​"வாழ்க்கை ஒரு வட்டம்!" – Sweet Uncle முதல் BJP வரை: முதல்வர் விஜய் பரப்புரையின் அதிரடி ஹைலைட்ஸ்!

மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரையில் முதல்வர் விஜய் ஆவேச பேச்சு
முதல்வர் விஜய் பரப்புரை
Cm vijay
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

தமிழ்நாட்டில் வருகின்ற அக்டோபர் 6-ம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் 5 முனைப் போட்டி நிலவி வரும் சூழலில், ராஜினாமா செய்த அதிமுக எம்எல்ஏக-க்களையே வேட்பாளராக அறிவித்து பிரச்சாரம் செய்து வருகிறது தவெக.

இந்நிலையில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து இன்று (செப்டம்பர் 25) மதுராந்தகம் தொகுதியில் பரப்புரையை மேற்கொண்டார் முதல்வர் விஜய். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளில் 2 கட்டங்களாக ஒவ்வொரு தொகுதிக்கும் 2 நாட்கள் என மொத்தம் 4 நாட்கள் பரப்புரையை மேற்கொள்ள இருக்கிறார் முதல்வர் விஜய்.

இதன் முதல் கட்டமாக இன்று மதுராந்தகம் தொகுதியில் பரப்புரையை மேற்கொண்ட முதல்வர் விஜய், கூடியிருந்த மக்கள் முன்பு உங்கள் வீட்டுப் பிள்ளையாக வந்திருக்கிறேன் எனக் கூறி தனது பரப்புரையை தொடங்கினார்.

தவெக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்த முதல்வர் விஜய், மீண்டும் திமுகவினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

முதல்வர் விஜய்யின் வருகைக்குப் பிறகு தமிழக அரசியல் களமே மொத்தமாக மாறி விட்டது. திராவிட கட்சிகளின் கோட்டையாக இருந்த தமிழ்நாட்டில், முதல்வர் விஜய்யின் வரவின் மூலம் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது.

தேர்தலுக்கு முந்தைய பரப்புரையில் தொடங்கி சட்டமன்றம் வரை முதல்வர் விஜய் ஆவேசமாக பேசியதை அனைவரும் பார்த்திருப்போம். ஆனால் இன்று முதல்வர் விஜய் மேற்கொண்ட பரப்புரையில் வழக்கத்தை விடவும் அதிக ஆக்ரோஷமாக பேசினார்.

பரப்புரையில் முதல்வர் விஜய் பேசியவற்றில் சில முக்கியமான ஹைலைட்ஸ்களை இப்போது பார்ப்போம்.

இதையும் படியுங்கள்:
300 அடி அந்தரத்தில் கயிறு கட்டி நடந்த பெண்: உலகையே அதிரவைத்த மெய்சிலிர்க்கும் சாகச வீடியோ.!
முதல்வர் விஜய் பரப்புரை
CM Vijay
CM Vijay

முதல்வர் விஜய் Speech Highlights:

* மக்கள் பணத்தை தொட மாட்டோம்; தொடவும் விடமாட்டோம்; தொட்டவர்களையும் விடமாட்டோம்.

* தீய சக்தி திமுகவுடன் அதிமுக ரகசிய கூட்டணி வைத்துள்ளது. ஆனால் நம்ம ரூட் ஒரே ரூட் தான்.

* Thick Skin என்பதற்கு ஒரே உதாரணம் நான் தான். 34 வருடங்களாக அனைத்தையும் பார்த்துவிட்டு தான் இங்கு வந்துள்ளேன்.

* தோற்றாலும், ஜெயிச்சாலும் ஸ்டாலின் தான் என் Sweet Uncle.

* தவெக-வுக்கும், திமுகவுக்கும் இடையே தான் போட்டி என நாங்கள் சொல்லி வந்தோம். ஆனால் இன்று திமுகவினரே அப்படி தான் சொல்கின்றனர். வாழ்க்கை ஒரு வட்டம் அல்லவா.!

* பேசு பேசு என சொல்வாங்கலாம்; ஆனால் விஜய்யை பேச விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தனர் திமுகவினர். எனக்கு சட்டசபை புதிது. திமுகவினர் கத்திக் கொண்டே இருந்ததில் பேசுவதா வேண்டாமா என்ற குழப்பத்திலேயே இருந்துவிட்டேன்.

* ஊழலின் ஊற்றுக் கண் திமுக என சொன்னால் ஆதாரத்தைக் காட்டு என்றார்கள். ஆதாரத்தைக் காட்டினால், அப்போது விஜய் பிறக்கவில்லையே என்றார்கள். நான் எப்போ பிறந்தால் உங்களுக்கு என்ன?

* ஏன் உங்க விஜய் ஆட்சிக்கு வரக் கூடாதா.? ஊழலை ஒழிக்க ஆட்சிக்கு வரக் கூடாதா.?

இதையும் படியுங்கள்:
ஆசிரியர்கள் இதை செய்தே ஆக வேண்டும்: காலை உணவுத் திட்டத்தில் அரசு அதிரடி உத்தரவு!
முதல்வர் விஜய் பரப்புரை

* திமுக போடும் Arithmetics, Mathematics எல்லாம் இங்கு பலிக்காது.

* திமுகவும், பாஜகவும் ஒன்று தான். டெல்லியில் உள்ள திமுகவுக்கு பெயர் தான் பாஜக; தமிழ்நாட்டில் உள்ள பாஜகவுக்கு பெயர் தான் திமுக.

* எங்களை சீண்டாதீர்கள்; இல்லையென்றால் ஏண்டா இந்த விஜய்யை தொட்டோம்; விஜய்யின் மக்களை தொட்டோம் என வருந்துவீர்கள்.

* திமுகவின் ஊழல் எல்லாம் இப்போது உள்ள பிள்ளைகளுக்கு தெரிந்தால், மிஸ்டர் கிளீன் இமேஜ் போய் விடும் என்ற பயம் திமுகவுக்கு உள்ளது.

* திமுகவுடன் அதிமுக கூட்டணி பேசியதை தாங்க முடியாமல் தான், 6 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெக-வில் இணைந்தனர். அந்த வலி எம்.ஜி.ஆர். தொண்டர்களுக்கும் இருந்திருக்கும். உங்களுக்கு எம்.ஜி.ஆர்., ஜெ., வாக நாங்கள் இருப்போம்.

இடைத்தேர்தல் பரப்புரையில் விஜய்யின் ஆவேசமான பேச்சு தவெக தொண்டர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தியது. முதல்வர் விஜய் பரப்புரை மேற்கொண்டதால் தவெக-வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம் என நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com