மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.! இன்றைய விலை நிலவரம் இதோ.!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!
தங்கம் விலை
Gold Price Today
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

தங்கத்தின் விலை நேற்று (செப்டம்பர் 11) காலை அதிரடியாக ரூ.1,920 வரை குறைந்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி அளித்தது. ஆனால் நேற்று மாலையே சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து அதிர்ச்சி அளித்தது.

நேற்று (செப்டம்பர் 11) ஒரே நாளில் ஏற்ற இறக்கத்தைக் கண்ட தங்கத்தின் விலை ஒட்டுமொத்தமாக ரூ.800 வரை குறைந்தது. இதன்படி நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.100 குறைந்து ரூ.14,155-க்கும், ஒரு சவரன் ரூ.800 உயர்ந்து ரூ.1,13,240-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலை நேற்று காலை கிராமுக்கு ரூ.10 குறைந்த நிலையில் மாலையில் ரூ.5 உயர்ந்தது. ஒட்டுமொத்தமாக நேற்று மட்டும் 1 கிராம் ரூ.5 குறைந்து ரூ.250-க்கு விற்பனையானது.

இதையும் படியுங்கள்:
#JUST IN: விநாயகர் சிலைகளை கரைக்க தடை.!! பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி.!
தங்கம் விலை

இன்றைய விலை நிலவரம்:

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (செப்டம்பர் 12) ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.15 உயர்ந்து ரூ.14,170-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்து, ரூ.1,13,360-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனையாகிறது.

இந்தியாவில் இன்றும், நாளையும் பிரிக்ஸ் நாடுகள் பங்கேற்கும் மாநாடு நடக்கிறது. இதன் காரணமாக நேற்று நடக்க வேண்டிய மத்திய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தள்ளிப் போனது. இந்தக் கூட்டம் நடைபெறும் போது, தங்கத்தின் மீதான வட்டி விகிதம் குறைக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த சில நாட்களில் தங்கத்தின் விலை ரூ.10,000-க்கும் மேல் குறைய வாய்ப்புள்ளது. இன்னும் சில நாட்களில் தங்கத்தின் உண்மையான விலை நிலவரத்தை நாம் பார்ப்போம் என பிரபல பொருளாதார ஆலோசகர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்திருக்கிறார்.

இதன் காரணமாக செப்டம்பர் மாத இறுதிக்குள் தங்கத்தின் விலை மிகப்பெரிய சரிவை சந்திக்க அதிக வாய்ப்புகள் உண்டு.

தங்கம் விலை
Gold Price
இதையும் படியுங்கள்:
வரி விதிப்புக்கேற்ப எந்த தங்க முதலீடு சிறந்தது?
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com