இது என்ன புது ட்விஸ்ட்? தங்கம் சவரனுக்கு ₹760... வெள்ளி ₹5,000 உயர்வு.!

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!
தங்கம் விலை
Gold rate
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 02) ஒரு சவரனுக்கு ரூ.760 வரை உயர்ந்துள்ளது. இன்றைய வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.5,000 உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலையில் ஏற்றமும் இறக்கமும் மாறி மாறி வரும் சூழலில், கடந்த சில மாதங்களாகவே பெரிய அளவில் சரிவோ அல்லது உயர்வோ இல்லை. செப்டம்பர் மாத இறுதியில் மட்டும் தொடர்ந்து சரிந்து வந்தது தங்கத்தின் விலை. இதனால் விரைவில் ரூ.1 லட்சத்துக்கு கீழே வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் மக்களின் இந்த எதிர்பார்ப்புக்கு பலன் கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு சவரன் ரூ.1,13,480-க்கு விற்பனையானது. ஆனால் இன்றைய விலையில் ஒரு சவரன் ரூ.4,000 வரை குறைந்துள்ளது.

நேற்றைய விலை நிலவரம்:

நேற்று (அக்டோபர் 1) தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.30 குறைந்து ரூ.13,680-க்கும், ஒரு சவரன் ரூ.240 குறைந்து ரூ.1,09,440-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் ரூ.5 குறைந்து ரூ.240-க்கு விற்பனையானது.

இன்றைய விலை நிலவரம்:

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (அக்டோபர் 2) ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.95 உயர்ந்து ரூ.13,775-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.760 உயர்ந்து, ரூ.1,10,200-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 அதிகரித்து, ரூ.245-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 அதிகரித்து ரூ.2,45,000-க்கு விற்பனையாகிறது.

நேற்று தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்று அதிகரித்திருப்பது இல்லத்தரசிகள் மற்றும் சாமானிய மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Gold price
Gold price
இதையும் படியுங்கள்:
சேமிப்புக் கணக்கில் பணம் இருக்கா? அப்போ இப்படி முதலீடு செய்யுங்க!
தங்கம் விலை

உலகளாவிய போர் நடவடிக்கைகள், பங்குச்சந்தை நிலவரங்கள் தங்கத்தின் விலையை தினசரி மாற்றி அமைக்கின்றன. கடந்த வருட விலைக்கும் இன்றைய விலைக்கும் அதிக வேறுபாடுகள் உள்ளன.

2025 அக்டோபர் 2-ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.87,040-க்கு விற்பனையானது. ஆனால் இன்றைய விலையோடு இதனை ஒப்பிட்டால், கடந்த ஆண்டில் ரூ.20,000-க்கும் மேல் குறைவாக இருந்துள்ளது.

கடந்த ஆண்டின் இந்த நேரம் தான் தங்கத்தின் விலை உச்சத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தது. அந்த வேகம் 2026 தொடங்கிய பிறகு நின்றது. அதற்குப் பின் தங்கத்தின் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை.

இதையும் படியுங்கள்:
இந்தியாவுக்கு 11வது தங்கம்.! வில்வித்தையில் 10 முறை ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்திய இந்திய மகளிர் அணி!
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com