தங்கம் வாங்க ஆசைப்பட்டவர்களுக்கு இடி! ஒரே நாளில் ரூ.1120 உயர்வு!

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!
தங்கம் விலை
Gold Price
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுமக்கள் தேவையின்றி தங்கத்தை வாங்க வேண்டாம் என அறிவுறுத்தினார். நாடு முழுவதும் பிரதமரின் இந்தப் பேச்சு வைரலான நிலையில், தங்கத்தை வாங்காமல் இருந்தால், இந்தியப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றம் நிகழும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

இது ஒருபுறம் இருக்க தற்போதைய தங்கத்தின் விலையை நினைத்தால், தேவை இருந்தாலும் தங்கம் வாங்குவது சாமானிய மக்களுக்கு கடினமான விஷயம் தான்.

நேற்றைய விலை நிலவரம்:

நேற்று (செப்டம்பர் 7) ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.60 குறைந்து ரூ.14,130-க்கும், ஒரு சவரன் ரூ.480 குறைந்து ரூ.1,13,040-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை மாற்றமின்றி 1 கிராம் ரூ.255-க்கு விற்பனையானது.

இன்றைய நிலவரம்:

தங்க நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (செப்டம்பர் 8) ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.140 உயர்ந்து ரூ.14,270-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,120 உயர்ந்து, ரூ.1,14,160-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்பனையாகிறது.

தங்கத்தை ஆபரண நகையாக வாங்குவதைக் காட்டிலும், முதலீடு செய்வது சிறந்ததாக பார்க்கப்படுகிறது. இப்போது முதலீடு செய்தால் அடுத்த ஆண்டில் தங்கத்தின் மீதான முதலீடு உங்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுக்கும். கடந்த ஆண்டிலிருந்து தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்ததும், விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
SIP திட்டத்தில் முதலீடு செய்ய இனி 10 ரூபாய் போதும்..! அமலுக்கு வந்தது புதிய திட்டம்..!
தங்கம் விலை
தங்கம் விலை
Gold price

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை:

செப்டம்பர் 7: 1 கிராம் - ரூ.14,130 1 சவரன் ரூ.1,13,040

செப்டம்பர் 6: 1 கிராம் - ரூ.14,190 1 சவரன் ரூ.1,13,520

செப்டம்பர் 5: 1 கிராம் - ரூ.14,190 1 சவரன் ரூ.1,13,520

செப்டம்பர் 4: 1 கிராம் - ரூ.14,360 1 சவரன் ரூ.1,14,880

செப்டம்பர் 3: 1 கிராம் - ரூ.14,240 1 சவரன் ரூ.1,13,920

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விலை:

செப்டம்பர் 7: 1 கிராம் - ரூ.255

செப்டம்பர் 6: 1 கிராம் - ரூ.255

செப்டம்பர் 5: 1 கிராம் - ரூ.255

செப்டம்பர் 4: 1 கிராம் - ரூ.255

செப்டம்பர் 3: 1 கிராம் - ரூ.255

ஒரு மாதத்திற்கு முன்பு ஆகஸ்ட் 8-ல் தங்கத்தின் விலையானது ஒரு சவரன் ரூ.1,11,720-க்கு விற்பனையானது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.250-க்கு விற்பனையானது.

ஒரு வருடத்திற்கு முன்பு 2025 செப்டம்பர் 8-ல் ஒரு சவரன் ரூ.79,760-க்கு விற்பனையானது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.137-க்கு விற்பனையானது.

2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியான ஏற்றத்தைக் கண்டது. 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் இந்த ஏற்றம் தொடர்ந்து. ஆனால் அதற்குப் பிறகு மிகப்பெரிய அளவில் ஏற்றத்தையோ அல்லது இறக்கத்தையோ சந்திக்கவில்லை. ஒருநாள் விலை ஏறினால், மறுநாள் குறைகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் தங்த்தின் விலை ரூ.1 லட்சத்துக்கு கீழே வருமா என்பது மட்டும் தான் இல்லத்தரசிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
#BREAKING: இனி சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு கிடையாது - அமைச்சர் லோகேஷ்..!
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com