

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (செப்டம்பர் 10) ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.110 உயர்ந்து ரூ.14,255-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.880 உயர்ந்து, ரூ.1,14,040-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்பனையாகிறது.
நேற்று தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று அதிகரித்திருப்பது இல்லத்தரசிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வு தொடருமா அல்லது ஏறிய வேகத்திலேயே சரியுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தங்கத்தின் விலை நேற்று (செப்டம்பர் 9) ஒரே நாளில் ரூ.1,000 குறைந்தது. இதன்படி நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.125 குறைந்து ரூ.14,145-க்கும், ஒரு சவரன் ரூ.1,000 குறைந்து ரூ.1,13,160-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கடந்த சில நாட்களாகவே மாற்றமின்றி 1 கிராம் ரூ.255-க்கு விற்பனையாகி வருகிறது.
நாளை (செப்டம்பர் 11) நடைபெறவிருந்த மத்திய அரசின் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், தள்ளிப் போயுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமிருந்தன.
ஜிஎஸ்டி வட்டி குறைக்கப்பட்டால் தங்கத்தின் விலை சுமார் 10,000 ரூபாய் வரை குறைய அதிக வாய்ப்புள்ளது. ஆனால் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தள்ளிப் போயிருக்கும் நிலையில், தங்கத்தின் விலை சரிவும் தற்சமயத்திற்கு தள்ளிப் போயிருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.