#BREAKING: பெண்களுக்கு பம்பர் ஆஃபர்.! இலவச சிலிண்டர் + இலவச பஸ்.! இறங்கி அடித்த முதல்வர் விஜய்!

இலவச சிலிண்டர்
Free Cylinder + Free Bus
Updated on

தமிழக மக்களுக்கு ஆண்டுதோறும் 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். இதன்படி வருகின்ற பொங்கல் பண்டிகை முதல் அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.4000 கோடியை ஒதுக்கியுள்ளது தமிழக அரசு. இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 1.30 கோடி குடும்பங்கள் பயன்பெறும். ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் வரை வருமானம் ஈட்டும் குடும்பத்தினருக்கு சிலிண்டர் மானியம் வழங்கப்படும்.

ஏற்கனவே பிரதம மந்திரியின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 4 சிலிடண்டர்கள் வழங்கப்படும் நிலையில், மாநில அரசின் இந்த அறிவிப்பு பெண்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களுக்கு ஆறு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையின் போது தவெக தலைவர் விஜய் தெரிவித்து இருந்தார். இதன்படி தமிழக முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் ஜோசப் விஜய் இன்று சட்டசபையில் இல்லத்தரசிகளுக்கு மூன்று சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று சிலிண்டருக்கான விலை வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
செம ஷாக்.!! ரூ.1.20 லட்சத்தைக் கடந்தது தங்கம் விலை.!
இலவச சிலிண்டர்

பெண்களுக்கு ஜாக்பாட்:

இன்றைய நாள் தமிழக பெண்களுக்கு ஜாக்பாட்டாக அமைந்துள்ளது. பெண்களுக்கு உதவும் வகையில் விதி எண் 110-ன் கீழ் 2 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் முதல்வர் விஜய். ஒருபறும் 3 சிலிண்டர்கள் இலவசம் என்றால், மறுபுறம் மகளிர் வெற்றிப் பயணம் இலவசப் பேருந்து சேவை விரிவாக்கம் செய்யப்படும் என அறிவித்துள்ளார் முதல்வர் விஜய்.

இதன்படி பொங்கல் பண்டிகை முதல் 3 சிலிண்டர்கள் இலவசம் என்ற அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம் தொடங்கப்பட உள்ளது. அதேபோல் மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி முதல் மகளிர் வெற்றிப் பயணம் இலவசப் பேருந்து சேவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

இத்திட்டத்தின்படி சாதாரண பேருந்துகள் மட்டுமின்றி புறநநகர, நகர்ப் பகுதிகளில் இயக்கப்படும் டீலக்ஸ் உள்ளிட்ட பல்வகையான பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்க முடியும். இந்தத் திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.6,000 கோடி செலவாகும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

பரந்தூர் மக்களுக்கு நல்ல செய்தி:

நீண்ட காலமாக பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட வேண்டும் என அரசுக்கு எதிராக போராடி வந்த மக்களுக்கு நற்செய்தியை அறிவித்துள்ளார் முதல்வர் விஜய். இதன்படி பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் எனவும், பரந்தூர் மக்களுக்கு உறுதுணையாக நான் இருப்பேன் எனவும் முதலமைச்சர் விஜய் வாக்குறுதி அளித்துள்ளார். இதன்மூலம் பரந்தூர் மக்களின் போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய விமான நிலையம் அமைக்க வேறு இடம் தேர்வு செய்யப்பட உள்ளது. மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து, 5வது விமான முனையம் அமைக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

CM Vijay
Vijay
இதையும் படியுங்கள்:
புதிய வசதி..! இனி கேஸ் சிலிண்டர் நிறுவனத்தை எளிதில் மாற்ற முடியும்..!
இலவச சிலிண்டர்

பெண்களுக்கு இலவச பயணம் அளிக்கும் பேருந்து திட்டத்தை விரிவாக்கம் செய்யும் நிலையில், நாளை ஆகஸ்ட் 25 ஆம் தேதி அன்று 750 புதிய மின்சார பேருந்துகளின் இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய். இந்தப் பேருந்துகள் பெரம்பூர், ஆவடி மற்றும் ஆலந்தூர் உள்ளிட்ட பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com