

இன்று (அக்டோபர் 08) 22 காரட் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது. ரெப்போ வட்டி விகிதம் அதிகரித்தும், தங்கத்தின் விலை குறையாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், நேற்று திடீரென உயர்ந்தது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் பொதுமக்களுக்கு 3 அதிர்ச்சியான அறிவிப்புகள் வெளியாகின. முதலில் தங்கம் விலை உயர்ந்த நிலையில், அடுத்ததாக விலைவாசி உயர்வு மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. இது போதாதென்று ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை 5.50% ஆக உயர்த்தியது.
ரெப்போ வட்டி உயர்வால் மாதத் தவணை செலுத்துபவர்கள் அதிகம் பாதிக்கப்படுவர். இருப்பினும் ரெப்போ வட்டி உயர்வு தங்கத்தின் விலையை எதிர்மறையாக குறைக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
நேற்றைய விலை நிலவரம்:
நேற்று (அக்டோபர் 7) 1 கிராம் தங்கம் ரூ.50 உயர்ந்து ரூ.13,710-க்கும், ஒரு சவரன் ரூ.400 உயர்ந்து ரூ.1,09,680-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ரூ.245-க்கு விற்பனையானது.
இன்றைய விலை நிலவரம்:
தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், இன்று (அக்டோபர் 8) தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது. இதன்படி 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13,710-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,09,680-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை இன்றும் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனையாகிறது.
நேற்று தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில், இன்று மாற்றமின்றி விற்பனையாவது இல்லத்தரசிகள் மற்றும் சாமானிய மக்களுக்கு சற்று ஆறுதலைக் கொடுத்துள்ளது.
நேற்று (அக்டோபர் 7) இந்தியன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா ரெப்போ வட்டி வகிதம் 5.50% ஆக உயர்த்தப்பட்டுகிறது என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து இந்தியப் பங்குச்சந்தைகள் கடுமையான சரிவை சந்தித்தன. ஏற்கனவே சரிவை சந்தித்து வந்த நிலையில், நேற்று மீண்டும் பங்குச்சந்தைகள் அடிவாங்கின. ஆனால் ரெப்போ வட்டி உயர்வு மறைமுகமாக தங்கம் விலை குறைவதற்கு உதவ அதிக வாய்ப்புள்ளது.
ரெப்போ வட்டி உயர்வால், கடன்களுக்கான வட்டி மட்டும் உயராது; பிக்ஸட் டெபாசிட் மற்றும் வங்கி சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டியும் உயரும். இதனால் பெரும்பாலான முதலீட்டாளர்கள் தங்கத்தை தவிர்த்து, நிலையான வருமானம் தரும் பிக்ஸட் டெபாசிட்டைத் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது. இதனால் தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்து விலை சரிய வாய்ப்புள்ளது.
மேலும் ரெப்போ வட்டி உயர்வால் ரூபாயின் மதிப்பு வலுவடையும். இதன் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தை இறக்குமதி செய்யும் செலவும் குறைவதால், தங்கத்தின் விலை குறைய அதிக வாய்ப்புள்ளது.
ரெப்போ வட்டி உயர்த்தப்பட்டாலும், ஒரு சில நேரங்களில் சர்வதேச போர்ச் சூழல் மற்றும் கடுமையான பணவீக்கம் காரணமாகவும் தங்கத்தின் விலை உயர வாய்ப்புள்ளது
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.