ரெப்போ வட்டி உயர்வு.!! எகிறப் போகும் EMI: நிதி நெருக்கடியில் இருந்து தப்பிக்க சூப்பர் டிப்ஸ்!

5.50 சதவீதமாக உயர்ந்த ரெப்போ ரேட்; வீட்டுக் கடன், தனிநபர் கடன் வாங்கியோருக்கு புதிய சிக்கல்!
RBI governor Sanjay Malhotra
Repo Rate Decreased
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

இந்தியன் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகளை உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதத்தில் இருந்து 5.50 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்தியன் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுவில் உள்ள 6 உறுப்பினர்களும் ஒருமனதாக இந்த வட்டி உயர்வு முடிவை எடுத்ததாக, ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று காலை (அக்டோபர் 7) அறிவித்தார்.

இந்தியாவின் பணவீக்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து, அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் ரெப்போ வட்டி உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ரிசர்வ் வங்கி நாட்டில் உள்ள வணிக வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி தான் ரெப்போ வட்டி. 2023 பிப்ரவரி மாத்திற்குப் பிறகு இப்போது தான் ரெப்போ வட்டி விகிதம் 5.50% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வட்டி உயர்வு வங்கிக் கடன் வாங்கியவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

ரெப்போ வட்டி உயர்வால் மாதத் தவணை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதோடு புதிதாக கடன் வாங்க விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிக வட்டி விகிதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்:
ஷாக்.!! விலைவாசி கிடுகிடு உயர்வு: குடும்ப பட்ஜெட்டை சமாளிக்க எளிய வழிகள்.!
RBI governor Sanjay Malhotra

ரெப்போ வட்டி விகித உயர்வால், வணிக வங்கிகள் தங்களது நிதிச் செலவைச் சமாளிக்க ஏதுவாக இருக்கும். ஆனால் இந்த வட்டி உயர்வு நடுத்தர மற்றும் ஏழை மக்களைத் தான் அதிகம் பாதிக்கும்.

யாருக்கெல்லாம் பாதிப்பு?

* ரெப்போ வட்டி உயர்வு 0.25% தான் உயர்த்தப்பட்டது என்றாலும், வங்கிக் கடனில் மிகப்பெரிய மாற்றத்தை இது ஏற்படுத்தும். குறிப்பாக வங்கிக் கடன் வாங்கியவர்கள் ஃபுளோட்டிங் ரேட் வகையில் வட்டி விகிதத்தை தேர்வு செய்திருந்தால், தற்போது செலுத்தி வரும் மாதத் தவணை உயர வாய்ப்புள்ளது.

* பிக்ஸட் ரேட் வகையில் வட்டி விகிதத்தை தேர்வு செய்தவர்களுக்கு மாதத் தவணை உயரும் அபாயம் இருக்காது.

* வீட்டுக் கடன், வாகன கடன் மற்றும் தனிநபர் கடன் என வங்கிக் கடன் வாங்கியவர்கள் இந்த ரெப்போ வட்டி விகிதத்தால் பாதிக்கப்படுவர்.

* ஏற்கனவே விலைவாசி உயர்வால் நிதி நெருக்கடியை சந்தித்து வரும் சாமானிய மக்களுக்கு, வங்கிக் கடன் வட்டியும் உயர்வது கூடுதல் நெருக்கடியை உண்டாக்கும்.

சிபில் ஸ்கோரின் முக்கியத்துவம்:

ரெப்போ வட்டி உயர்த்தப்பட்ட இந்த நேரத்தில் தான் சிபில் ஸ்கோர் முக்கியமானதாக கருதப்படுகிறது. புதிதாக கடன் வாங்க விண்ணப்பிப்பவர்களின் சிபில் ஸ்கோர் நல்ல நிலையில் இருந்தால், ரெப்போ ரேட்டுக்கு ஏற்ற வட்டி விகிதத்தில் கடன் கிடைக்கும். ஆனால் சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால், கடனுக்கான வட்டி அதிகமாகவே இருக்கும்.

வங்கிக் கடனுக்கு எவ்வளவு வட்டி உயரும்?

* நகைக் கடனுக்கான வட்டி விகிதமே அதிகமாக இருக்கும் சூழலில், தற்போது தனிநபர் கடனுக்கான வட்டி 2% முதல் 3% வரை உயர வாய்ப்புள்ளது.

* மாதச் சம்பளம் வாங்குவோருக்கு வங்கிகளில் 10% முதல் 15% வட்டியில் தனிநபர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வட்டிவிகிதம் 12% முதல் 17% வரை உயர வாய்ப்புள்ளது. அப்படி வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால், அது வாடிக்கையாளர்களுக்கு கடுமையான நிதி நெருக்கடியைக் கொடுக்கும்.

* நீண்ட கால கடனான வீட்டுக் கடன் வாங்கியுள்ள வாடிக்கையாளர்கள், இந்த வட்டி உயர்வால் அதிகம் பாதிக்கப்படுவர். வீட்டுக் கடனுக்கான வட்டி 1% முதல் 2% வரை உயர வாய்ப்புள்ளது.

Financial Freedom
Financial Freedom
இதையும் படியுங்கள்:
ஷாக்.!! விலைவாசி கிடுகிடு உயர்வு: குடும்ப பட்ஜெட்டை சமாளிக்க எளிய வழிகள்.!
RBI governor Sanjay Malhotra

கடனுக்கான வட்டி விகித உயர்வில் இருந்து தப்பிப்பது எப்படி?

* வங்கியில் ஏற்கனவே கடன் வாங்கியவர்கள் மாதத் தவணை தவிர்த்து, மாதந்தோறும் ஒரு சிறு தொகையை சேமிக்க வேண்டும். சில ஆண்டுகள் கழித்து இந்த சேமிப்பில் கிடைக்கும் தொகையை கடன் தொகையில் கழித்துக் கொள்ளும் படி வங்கியில் செலுத்தலாம். இதன்மூலம் மாதத் தவணை குறையும்.

* வங்கிக்கு வங்கி வட்டி விகிதம் மாறும் என்பதால், புதிதாக கடன் பெற முயற்சிப்பவர்கள் எந்த வங்கியில் வட்டி குறைவாக உள்ளது என அறிந்து கொண்டு கடன் பெற முயற்சிக்க வேண்டும்.

* மாதச் சம்பளம் வாங்குவோர் தங்கள் சம்பளத்தில் இருந்து 30% பணத்தை தொடர்ந்து சேமித்து வந்தால், பெரும்பாலும் கடன் வாங்கும் சூழ்நிலையே உருவாகாது.

* பட்ஜெட் போட்டு செலவுகளைக் குறைத்து நிதி திட்டமிடலை சிறப்பாக மேற்கொள்வதன் மூலம், நிதி நெருக்கடியில் இருந்து தப்பிக்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com