

தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் ரூ.1,160 உயர்ந்து அதிர்ச்சி அளித்தது. கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கம் திடீர் ஏற்றத்தைக் கண்டுள்ளது.
நேற்றைய விலை நிலவரம்:
ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (செப்டம்பர் 18) 1 கிராமுக்கு ரூ.145 உயர்ந்து ரூ.14,155-க்கும், ஒரு சவரன் ரூ.1,160 உயர்ந்து ரூ.1,13,240-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் ரூ.5 உயர்ந்து ரூ.255-க்கு விற்பனையானது.
இன்றைய விலை நிலவரம்:
தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (செப்டம்பர் 19) ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.130 உயர்ந்து ரூ.14,285-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,040 உயர்ந்து, ரூ.1,14,280-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 அதிகரித்து, ரூ.260-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 அதிகரித்து ரூ.2,60,000-க்கு விற்பனையாகிறது.
நேற்று தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்திருப்பது இல்லத்தரசிகள் மற்றும் சாமானிய மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் நடந்த மத்திய வங்கிகள் கூட்டத்தில் வட்டி விகிதம் 0.25% உயர்த்தப்பட்டு 4% ஆக உள்ளது. இந்த வட்டி உயர்வுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 2024 ஜூலை மாதத்திற்குப் பிறகு இந்த வட்டி விகிதம் இப்போது தான் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் உலகப் பொருளாதார சந்தையில் மிகப்பெரிய மாற்றம் நிகழவுள்ளது. அதோடு இந்த வட்டி உயர்வு தங்கத்தின் விலையைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் அடுத்த சில நாட்களில் டாலரின் மீதான முதலீடுகள் அதிகரித்தால், தங்கத்தின் விலை நிச்சயமாக குறையும்.
2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியான ஏற்றத்தைக் கண்டது. 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் இந்த ஏற்றம் தொடர்ந்தது. ஆனால் அதற்குப் பிறகு மிகப்பெரிய அளவில் ஏற்றத்தையோ அல்லது இறக்கத்தையோ சந்திக்கவில்லை. ஒருநாள் விலை ஏறினால், மறுநாள் குறைகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் தங்த்தின் விலை ரூ.1 லட்சத்துக்கு கீழே வருமா என்பது மட்டும் தான் இல்லத்தரசிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.