

மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் (ஜூனியர் இன்ஜினியர் - JE) பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி (SSC) அறிவிப்புகளை வெளியிட்டு, தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் மத்திய பொதுப்பணித்துறை (CPWD), மத்திய நீர் ஆணையம் (CWC), எல்லை சாலைகள் ஆணையம் (BRO), தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகம், இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்ட மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்வின் மூலம் மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள மொத்தம் 1,748 தற்காலிக காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மத்திய அரசு வேலைக்காக காத்திருக்கும் சிவில், மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் பிரிவுகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும். அதற்கு யாரெல்லாம் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம், ஊதியம் மற்றும் கல்வித்தகுதி என்ன? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம் வாங்க.
மொத்த பணியிடங்கள்: 1,748
பிரிவுகள்: சிவில் (Civil), மெக்கானிக்கல் (Mechanical), எலக்ட்ரிக்கல் (Electrical) மற்றும் டெலிகாம் (Telecom) பிரிவுகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்தவர் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி: கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் தொடர்புடைய பிரிவில் பொறியியல் பட்டம் (B.E / B.Tech) அல்லது 3 ஆண்டு டிப்ளமோ (Diploma) முடித்திருக்க வேண்டும். பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வித் தகுதி மாறுபடும். சில பதவிகளுக்கு முன்அனுபவம் தேவைப்படலாம்.
ஊதியம்: தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு மத்திய அரசின் 7-வது ஊதிய கமிஷன் படி மாதம் ரூ.35,400 முதல் 1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு: 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், அரசு விதிகளின்படி எஸ்சி மற்றும் எஸ்டி (SC/ST)பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.
தேர்வு முறை: சிபிடி-1 மற்றும் சிபிடி-2 என இரண்டு கட்டங்களாகக் கணினி வழித் தேர்வுகள் (Computer Based Examination) நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்குச் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, தகுதியான விண்ணப்பதாரர்கள் இறுதி செய்யப்படுவார்கள்.
தேர்வு மையம்: நாடுமுழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்கு சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய நகரங்களிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.09.2026 (இரவு 11:00 மணி வரை)
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம் மட்டும்
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு தகுதியும், திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ https://ssc.gov.in/ என்ற இணையதள பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அல்லது 'mySSC' மொபைல் செயலி மூலம் சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்பக் கட்டணமாக வெறும் 100 ரூபாய் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெண்கள், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
கட்டணம் செலுத்த கடைசி நாள்: செப்டம்பர் 23
திருத்தங்களுக்கான கால அவகாசம் (Correction Window): செப்டம்பர் 28 முதல் செப்டம்பர் 30 வரை (இரவு 11 மணி வரை). இந்தக் கால அவகாசத்தில் ஒரு விண்ணப்பதாரர் விண்ணப்பத்தை இரண்டு முறை திருத்தி மீண்டும் சமர்ப்பிக்கலாம்.
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்: https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_adv_je_2026.pdf
ஒரு லட்சத்திற்கும் மேல் ஊதியம் மற்றும் மத்திய அரசுப் பணி என்ற கௌரவத்தோடு உங்கள் வாழ்வைத் தொடங்க இது ஒரு அரிய வாய்ப்பாகும். தகுதியுள்ள பட்டதாரிகள் காலதாமதம் செய்யாமல் இப்போதே விண்ணப்பிக்கத் தயாராகுங்கள்.