இன்ப அதிர்ச்சி.!! நம்பவே முடியல... 4 நாட்களில் ரூ.4,480 சரிந்த தங்கம்.! ரூ.5,000 சரிந்த வெள்ளி.!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!
தங்கம் விலை
Gold Price Today
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

இன்று (நவம்பர் 13) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.960 குறைந்து ரூ.1,01,560-க்கு விற்பனையாகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,480 குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை 1 கிராம் ரூ.5 குறைந்து ரூ.195-க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்துக்கு நெருக்கமாக வந்திருக்கிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.3,520 குறைந்துள்ளது. தங்கம் விலை உயரும் என்ற கணிப்புக்கு எதிராக விலை சரிந்து வருவது, இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

2026-ம் ஆண்டு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மீண்டும் தங்கம் விலை ரூ.1 லட்சத்துக்கு கீழே சரியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. ஏற்கனவே பலமுறை தங்கம் விலை குறைந்து, ரூ.1 லட்சத்துக்கு அருகே வந்த போதெல்லாம் திடீரென உயர்ந்தது. ஆனால் இம்முறை அப்படி நடக்காது என பலரும் எதிர்பார்க்கின்றனர்.

நேற்றைய தங்கம் விலை நிலவரம்:

நேற்று (நவம்பர் 12) தங்கம் விலை ஒரு கிராம் ரூ.200 குறைந்து ரூ.12,815-க்கும், ஒரு சவரன் ரூ.1,600 குறைந்து ரூ.1,02,520-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை 1 கிராம் மாற்றமின்றி ரூ.200-க்கு விற்பனையானது.

இன்றைய விலை நிலவரம்:

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (நவம்பர் 13) தங்கத்தின் விலை சரசரவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 குறைந்து ரூ.12,695-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.960 குறைந்து, ரூ.1,01,560-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.195-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.1,95,000-க்கு விற்பனையாகிறது.

கடந்த 3 நாட்களாக தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்று மீண்டும் விலை குறைந்திருப்பது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியைக் ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை
Gold Price
இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்.! ரயிலைப் பிடிக்க இனி ஓட வேண்டாம்.. இனி ஸ்டேஷன் வாசலுக்கே வரப்போகும் புதிய வசதி!
தங்கம் விலை

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலை அதன் உச்சபட்ச விலையைத் தொட்டது. இதனால் நடப்பாண்டு இறுதிக்குள் ஒரு சவரன் தங்கம் ரூ.2 லட்சத்தை தொட்டு விடும் என்றே பலரும் கணித்தனர். ஆனால் உச்சபட்ச விலைக்குப் பிறகு சரியத் தொடங்கிய தங்கம் விலை, ஏறுவதும் இறங்குவதுமாகவே உள்ளது.

இருப்பினும் கூட உச்சபட்ச விலையில் இருந்து 25%-க்கும் மேல் தங்கம் விலை சரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சரிவு தற்காலிகமானது தான் எனவும், மீண்டும் விலை உயர்ந்தால் ரூ.2 லட்சம் வரை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளாவிய பொருளாதாரச் சந்தை நிலவரம் மற்றும் போர் அமைதி உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை சரிகிறது. குறிப்பாக இடைக்காலத் தேர்தலுக்குப் பின் ஈரான் உடனான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா நினைக்கிறது. இதுமட்டும் நடந்தால் தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
என்னது... கனவையும் வீடியோவா பார்க்கலாமா? உலகையே மிரள வைத்த புதிய ஏஐ!
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.