

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 26) ஒரு சவரனுக்கு ரூ.80 வரை குறைந்துள்ளது. இன்றைய வெள்ளி விலையில் மாற்றமில்லால் நேற்றைய விலைக்கே விற்பனை.
தங்கத்தின் விலை இந்த வாரத் தொடக்கத்தில் இருந்தே குறைந்து வந்த நிலையில், நேற்று மட்டும் திடீரென உயர்ந்தது. வாரத்தின் முதல் 4 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,280 வரை குறைந்தது.
இந்த விலை சரிவு மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்தது. இந்த விலை உயர்வு சிறிதளவே என்றாலும், அடுத்தடுத்த நாட்களில் தொடருமோ என்ற அச்சம் இல்லத்தரசிகள் மத்தியில் எழுந்துள்ளது.
தங்கத்தின் நேற்றைய விலை நிலவரம்:
நேற்று (செப்டம்பர் 25) தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.10 உயர்ந்து ரூ.14,010-க்கும், ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ.1,12,080-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் மாற்றமின்றி ரூ.250-க்கு விற்பனையானது.
இன்றைய விலை நிலவரம்:
தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (செப்டம்பர் 26) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.10 குறைந்து ரூ.14,000-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.80 குறைந்து, ரூ.1,12,000-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.245-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,45,000-க்கு விற்பனையாகிறது.
நேற்று தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், இன்று குறைந்திருப்பது இல்லத்தரசிகள் மற்றும் சாமானிய மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் விற்பனையாகி வரும் சூழலில், இந்த வாரத்தில் மட்டும் ஒட்டுமொத்தமாக ரூ.2,200 சரிந்துள்ளது. தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளதாக கூறப்படுகிறது.
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளதால், டாலர் மீதான முதலீடுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது நடந்தால் தங்கத்தின் விலை தாறுமாறாக சரியும்.
அதோடு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தங்கத்தின் மீதான வட்டி விகிதத்தைக் குறைத்தாலும், இறக்குமதி செலவுகள் குறைந்து விலை குறைய வாய்ப்புள்ளது.
2025-ம் ஆண்டின் பிற்பகுதியில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியான ஏற்றத்தைக் கண்டது. 2026-ம் ஆண்டின் தொடக்கத்திலும் இந்த விலையேற்றம் தொடர்ந்தது. ஆனால் அதற்குப் பின் மிகப்பெரிய அளவில் ஏற்றத்தையோ அல்லது இறக்கத்தையோ சந்திக்கவில்லை.
ஒருநாள் விலை ஏறினால், மறுநாள் விலை குறைந்தது. இந்நிலையில் நடப்பாண்டு இறுதிக்குள் தங்த்தின் விலை ரூ.1 லட்சத்துக்கு கீழே வருமா என்பது மட்டும் தான் இல்லத்தரசிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.