மீண்டும் ஆட்டம் காட்டும் தங்கம் விலை! சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து அதிர்ச்சி!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!
தங்கம் விலை
Gold Price
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

தங்கத்தின் விலை கடந்த 10 நாட்களில் மட்டும் ரூ.2,080 வரை குறைந்துள்ளது. இந்த விலை சரிவு மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு நாள் விலை உயர்ந்தால், மறுநாளே விலை உயர்கிறது. இந்நிலையில் தங்கத்தின் விலையில் ஏற்படும் இந்த அதிரடியான மாற்றங்களால், பொருளாதார சந்தையும் ஆட்டம் கண்டு வருகிறது.

நேற்றைய விலை நிலவரம்:

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (செப்டம்பர் 17) 1 கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.14,010-க்கும், ஒரு சவரன் ரூ.440 குறைந்து ரூ.1,12,080-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை மாற்றமின்றி 1 கிராம் ரூ.250-க்கு விற்பனையானது.

இன்றைய விலை நிலவரம்:

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (செப்டம்பர் 18) ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.145 உயர்ந்து ரூ.14,155-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,160 உயர்ந்து, ரூ.1,13,240-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 அதிகரித்து, ரூ.255-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 அதிகரித்து ரூ.2,55,000-க்கு விற்பனையாகிறது.

நேற்று தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்று அதிகரித்திருப்பது இல்லத்தரசிகள் மற்றும் சாமானிய மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:
எம்பி பதவிக்காக தேமுதிக.. அமைச்சர் பதவிக்காக விசிக.! – மோதலின் பின்னணியில் உள்ள உண்மை என்ன?
தங்கம் விலை

நடப்பாண்டில் கடந்த 4 மாதங்களில் மட்டும் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.20 லட்சத்திற்குள்ளாகவே ஏறி ஏறி இறங்குகிறது. இந்நிலையில் தங்கத்தின் விலையில் மிகப்பெரிய மாற்றம் இல்லை என்பதே நிதர்சனம். ஆனால் மத்திய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றால், வட்டி குறைந்து தங்கத்தின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை
Gold Price
இதையும் படியுங்கள்:
நொறுங்கிய புல்லட் பைக்.. நூலிழையில் தப்பிய தம்பதி! காட்டு யானையின் ஆக்ரோஷமான வீடியோ வைரல்.!
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com