தேர்வு கிடையாது; பெல் நிறுவனத்தில் 530 பணியிடங்கள்...மத்திய அரசு வேலை! உடனே விண்ணப்பியுங்கள்..!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் ஒன்றான பெல் (BHEL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Bharat Heavy Electricals Limited
Bharat Heavy Electricals Limitedimage credit-tradebrains.in
Updated on

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் ஒன்றான பெல் (BHEL) எனப்படும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 530 அப்ரெண்ட்சீஸ் (Apprentice) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வு எதுவும் கிடையாது. மெரிட் லிஸ்ட் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்கள் திருச்சியிலேயே பணியமர்த்தப்படுவர். ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.12,300 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் செப்டம்பர் 12-ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.

காலிப்பணியிடங்கள் :

வியாபாரப் பயிற்சி (Trade Apprentice): ஐடிஐ முடித்தவர்கள்: மொத்தம் 380 பணியிடங்கள்

ஃபிட்டர் - 125

வெல்டர் - 115

எலக்ட்ரீஷியன் - 30

டர்னர் - 20

மெஷினிஸ்ட் - 20

இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் -7

மோட்டார் மெக்கானிக் - 12

தொழில்நுட்பப் பயிற்சி (Technician Apprentice): டிப்ளமோ முடித்தவர்கள்: மொத்தம் 60 பணியிடங்கள்

மெக்கானிக்கல் என்ஜினியரிங் - 40

கம்ப்யூட்டர் என்ஜினியரிங் - 6

சிவில் என்ஜினியரிங் - 5

எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் - 3

எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் - 5

பட்டதாரிப் பயிற்சி (Graduate Apprentice): டிகிரி, என்ஜினியரிங் முடித்தவர்கள்: மொத்தம் 90 பணியிடங்கள்

மெக்கானிக்கல் என்ஜினியரிங் 50,

சிவில் என்ஜினியரிங் - 8

கம்ப்யூட்டர் சயின்ஸ் - 3

எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் - 3

எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் - 3

அக்கவுண்டன்ட் - 13

கல்வித்தகுதி :

ஐடிஐ பிரிவுக்கு: 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட தொழிற்பிரிவில் NCVT அல்லது SCVT அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் முழு நேர ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

டிப்ளமோ பிரிவுக்கு: 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பொறியியல் பிரிவில் முழுநேர டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 2022 முதல் 2026 வரை டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Job Opportunities|BHEL வேலைவாய்ப்பு
Job Opportunities|BHEL வேலைவாய்ப்பு

டிகிரி, என்ஜினியரிங் முடித்தவர்கள்: 10 மற்றும் +2 முடித்த பிறகு சம்பந்தப்பட்ட பொறியியல் அல்லது தொழில்நுட்பப் பிரிவில் முழுநேர பட்டப்படிப்பு முடித்தவர்களும், அக்கவுண்டன்ட் பணிக்கு பி.காம் படித்தவர்களும், அசிஸ்டென்ட்- ஹெச் ஆர் பணிக்கு பி.ஏ. படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

பணியிட விவரம்:

ஒரு ஆண்டு கால பயிற்சி பணியிடம் தான். நிரந்தர பணியிடம் கிடையாது.

தேர்வு செய்யப்படுபவர்கள் திருச்சியிலேயே பணியிடம்.

ஐடிஐ, டிப்ளமோ, என்ஜினியரிங் அல்லது பிற பட்டப்படிப்பு முடித்துவிட்டு பொதுத்துறை நிறுவனத்தில் தொழில் அனுபவம் பெற விரும்புபவர்களுக்கு இந்த நிறுவனத்தில் ஒரு ஆண்டு அப்ரெண்டீஸ் பயிற்சி ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
SBI வங்கியில் 9,124 காலிப்பணியிடங்கள்! தமிழ்நாட்டிற்கு 1,410 இடங்கள்... விண்ணப்பிப்பது எப்படி?
Bharat Heavy Electricals Limited

வயது வரம்பு :

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 2026 ஆகஸ்ட் 1-ம்தேதி தேதிப்படி குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் என்றால் அதிகபட்ச வயது 27 ஆண்டுகள் ஆகும்.

அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.

சம்பளம் :

ஐடிஐ அப்ரெண்டீஸ் - ரூ.10,560 முதல் ரூ.11,040 வரை

டிப்ளமோ அப்ரெண்டீஸ் - ரூ.10,900

பட்டதாரி அப்ரெண்டீஸ் - ரூ.12,300

தேர்வு முறை:

எழுத்துத் தேர்வு, நேர்காணல் கிடையாது.

மெரிட் லிஸ்ட் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

கல்வித் தகுதி மற்றும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதி / தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும். பின்னர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பது எப்படி?

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு https://careers.bhel.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் மேல் குறிப்பிட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் ஆன்லைன் மூலமாக வரும் செப்டம்பர் 12-ம்தேதி வரை (இரவு 11:45 மணி வரை) விண்ணப்பிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
பெண்களுக்கு ஜாக்பாட்..! தேர்வு கிடையாது! கலெக்டர் ஆபீசில் வேலை...விண்ணப்பிப்பது எப்படி?
Bharat Heavy Electricals Limited

அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படிக்க: https://trichy.bhel.com/tms/app_pro/index.jsp

logo
Kalki Online
kalkionline.com