160 கோடி ‘பாஸ்வேர்டுகள்’ திருட்டு- மிகப்பெரிய அளவில் தரவு விதிமீறல்... பயனாளர்கள் உஷார்!

உலக அளவில் இதுவரை இல்லாத வகையில் 160 கோடி பாஸ்வேர்டுகள் கசிந்துள்ளன. இதன் மூலம் மிகப்பெரிய அளவில் தரவு விதிமீறல் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
Cyber threat
Cyber threat
Published on

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், இணையதள வசதியும், சமூக வலைத்தள கணக்குகளும் நம் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறிவிட்டது. இவை நண்பர்கள், குடும்பத்தினர் என வெறும் பொழுது போக்குக்காக மட்டுமின்றி வேலை, தொழில்முறை என அத்தியாவசிய பணிகளுக்கும் இந்த கணக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.

இன்றைய இளம் தலைமுறையினர் உணவு, உறக்கம் கூட இல்லாமல் இருந்து விடுவார்கள், ஆனால் சமூக ஊடகங்களை பார்க்காமல் அவர்களால் இருக்கவே முடியாது. அந்த அளவிற்கு சமூக ஊடகம் மக்களின் உணர்வுடன் கலந்து விட்டது. என்னதான் சமூக ஊடகங்களில் மூழ்கி இருந்தாலும் உங்களையும் உங்கள் தகவல்களையும் பாதுகாக்க, உங்கள் சமூக ஊடக கணக்குகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். எனவே சமூக வலைதளத்தை பயன்படுத்தும் பயனாளர்களின் கணக்குகளை பாதுகாக்க ரகசிய கடவுச்சொல் எனப்படும் ‘பாஸ்வேர்டுகள்’ பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த ரகசியமான பாஸ்வேர்டுகள் கசிந்து பெருமளவில் தரவு விதிமீறல் நடந்திருப்பது தற்போது கண்டறியப்பட்டு உள்ளது. இது சமூக வலைத்தள பயனாளர்களை அதிர்ச்சியடையச்செய்துள்ளது.

‘சைபர்நியூஸ்’ நடத்திய விசாரணையில் உலக அளவில் 160 கோடிக்கு அதிகமான பாஸ்வேர்டுகள் கசிந்து இருப்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி இது இதற்கு முன் இல்லாத, மிகப்பெரிய தரவு விதிமீறல் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 30 டேட்டாபேஸ் மூலம் தற்போது, ​​ஆப்பிள், ஜிமெயில், பேஸ்புக் கணக்குகள் மற்றும் கிட்ஹப் மற்றும் டெலிகிராம் போன்ற உடனடி செய்தி தளங்கள் மற்றும் வணிக மற்றும் அரசு போர்டல்கள் (government portals)உட்பட கிட்டத்தட்ட அனைத்து முக்கிய தளங்களும் இந்த மீறலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் இந்த தரவுகளின் உரிமையாளர்களை அடையாளம் காண முடியவில்லை என சைபர்நியூஸ் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
சைபர் குற்றம்: உடனே எடுங்க 5 லட்சத்த... அந்த திக் திக் நொடிகள்!
Cyber threat

உலகம் முழுவதும் சுமார் 55 கோடி பேர் இணையதளத்தை பயன்படுத்தும் நிலையில், 160 கோடிக்கு மேற்பட்ட பாஸ்வேர்டுகள் கசிந்திருப்பதை பார்க்கும் போது ஒவ்வொருக்கும் சொந்தமான ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளில் இருந்து இந்த தரவுகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. குறைந்த தொழில்நுட்ப அறிவும் சிறிய அளவிலான பணமும் உள்ளவர்கள் கூட இந்த கடவுச்சொற்களை டார்க் வெப்பில் அணுக முடியும் என்று அறிக்கைகள் கூறுகின்றன.

இந்த நிகழ்வை பார்க்கும் போது அதிகளவு சமூக ஊடகத்தை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளை போன்ற தீமைகளும் நிறைந்துள்ளதை குறிக்கிறது. அந்த வகையில் அதிகரித்து வரும் சைபர் அச்சுறுத்தல்கள் மற்றும் தரவு மீறல்களுடன், உங்கள் சமூக ஊடக கணக்குகளைப் பாதுகாப்பது இதற்கு முன்பு இருந்ததை விட மிக முக்கியமானதாகிவிட்டது.

எனவே மேற்படி கணக்குகளை பாதுகாப்பதற்கு உடனடியாக அனைத்து ஆன்லைன் கணக்குகளின் பாஸ்வேர்டுகளையும் மாற்ற வேண்டும் என்று சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

தனித்துவமான, வலுவான கடவுச்சொற்களை உருவாக்க கடவுச்சொல் உருவாக்கிகளை பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு கணக்கிற்கும் தனித்துவமான மற்றும் சிக்கலான கடவுச்சொற்களைப் பயன்படுத்தவும். இதில் எழுத்துக்கள், எண்கள் மற்றும் குறியீடுகள் கலந்திருக்க வேண்டும்.

இதைத்தவிர பயனாளர்கள் தங்கள் சமூக வலைத்தள கணக்குகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும் ‘Have I Been Pwned’ எனக்கேட்டு தங்கள் கணக்குகள் பாதுகாப்பாக உள்ளதா? என்பதை சரிபார்க்க வேண்டும் என்றும், உங்கள் கடவுச்சொல்லில் ஏதேனும் மீறல்கள் இருந்தால், உடனடியாக உங்கள் கடவுச்சொல்லை மாற்றவும், பயன்படுத்தப்படாத கணக்குகளை நீக்கவும் மற்றும் உங்கள் ஆன்லைன் கணக்குகளைப் பாதுகாக்க சிறந்த கடவுச்சொல் ஒன்றைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

பாதுகாப்பான கடவுச்சொற்களை பயன்படுத்துமாறு கூகிள் ஏற்கனவே மக்களை அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக SMS அல்லது மின்னஞ்சல்கள் மூலம் அனுப்பப்படும் இணைப்புகளைக் கிளிக் செய்வதைத் தவிர்க்குமாறு FBI பொதுமக்களை எச்சரித்துள்ளது. மேலும் டார்க் வெப் கண்காணிப்பு கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் தகவல் கசிந்துள்ளதா என்பதைச் சரிபார்ப்பதும் நல்லது.

இதையும் படியுங்கள்:
சைபர் மோசடிகளைத் தடுக்க வந்தாச்சு புதிய தொழில்நுட்பம்!
Cyber threat

உலக அளவில் இதுவரை இல்லாத அளவாக 160 கோடிக்கு அதிகமான பாஸ்வேர்டுகள் கசிந்திருப்பது உலக மக்களிடையே மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com