காங்கோவில் மர்ம நோய் ஒன்று பரவி வரும் நிலையில், கடந்த 10 நாட்களில் அந்த நோய்க்கு சுமார் 143 உயிரிழந்துள்ளனர்.
சமீபக்காலமாக உலகெங்கிலும் பல நோய்கள் பரவி வருகின்றன. தொடுதல் மூலமாக, காற்று மூலமாக பரவும் நோய் என்பதால் உலகளவில் விரைவில் பரவும் என எச்சரிக்கப்படுகிறது. ஆனால், அதற்குள் அந்த நோய்களின் வீரியம் குறைந்துவிடுகிறது, அல்லது அதற்கான மருந்தை தயாரித்துவிடுகின்றனர். இதனால் நோய் பரவுதல் குறைகிறது.
அந்தவகையில் தற்போது காங்கோவில் ஒரு மர்ம நோய் பரவி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, சளி, உடல்வலி போன்ற அறிகுறிகள் தோன்றும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை 200க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 143 பேர் பலியாகியுள்ளனர்.
அவர்களின் உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, நோயை கண்டறிய பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் (WHO) இந்த நோய் குறித்த விரிவான விளக்கத்தை வெளியிட்டுள்ளது.
406 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அதில் இந்த நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 43 பேர் என்றும், 100 பேர் சுகாதார நிலையங்களில் இறந்திருக்கிறார்கள் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் முதல் வழக்கு அக்டோபர் 24ம் தேதி கண்டறியப்பட்டது. நவம்பரில் அதிகம் பேருக்கு இந்த நோய் பரவியதாக சொல்லப்பட்டுள்ளது. கடுமையான நிமோனியா, காய்ச்சல், கரோனா, தட்டம்மை, ஈ.கோலை மற்றும் மலேரியாவிலிருந்து வரும் ஹீமோலிடிக் யூரிமிக் நோய்க்குறி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை காரணிகளாக உள்ளன.
ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இந்த நோய் தாக்குகிறதாம்.
மேலும் இந்த நோய்க்கான உண்மையான காரணம் எதுவும் தெரியவரவில்லை. ஆனால், குவாங்சி மாகாணத்தில் உணவுப் பாதுகாப்பு நிலைமை சமீபத்தில் மோசமடைந்துள்ளது. இதனால் கூட இந்த தொற்றானது வேகமாக பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவான நோய்களுக்குக் கூட போதிய மருந்துகள் இல்லை என்றும், தடுப்பூசி கவரேஜ் குறைவாக இருப்பதாகவும், சரியான பரிசோதனை முறைகள் இல்லை என்றும் கூறப்படுகிறது.