

தமிழ்நாடு, அசாம், கேரளம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் 5 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4) நடைபெற்று கொண்டிருக்கிறது. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தற்போது மின்னணு வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் மொத்தமாக 4,87,98,833 வாக்குகள் பதிவாகி உள்ளன.
அதிர்ச்சி அளிக்கும் விதமாக முதல் சுற்றில் திராவிட கட்சிகளை முந்தி தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகித்து வருகிறது.
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையை பொருத்தவரையில் திமுக மற்றும் தவெக இடையே கடும் போட்டி நிலவுகிறது.
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம்:
திண்டுக்கல் தொகுதியில் திண்டுக்கல் சீனிவாசன் பின்னடைவு.
தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி முன்னிலை.
பாளையங்கோட்டை தொகுதியில் தவெக வேட்பாளர் மரிய ஜான் முன்னிலை.
மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பின்னடைவு.
குமாரபாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தங்கமணி பின்னடைவு.
போடி நாயக்கனூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஓபிஎஸ் முன்னிலை.
காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பின்னடைவு.
மயிலாப்பூர் தொகுதியில் தவெக பொருளாளர் வெங்கட்ராமன் முன்னிலை.
விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் முன்னிலை.
மதுரை மத்திய தொகுதியில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் சுந்தர்.சி முன்னிலை.
அண்ணாநகர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் திமுக, அதிமுக கூட்டணி வேட்பாளர்களை முந்தி தவெக முன்னிலை.
கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் செங்கோட்டையன் முன்னிலை.
நெல்லை, சைதாப்பேட்டை, தி.நகர், மாதவரம், திருப்பத்தூர் மற்றும் திருப்பூர் தெற்கு உள்ளிட்ட தொகுதிகளில் தவெக முன்னிலை.
திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் முன்னிலை.
அவினாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் பின்னடைவு.
மதுரவாயல் தொகுதியில் தவெக வேட்பாளர் ரேவந்த் சரண் முன்னிலை.
எழும்பூர் தொகுதியில் தவெக வேட்பாளர் ராஜ்மோகன் முன்னிலை.
திருவண்ணாமலை தொகுதியிலும் தவெக வேட்பாளர் முன்னிலை.
கம்பம் தொகுதியில் தவெக முன்னிலை.
திருச்செங்கோடு தொகுதியில் தவெக வேட்பாளர் முன்னிலை.
திருவெற்றியூர் தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமார் முன்னிலை.
சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை பின்னுக்கு தள்ளினார் தவெக வேட்பாளர்.
ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலனை பின்னுக்கு தள்ளினார் தவெக வேட்பாளர்.
சாத்தூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
திருச்சுழி தொகுதியில் திமுக வேட்பாளர் பின்னடைவு.
சென்னையில் 16 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தவெக 79, அதிமுக 59, திமுக 54 தொகுதிகளில் முன்னிலை.
தபால் ஓட்டுகளின் முடிவில் திமுக முன்னிலை வகுத்து வந்த நிலையில், முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் அதிமுக மற்றும் திமுகவை பின்னுக்குத் தள்ளி தவெக முதலிடத்தில் நீடித்து வருகிறது.
திமுகவின் கோட்டையான சென்னையை முற்றிலுமாக கைப்பற்றியுள்ளது தவெக. ஆளுங்கட்சியான திமுக தற்போது மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல திமுக அமைச்சர்கள் சரிவை சந்தித்து வருவது, அக்கட்சிக்கு பாதகமாக அமைந்துள்ளது.