

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 24) ஒரு சவரனுக்கு ரூ.1,080 வரை குறைந்துள்ளது. வெள்ளி விலை 1 கிலோ ரூ.5,000 குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.1,200 வரை குறைந்தது. இந்த விலை சரிவு மேலும் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த விலை சரிவு கணிக்க முடியாததாக இருக்கிறது. ஏனென்றால் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடனேயே இருக்கிறது.
நேற்றைய விலை நிலவரம்:
நேற்று (செப்டம்பர் 23) தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.50 குறைந்து ரூ.14,135-க்கும், ஒரு சவரன் ரூ.400 குறைந்து ரூ.1,13,080-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை மாற்றமின்றி 1 கிராம் ரூ.255-க்கு விற்பனையானது.
இன்றைய விலை நிலவரம்:
தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (செப்டம்பர் 24) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.135 குறைந்து ரூ.14,000-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,080 குறைந்து, ரூ.1,12,000-க்கு விற்பனையாகிறது.
கடந்த 3 நாட்களில் தங்கத்தின் விலை ரூ.1,200 குறைந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்திருப்பது இல்லத்தரசிகள் மற்றும் சாமானிய மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.250-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,50,000-க்கு விற்பனையாகிறது.
கடுமையான விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை இன்று (செப்டம்பர் 24) குறைத்தது மத்திய அரசு. இதனால் சமையல் எண்ணெய் விலை சரிய அதிக வாய்ப்புள்ளது.
இதேபோல் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியையும் மத்திய அரசு குறைக்கவுள்ளதாக கூறப்டுகிறது. இது மட்டும் நடந்தால் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.10,000 வரை சரிய வாய்ப்புள்ளது.
பொருளாதார ஆலோசகர்களும் தங்கத்தின் விலை சரியும் எனத் தெரிவித்து வருகின்றனர். அப்படி ஒருவேளை விலை சரிந்தால், அது சாமானியர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு ஜாக்பாட் ஆஃபராக இருக்கும்.
தங்கம் ஒருநாள் விலை ஏறினால், மறுநாள் குறைகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் தங்த்தின் விலை ரூ.1 லட்சத்துக்கு கீழே வருமா என்பது மட்டும் தான் இல்லத்தரசிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.