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது. சிறுவனிடம் இருந்து மீட்கப்பட்ட தரவுகள் அக்னி வீரர்களுடையது தானா மற்றும் ஹேக் செய்யப்பட்ட இணையதளம் அதிகாரப்பூர்வமானதா என்பதை உறுதிப்படுத்த டெல்லி காவல் துறையினர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அரசு இணையதளத்தையே ஹேக் செய்யும் அளவிற்கு திறமை படைத்த சிறுவன், அதனை நல்லவற்றுக்கு பயன்படுத்தினால், முன்னேறி இருப்பான். ஆனால் பணத்தின் மீதான ஆசையால், தவறான பாதைக்குச் சென்று விட்டான். இருப்பினும் இதிலிருந்து தன் தவறை உணர்ந்து, தனது திறமையை நல்ல பாதையில் செலுத்தினால் அவனுடைய எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு: ரூ.2 லட்சம் LIC காப்பீடு யாருக்கெல்லாம் கிடைக்கும்? புதிய விதிகள் என்ன?
அக்னிவீர் தகவல்கள்