

நாட்டிற்கு சேவையாற்ற விரும்பும் இளைஞர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்திய இராணுவத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான சிவில் ஸ்விட்ச் போர்டு ஆபரேட்டர் (CSBO Grade-II) மற்றும் ட்ரேட்ஸ்மேன் போன்ற குரூப் சி பணியிடங்களுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் (Ministry of Defence) கீழ் செயல்படும் ராணுவ சேவைப் படை மையம் (Army Service Corps (ASC)) – ASC Centre South, Bengaluru-வில் பல்வேறு Group C பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த ஆட்சேர்ப்பின் மூலம் MTS, Leading Fireman, Fireman, Fire Engine Driver, Tradesman Mate, Civilian Motor Driver, Cleaner, Cook மற்றும் Civilian Catering Instructor உள்ளிட்ட மொத்தம் 62 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் Indian Army அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை பார்க்கவும். (இராணுவ வேலை)
நிறுவனம் : ராணுவ சேவைப் படைப்பிரிவு (ASC) மையம் - தெற்கு (Army Service Corps (ASC) Centre South)
அமைச்சகம் : பாதுகாப்பு அமைச்சகம் (Ministry of Defence)
வேலை வகை : மத்திய அரசு வேலை 2026
மொத்த காலியிடங்கள் : 62
பணிகள் : MTS, Fireman, Leading Fireman, Cook, Driver உள்ளிட்டவை
கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு (Matriculation) தேர்ச்சி + பதவிக்கு ஏற்ப கூடுதல் தகுதிகள்
சம்பளம் : ரூ.18,000 – ரூ.21,700 (அடிப்படை சம்பளத்துடன் அரசு விதிமுறைகளின்படி பொருந்தக்கூடிய Allowances மற்றும் பிற சலுகைகளும் கிடைக்கலாம்)
விண்ணப்ப முறை : நேரடி / அஞ்சல் வழி (Offline / Postal)
விண்ணப்பிக்க கடைசி தேதி : செப்டம்பர் 4-ம்தேதி 2026
பணியிடம் : பெங்களூரு, கர்நாடகா
அதிகாரப்பூர்வ இணையதளம் : indianarmy.nic.in
வயது வரம்பு: 18 முதல் 25 வயது வரை. அரசு விதிமுறைகளின்படி, SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PwBD (UR) பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், PwBD (OBC) பிரிவினருக்கு 13 ஆண்டுகளும், PwBD (SC/ST) பிரிவினருக்கு 15 ஆண்டுகளும் Ex-Servicemen-க்கு அரசு விதிமுறைகளின்படி தளர்வு வழங்கப்படும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு / உடல் தகுதித் தேர்வு. பதவிக்கு ஏற்ப நடைமுறை அல்லது உடல் தகுதித் தேர்வின் தன்மை மாறுபடலாம். எனவே விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு விதிமுறைகளை முழுமையாகப் படிப்பது அவசியம்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பம் Postal / Offline முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து உங்கள் தகுதியை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள Application Form-ஐ பயன்படுத்தி விண்ணப்பத்தைத் தயாரித்து, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை சரியாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான கல்வி மற்றும் பிற சான்றிதழ்களின் Self-Attested Copies இணைக்கவும்.
விண்ணப்பத்துடன் தேவையான Self-Addressed Registered Envelope மற்றும் அனைத்து ஆவணங்களையும் முறையாக இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Presiding Officer,
Civilian Direct Recruitment Board,
Civ CR, ASC Centre (South),
Agram Post, Bangalore – 560007.
உங்களது விண்ணப்பம் வரும் செப்டம்பர் 4-ம்தேதிக்குள் சென்றடையும் வகையில் அனுப்புவது பாதுகாப்பானது.