இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.! ஒரே நாளில் ரூ.1,920 சரிவு.!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!
தங்கம் விலை
Gold rate
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

இந்திய சந்தையில் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று (செப்டம்பர் 10) ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ.880 உயர்ந்தது. இதன்படி நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.110 உயர்ந்து ரூ.14,255-க்கும், ஒரு சவரன் ரூ.880 உயர்ந்து ரூ.1,14,040-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை நேற்றும் மாற்றமின்றி 1 கிராம் ரூ.255-க்கு விற்பனையானது.

இன்றைய விலை நிலவரம்:

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (செப்டம்பர் 11) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.240 குறைந்து ரூ.14,015-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,920 குறைந்து, ரூ.1,12,120-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.10 குறைந்து, ரூ.245-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.10,000 குறைந்து ரூ.2,45,000-க்கு விற்பனையாகிறது.

இதையும் படியுங்கள்:
வெள்ளியில் முதலீடு செய்தால் பலன் கிடைக்குமா?
தங்கம் விலை

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் விரைவில் நடக்கவுள்ளது. இந்தக் கூட்டத்தில் தங்கத்தின் மீதான வட்டி விகிதம் குறைக்கப்பட்டால், தங்கத்தின் விலை வெகுவாக குறையும். அதோடு அடுத்த வாரம் அமெரிக்காவில் மத்திய வங்கிகள் கூட்டம் நடக்கவுள்ளது. இந்தக் கூட்டத்தில் எடுக்கவுள்ள முடிவுகளும் தங்கத்தின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

ஆகையால் அடுத்த சில நாட்களில் தங்கத்தின் விலையில் மிகப்பெரிய சரிவு இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தங்கம் வாங்க நினைப்பவர்கள் சிறிது நாட்கள் காத்திருப்பது நல்லது.

தங்கம் விலையில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்துக்கு கீழே வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Gold and Silver Rates
Gold and Silver
இதையும் படியுங்கள்:
ஒரு நல்ல முதலீடு என்றால் என்ன? வாங்க தெரிஞ்சிக்கலாம்!
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com