சரிந்தது கொஞ்ச காலம் தான்... மீண்டும் வேகம் எடுத்த தங்கம் விலை.! இன்றைய ரேட் இதோ.!

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
தங்கம் விலை
Gold Rate
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

இன்று (அக்டோபர் 17) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.160 உயர்ந்து ரூ.1,08,280-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் இன்றும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது.

அக்டோபர் மாதத்தில் இருந்தே ஏற்ற இறக்கத்துடன் விற்பனையாகி வரும் தங்கத்தின் விலை, இந்த மாதத்தில் மட்டும் ரூ.1,560 வரை குறைந்துள்ளது. குறிப்பாக கடந்த 5 நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு ரூ.2,920 குறைந்தது.

நேற்றும் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விலையில் மாற்றமில்லாமல் விற்பனையானது. தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து வரும் சூழலிலும், விலை சரிந்து வருவது பலருக்கும் ஆறுதலாக இருக்கிறது. இந்த விலை சரிவு தொடர்ந்தால், வெகு விரைவிலேயே தங்கம் விலை ரூ.1 லட்சத்துக்கு கீழே செல்ல வாய்ப்புள்ளது.

நேற்றைய தங்கம் விலை நிலவரம்:

நேற்று (அக்டோபர் 16) 1 கிராம் தங்கம் மாற்றமின்றி ரூ.13,515-க்கும், ஒரு சவரன் ரூ.1,08,120-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலையும் மாற்றமின்றி 1 கிராம் ரூ.240-க்கு விற்பனையானது

இன்றைய விலை நிலவரம்:

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (அக்டோபர் 17) ஆபரணத் தங்கத்தின் விலை மளமளவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.20 உயர்ந்து ரூ.13,535-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.160 உயர்ந்து, ரூ.1,08,280-க்கு விற்பனையாகிறது.

நேற்று தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லாத சூழலில், இன்று திடீரென விலை உயர்ந்தது இல்லத்தரசிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளியின் விலை இன்றும் மாற்றமின்றி 1 கிராம் ரூ.240-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.2,40,000-க்கும் விற்பனையாகிறது.

Gold & Silver Price
Gold & Silver
இதையும் படியுங்கள்:
அஞ்சல் துறை vs வங்கி முதலீடு: எதில் லாபம் அதிகம்? முழுமையான வழிகாட்டி!
தங்கம் விலை

நடப்பாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான 8 மாதங்களில் மட்டும் சீனா 1,000 டன் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு 886 டன் தங்கத்தை கொள்முதல் செய்திருந்தது. ஆனால் இதனை வெறும் 8 மாதங்களில் மிஞ்சி விட்டது சீனா.

இதுதவிர சீனாவின் மத்திய வங்கியும் கடந்த செப்டம்பர் மாதத்தில் 23 டன் தங்கத்தை வாங்கியுள்ளது. தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதி சீனா, தங்கத்தை அதிகளவில் வாங்கி குவித்து வருகிறது.

சீனா மட்டுமின்றி உலக நாடுகள் பலவும் தங்கத்தை அதிகளவில் இருப்பு வைத்துள்ளன. உலக நாடுகளின் இந்த செயல், தங்கத்தின் விலையை மேலும் உயர்த்தும் எனக் கூறப்படுகிறது.

இந்தியாவில் பண்டிகை காலம் வரவிருக்கும் சூழலில், தங்க விற்பனை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 2027 ஆம் ஆண்டுக்குள் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.2 லட்சத்தை எட்டும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக குறைந்து வரும் தங்கத்தின் விலை, விரைவில் உயரும் என்ற கணிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:
வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இல்லையா?– நீக்கப்பட்ட 97 லட்சம் பேருக்கு வந்தாச்சு சூப்பர் வாய்ப்பு!
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com