

தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.1,040 வரை குறைந்துள்ளது. இந்த விலை சரிவு மேலும் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அனைவரது கவனமும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் மீது தான் உள்ளது. இந்தக் கூட்டத்தில் தங்கத்தின் மீதான ஜிஎஸ்டி வரியைக் குறைக்க அதிக வாய்ப்புள்ளது.
ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (செப்டம்பர் 15) 1 கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14,040-க்கும், ஒரு சவரன் ரூ.680 குறைந்து ரூ.1,12,320-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை மாற்றமின்றி 1 கிராம் ரூ.250-க்கு விற்பனையானது.
தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (செப்டம்பர் 16) ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.25 உயர்ந்து ரூ.14,065-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.200 உயர்ந்து, ரூ.1,12,520-க்கு விற்பனையாகிறது.
நேற்று தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்று அதிகரித்திருப்பது இல்லத்தரசிகள் மற்றும் சாமானிய மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை எவ்வளவு உயர்ந்தாலும், அதன் மீதான மோகம் மட்டும் குறையவே இல்லை. ஆனால் முன்பை விடவும் இப்போது தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்நிலையில் தங்கத்தின் இறக்குமதி பாதிக்கும் மேல் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2025 ஆகஸ்ட் மாதத்தில் 5.4 பில்லயன் டன்னாக இருந்த தங்க இறக்குமதி, 2026 ஆகஸ்ட் மாதத்தில் 2.3 பில்லியன் டன்னாக குறைந்துள்ளது. இதன்படி இந்தியாவில் 57% தங்க இறக்குமதி சரிந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் பொதுமக்கள் தேவையின்றி தங்கத்தை வாங்க வேண்டாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து இந்தியாவின் ஒட்டுமொத்த தங்க இறக்குமதியும் சரிந்திருப்பது, இந்தியப் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.